நேரு அறிவியல் மையம்

நேரு அறிவியல் மையம் (Nehru Science Centre) என்பது இந்தியாவின் மிகப்பெரிய ஊடாடும் அறிவியல் மையமாகும். இது மும்பையின் வொர்லியில் அமைந்துள்ளது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பெயர் இந்த மையத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. 1977 ஆம் ஆண்டில், மையம் 'ஒளி மற்றும் பார்வை' கண்காட்சியுடன் தொடங்கியது, பின்னர் 1979 ஆம் ஆண்டில் ஒரு அறிவியல் பூங்கா கட்டப்பட்டது. நவம்பர் 11, 1985 ஆம் நாளன்று அப்போதைய இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியால் இது பொதுமக்களுக்குத் திறந்து வைக்கப்பட்டது.[2][3]

நேரு அறிவியல் மையம்
Map
நிறுவப்பட்டது1985
அமைவிடம்இந்தியா மும்பை, இந்தியா
ஆள்கூற்று18°59′26″N 72°49′07″E / 18.990633°N 72.818669°E / 18.990633; 72.818669
வகைஅறிவியல் மையம், கல்வி மையம்
வருனர்களின் எண்ணிக்கை2908765 [As on 31 மார்ச் 2018][1]
இயக்குனர்எஸ்.எம்.கேனெட்
வலைத்தளம்nehrusciencecentre.gov.in
நேரு அறிவியல் மையம்

அறுபதுகளின் பிற்பகுதியில் ஒரு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகமாக முதன்முதலில் வடிவம் பெற்ற நேரு அறிவியல் மையம், 1977 ஆம் ஆண்டில், இந்தியாவின் மிகப்பெரிய ஊடாடும் அறிவியல் மையம் என்ற வடிவத்தை எடுத்தது. இதுபோன்ற பொது நிறுவனங்களின் உலக போக்குகளுக்கு ஈடுகட்டும் வகையில் இந்த மையம் அமைந்தது. 1977 ஆம் ஆண்டில் இந்த மையத்தில் முதன்முதலாக `லைட் அண்ட் சைட் ' என்ற கண்காட்சி நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 1979 ஆம் ஆண்டில் உலகின் முதல் அறிவியல் பூங்கா, குழந்தையின் சர்வதேச ஆண்டில். நவம்பர் 11, 1985 ஆம் நாளன்று நடத்தப்பட்டது. முழு அளவிலான அறிவியல் மையம், அப்போதைய இந்தியப் பிரதமராக இருந்த மறைந்த ராஜீவ் காந்தியால் பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்பட்டது.

நாட்டின் மிகப்பெரிய அறிவியல் மையமான நேரு அறிவியல் மையத்தில் 8 ஏக்கர்கள் (32,000 m2) அளவில் அமைந்துள்ளது. இதில் பல வகையான தாவரங்கள், மரங்கள் போன்றவை உள்ளன. இந்த அறிவியல் பூங்காவில், ஆற்றல், ஒலி, இயக்கவியல், போக்குவரத்து போன்றவற்றைக் கொண்ட 500 க்கும் மேற்பட்ட ஊடாடும் அறிவியல் கண்காட்சிப் பொருள்கள் நிறுவப்பட்டுள்ளன. அறிவியல் அறிவியல் மையத்தின் கட்டிடம், அதன் தனித்துவமான கட்டிடக்கலையைக் கொண்டு அமைந்துள்ளது. அங்கு பல்வேறு கருப்பொருள்களில் அமைந்த பல நிரந்தர அறிவியல் காட்சிப்பொருள்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மும்பையின் நேரு அறிவியல் மையத்தின் பெற்றோர் அமைப்பான தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள் சபையானது (என்.சி.எஸ்.எம்), நாடு முழுவதும் உள்ள 25 அறிவியல் மையங்கள் / அருங்காட்சியகங்களுடன், சிறந்த தரமான உள்கட்டமைப்பு மற்றும் திறமையான மனிதவளத்தைக் கொண்டு செயல்பட்டு வருவதோடு பிற தொடர்புடைய கல்வித் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளைக் கொண்டு இயங்கி வருகிறது.

ஐந்து மையங்கள் தொகு

இந்த மையமானது தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள் சபையில் உள்ள நான்கு தேசிய அளவிலான அறிவியல் அருங்காட்சியகங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இது மேற்கு மண்டல தலைமையகமாக இயங்கி வருகிறது. இது நாக்பூர், காலிகட், போபால், தரம்பூர் மற்றும் கோவா ஆகிய இடங்களில் ஐந்து அறிவியல் மையங்களுடன் செயல்படுகிறது, இது இந்தியாவின் மேற்கு பகுதியில் உள்ள மக்களுக்கு உதவுகிறது. அதன் செயல்பாடுகளின் ஒரு கூறாக, இந்த மையம் வழக்கமாக பொதுமக்கள் மற்றும் குறிப்பாக மாணவர்களின் நலனுக்காக விரிவான அறிவியல் கல்வித் திட்டங்கள், செயல்பாடுகளைக் கொண்டுள்ளதோடு போட்டிகளையும் ஏற்பாடு செய்து நடத்தி செய்கிறது.

முன்னாள் இயக்குநர்கள்
  • அமலேண்டு போஸ்
  • சரோஜ் கோஸ்
  • ஆர்.எம்.சக்ரவர்த்தி
  • ஜி.எஸ்.ரவுத்தேலா
  • எஸ்.எம்.கெனெட்
  • ஏ.எஸ்.மனேகர்

ஒவ்வொரு ஆண்டும், இந்த மையத்தை 750,000 க்கும் மேற்பட்ட மக்கள் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.

500 க்கும் மேற்பட்ட கை மற்றும் ஊடாடும் அறிவியல் கண்காட்சிப் பொருள்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பல்வேறு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளன. மேலும் இங்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் சில வரலாற்று கலைப்பொருட்களின் சேகரிப்புகளும் உள்ளன. 3டி எனப்படுகின்ற முப்பரிமாண அறிவியல் கண்காட்சியும் மையத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

பார்வையாளர்கள் நேரம் தொகு

இந்த அறிவியல் மையம் இரண்டு நாட்கள் (ஹோலியின் 2 வது நாளில் ஒன்றான துலாந்தி அல்லது வண்ணங்களின் நாள் மற்றும் இரண்டாவது நாள் தீபாவளி.) தவிர ஆண்டு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறைகள் உட்பட ஒவ்வொரு நாளும் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை பொதுமக்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேரு_அறிவியல்_மையம்&oldid=3718295" இலிருந்து மீள்விக்கப்பட்டது