நேபாள-திபெத்தியப் போர்


நேபாள-திபெத்தியப் போர் (Nepalese–Tibetan War) (நேபாளி: नेपाल-भोट युध्द) சீனாவின் சிங் பேரரசின் கீழ் இருந்த திபெத் இராச்சியத்தில் நுழைந்த நேபாளப் படைகளுக்கும், திபெத் அரசுப் படைகளுக்கும், 1855 - 1856 முடிய நடைபெற்ற போராகும். இப்போரின் முடிவில் நேபாளப் படைகள் திபெத்தியப் படைகளை வென்றது. [1]போரின் முடிவில் இருதரப்பும் தபதாலி உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டனர்.

நேபாள திபெத்தியப் போர்
Nepalese-Tibetan War
நாள் ஏப்ரல் 1855 - மார்ச் 1856
இடம் திபெத்
நேபாளிகளுக்கு வெற்றி
  • தபதாலி உடன்படிக்கை
பிரிவினர்
சிங் அரசமரபு நேபாள இராச்சியம்
தளபதிகள், தலைவர்கள்
சேத்தியா கஜி ஜங் பகதூர் ராணா
பம் பகதூர் குன்வர்
தீர் சும்செர் குன்வர்
கிருஷ்ண தோஜ் குன்வர்
பிரிதிவி டோஜ் குன்வர்
பலம்
98,000 34,906
இழப்புகள்
அறியப்படவில்லை அறியப்படவில்லை

போரின் பின்னணி

தொகு

1792ல் நடைபெற்ற சீன - நேபாளப் போரின் முடிவில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி, திபெத் விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்து உரிமையை நேபாள இராச்சியம் இழந்ததுடன், [2] [சிங் அரசமரபு|சிங் பேரசிற்கு திறை செலுத்தும் ஒரு சிற்றரசாக மாறியது நேபாளம்.

பின்னர் சில காலம் கழித்து சிங் பேரரசில் நடைபெற்ற தைப்பிங் கலவரத்தால், குயிங் பேரரசு, திபெத் மீதான தன் ஆதிக்கத்தை இழக்கத் தொடங்கியது. இந்நிலையைப் நன்கு பயன்படுத்திக் கொண்டு, திபெத்தின் தலைநகரான லாசாவில் நேபாள நாட்டு வணிகர்கள் அவமதிக்கப்படுகின்றனர் என்றும், நேபாள எல்லையில் சீனர்கள் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கின்றனர் எனக் குற்றம் சாட்டி, நேபாள பிரதம அமைச்சர் ஜங் பகதூர் ராணா தலைமையிலான நேபாளப் படைகள் ஏப்ரல் 1855 - மார்ச் 1856 கால கட்டங்களில் திபெத்தை முற்றுகையிட்டு, தன் கட்டுக்குள் கொண்டுவந்தது. [2]

தபதாலி உடன்படிக்கை

தொகு

போரின் முடிவில் இருதரப்பும் செய்து கொண்ட தபாதாலி உடன்படிக்கையின் படி, போர் இழப்பீட்டிற்காக திபெத், நேபாள இராச்சியத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் கப்பம் செலுத்த ஒப்புக் கொண்டது. லாசாவில் நேபாள வணிக மையம் அமைத்துக் கொள்ள ஒப்புக்கொள்ளப்பட்டது. [3]

இதனையும் காண்க

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-12-20. பார்க்கப்பட்ட நாள் 2018-11-03.
  2. 2.0 2.1 Rose 1971, p. 108
  3. Page 1907, p. 78

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேபாள-திபெத்தியப்_போர்&oldid=3711192" இலிருந்து மீள்விக்கப்பட்டது