நேமம் ஐராவதேசுவரர் கோயில்

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

நேமம் ஐராவதேசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு வட்டத்தில் உள்ள ஒரு தேவார வைப்புத்தலமாகும். [1]

நேமம் ஐராவதேசுவரர் கோயில்
நேமம் ஐராவதேசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
நேமம் ஐராவதேசுவரர் கோயில்
நேமம் ஐராவதேசுவரர் கோயில்
ஐராவதேசுவரர் கோயில், நேமம், தஞ்சாவூர், தமிழ்நாடு
ஆள்கூறுகள்:10°50′56″N 78°55′50″E / 10.8489°N 78.9305°E / 10.8489; 78.9305
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:நேமம்
சட்டமன்றத் தொகுதி:திருவையாறு
மக்களவைத் தொகுதி:தஞ்சாவூர்
ஏற்றம்:78.51 m (258 அடி)
கோயில் தகவல்
மூலவர்:ஐராவதேசுவரர்
தாயார்:வேத நாயகி
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

அமைவிடம்

தொகு

கும்பகோணம்-தஞ்சாவூர் சாலையில் அய்யம்பேட்டை, கண்டியூரை அடுத்து திருக்காட்டுப்பள்ளி வந்து அங்கிருந்து தோகூர் சாலையில் நேமம் உள்ளது. அங்கு இக்கோயில் உள்ளது.

இறைவன்,இறைவி

தொகு

இங்குள்ள இறைவன் ஐராவதேசுவரர் ஆவார். இறைவி அலங்காரநாயகி ஆவார். [1]

பிற சன்னதிகள்

தொகு

முன் மண்டபத்தில் வலது புறம் இறைவி சன்னதி உள்ளது. திருச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, பைரவர், நவக்கிரகங்கள், சனி பகவான் சன்னதிகள் உள்ளன. [1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009

வெளி இணைப்புகள்

தொகு