நேபாள ராணி கோமல்

நேபாள ராணி கோமல் ( Queen Komal of Nepal ) ( நேபாளி: कोमल राज्य लक्ष्मी देवी शाह ) (பிறப்பு 18 பிப்ரவரி 1951) நேபாள ராச்சியத்தின் முன்னாள் மன்னர் ஞானேந்திராவின் மனைவியாவார். 28 மே 2008 அன்று முடியாட்சி ஒழிக்கப்படுவதற்கு முன்பு நேபாளத்தின் கடைசி ராணி மனைவியாக இருந்தார்.

ராணி கோமல்
1985 களில் ராணி கோமல்
நேபாள ராச்சியத்தின் ராணி
Tenure4 ஜூன் 2001 – 28 மே 2008
முடிசூட்டுதல்4 ஜூன் 2001
பிறப்பு18 பெப்ரவரி 1951 (1951-02-18) (அகவை 73)
பாக்மதி, காட்மாண்டு, நேபாளம்
துணைவர்ஞானேந்திரா
குழந்தைகளின்
பெயர்கள்
இளவரசர் பராஸ்
இளவரசி பிராணா
பெயர்கள்
கோமல் ராஜ்ய லட்சுமி தேவி ஷா
மரபுராணா (பிறப்பால்)
ஷா (திருமணம் மூலம்)
தந்தைகேந்திரா சம்சர் ஜங் பகதூர் ராணா
தாய்சிறீ ராஜ்ய லட்சுமி தேவி ஷா
மதம்இந்து சமயம்

வாழ்க்கை தொகு

கோமல், காட்மாண்டுவிலுள்ள பாக்மதியில் ராணா குடும்பத்தில் கேந்திரா சம்சர் ஜங் பகதூர் ராணா (1927-1982) மற்றும் அவரது மனைவி சிறீ ராஜ்ய லட்சுமி தேவி ஷா (1928-2005) ஆகியோரின் மகளாகப் பிறந்தார். ஜவலகேல் செயின்ட் மேரிஸ் பள்ளி, இந்தியாவின் குர்சியோங் செயின்ட் ஹெலன் கான்வென்ட், காட்மாண்டுவின் கலாநிதி சங்கீத மகாவித்யாலயா, ஆகியவற்றில் கல்வி பயின்றார்.

பதவி தொகு

கோமலின் மூத்த சகோதரி ஐஸ்வர்யா ஞானேந்திராவின் சகோதரரான நேபாள மன்னர் பிரேந்திராவை மணந்தார். ஜூன் 1, 2001 அன்று நடந்த நேபாள அரசகுடும்பத்தினர் படுகொலையில் ஐஸ்வர்யா கொல்லப்பட்டார். அரண்மனையில் நடந்த துப்பாக்கிச் சூட்ட்டின் விளைவாக கோமல் குண்டு காயம் அடைந்து நான்கு வாரங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தார்.

படுகொலையின் விளைவாக, கோமலின் கணவர் ஞானேந்திரா, மன்னர் பிரேந்திரா, பட்டத்து இளவரசர் திபெந்திரா, இளவரசர் நீரஜன் ஆகியோரின் மரணத்தைத் தொடர்ந்து அரியணை ஏறினார்.

கோமலின் தங்கை பிரேக்ஷ்யாவும் ஷா வம்சத்தில் திருமணம் செய்துகொண்டார். ஞானேந்திரா மற்றும் அரண்மனைப் படுகொலையில் கொல்லப்பட்ட பிரேந்திராவின் சகோதரர் இளவரசர் திரேந்திரா ஆகியோரை மணந்தார். அவர்கள் 1991 இல் விவாகரத்து செய்தனர். இளவரசி பிரேக்ஷ்யா 12 நவம்பர் 2001 அன்று ஒரு உலங்கு வானூர்தி விபத்தில் கொல்லப்பட்டார்.

ராணி கோமல் தனது இரண்டாவது உறவினரான நேபாள இளவரசர் ஞானேந்திராவை 1 மே 1970 அன்று காட்மாண்டுவில் திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்:

மன்னராட்சி ஒழிப்பு தொகு

நேபாள பாராளுமன்றம் 28 டிசம்பர் 2007 அன்று முன்னாள் மாவோயிச கிளர்ச்சியாளர்களுடனான சமாதான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 270-3 முடியாட்சியை ஒழிப்பதற்கு ஆதரவாக வாக்களித்தது. [1]

28 மே 2008 அன்று, முடியாட்சி அதிகாரப்பூர்வமாக ஒழிக்கப்பட்டது. அதற்கு பதிலாக மதச்சார்பற்ற கூட்டாட்சி குடியரசானது. [2]

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேபாள_ராணி_கோமல்&oldid=3683498" இலிருந்து மீள்விக்கப்பட்டது