நைடோனு அங்காமி
நைடோனு அங்காமி (Neidonuo Angami) என்பவர் ஒரு இந்திய சமூக செயற்பாட்டாளர் மற்றும் நாகா அனைனையர் அமைப்பின், நிறுவனர்களில் ஒருவராவார். இந்த அமைப்பு நாகாலாந்தில், சமூக பிரச்சினைகளிலிருந்து மீட்கும் நோக்குடன் வேலை செய்யும் அரசு சார்பற்ற அமைப்பு ஆகும். .[1] இவர் 2000 இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரைக்கப்பட்டவர்.[2][3] இவருக்கு இந்திய அரசின் நானாகாவது பெரிய விருதான பத்மசிறீ விருது 2000, ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. .[4]
நைடோனு அங்காமி | |
---|---|
பிறப்பு | அக்டோபர் 1 இந்தியா நாகாலாந்து, கோகிமா |
பணி | சமூக செயற்பாட்டாளர் |
விருதுகள் | பத்மசிறீ |
வாழ்க்கை
தொகுநைடோனு அங்காமி 1960 அக்டோபர் 1 அன்று [5] நாகாலாந்தின் தலைநகரான கோகிமாவில், பிறந்தவர்.. இவரது ஆறுவயதில் அரசு பணியில் இருந்த இவரது தந்தை கிளர்சியாளர்களின் வன்முறையால் இறந்தார். இதன் பிறகு இவரது தாயாரால் வளர்க்கப்பட்டார்.[6] படித்து, காவல்துறை உதவி ஆய்வாளர் பணியில் சேர்ந்தார். சமூக சேவையில் ஈடுபாடு கொண்டு, காவல்துறை பதவியை விட்டு விலகி, பள்ளி ஆசிரியராக ஆனார். 1984 ஆம் ஆண்டு, ‘நாகாலாந்து அன்னையர் சங்கம்' என்ற அமைப்பை தோற்றுவித்த நைடோனு, மது, போதைப் பொருட்களுக்கு எதிராக தீவிரமாகப் போராடி, போதையின் கோரப் பிடியில் இருந்து, தம் இன மக்களை விடுவிப்பதில் பெரும் வெற்றி கண்டார். இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு உள்ள நிலையில் நாகாலாந்து மாநிலத்திலும், ‘உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு பிரதிநிதித் துவம்' என்கிற கோட்பாட்டில் முனைந்து இறங்கிய அன்னையர் சங்கம், நீதிமன்றத்தை 2012 இல் இருந்து 2016 வரை நான்கு ஆண்டுகள் போராடியதன் பலனாக இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு உச்ச நீதிமன்றம், மகளிருக்கு 33% ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், 16 ஆண்டுகளுக்குப் பின், நாகலாந்து மாநிலத்தில், நகராட்சி அமைப்புகளுக்கு 2017 பிப்ரவரி 1 அன்று தேர்தல்கள் நடைபெற இருந்தன. நாகாலாந்து மக்களின் பாரம்பரிய மரபுசார் வழிமுறைகளுக்கு மதிப்பு அளிக்கிற வகையில், சாசனத்தின் பிரிவு 371ஏ, இம்மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியது. இதன்படி, நாகாலாந்து மக்களின் பாரம்பரியம் தொடர்புடைய எந்தச் சட்டமும், நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டாலும் கூட, மாநில சட்டப் பேரவையும் அங்கீகரிக்க வேண்டும். நகராட்சி அமைப்புகளில் மகளிருக் கான ஒதுக்கீடு, தங்களின் பாரம்பரிய மரபுப்படி, ஏற்றுக்கொள்ள முடியாதது என்று, பழங்குடியினர் கூட்டு இயக்கம் கூறுகிறது. தங்கள் மாநில ஆரசு தங்களை வஞ்சித்து விட்டதாகவும், பிரிவு 371ஏ வழங்கிய சிறப்பு அந்தஸ்துக்கு எதிராக நீதிமன்றத் தீர்ப்பு அமைந்து இருப்பதாகவும் இவர்கள் கருதுகிறார்கள். இதனால் மாநிலத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டு பல அலுவலகங்கள் தீக்கிறையானது. பலர துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாயினர். மாநிலமுதல்வர் பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கையும் வைக்கப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தல் இரத்து செய்யப்பட்டது.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "TOI". TOI. January 10, 2013. பார்க்கப்பட்ட நாள் December 29, 2014.
- ↑ "World Wide Asian Eurasian Human Rights Forum". World Wide Asian Eurasian Human Rights Forum. 2014. Archived from the original on மார்ச் 4, 2016. பார்க்கப்பட்ட நாள் December 29, 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "WWAEHRF Profile". WWAEHRF. 11 March 2008. Archived from the original on 16 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் December 29, 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Padma Awards" (PDF). Padma Awards. 2014. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் November 11, 2014.
- ↑ "India Together". India Together. 18 November 2005. பார்க்கப்பட்ட நாள் December 29, 2014.
- ↑ Malashri Lal, Sanjukta Dasgupta (2007). The Indian Family in Transition: Reading Literary and Cultural Texts. SAGE Publications India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788132101635.
- ↑ "'தனித்தன்மை' காக்கப் போராடும் நாகாலாந்து!". செய்திக் கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 7 பெப்ரவரி 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)