நையோபியம் ஈராக்சைடு

நையோபியம் ஈராக்சைடு ( Niobium dioxide) என்பது NbO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நீலக்கருப்பில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மத்தில் NbO1.94-NbO2.09[1] என்ற அளவுகளில் விகிதவியல் அல்லாத ஓர் இயைபுச் சேர்க்கையில் தனிமங்கள் இணைந்துள்ளன. Nb2O5 உடன் ஐதரசன் வாயுவைச் சேர்த்து 800 முதல் 1350 °செ [1]வெப்பநிலையில் வினைபுரிந்து நையோபியம் ஈராக்சைடு உருவாகிறது. Nb2O5 உடன் நையோபியம் தூளைச் சேர்த்து 1100°செ வெப்பநிலையில் வினைபுரியச் செய்து தயாரிப்பது ஒரு மாற்று வழிமுறையாகும்.[2]

நையோபியம் ஈராக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
நையோபியம்(IV) ஆக்சைடு, நையோபியம் ஈராக்சைடு
வேறு பெயர்கள்
நையோபியம்(IV) ஆக்சைடு, கொலம்பியம் ஈராக்சைடு
இனங்காட்டிகள்
12034-59-2 Y
EC number 234-809-7
InChI
  • InChI=1S/Nb.2O
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82839
  • O=[Nb]=O
பண்புகள்
NbO2
வாய்ப்பாட்டு எடை 124.91 கி/மோல்
தோற்றம் நீலக்கருப்பு
உருகுநிலை 1,915 °C (3,479 °F; 2,188 K)
கட்டமைப்பு
படிக அமைப்பு நாற்கோணம், tI96
புறவெளித் தொகுதி I41/a, No. 88
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

அறை வெப்பநிலை மற்றும் உயர் வெப்பநிலைகளில் , நையோபியம் ஈராக்சைடானது குறுகிய Nb-Nb இடைவெளியுள்ள Nb-Nb பிணைப்புகளாலான நாற்கோண, உரூத்தைல் அமைப்புடன் காணப்படுகிறது[3]. குறுகிய Nb-Nb இடைவெளியுள்ள Nb-Nb பிணைப்புகளாலான உரூத்தைல் அமைப்பில் ஒன்றும் சிர்க்கோனியம் ஆக்சைடு கனிமம் பேடெலியைட்டு தொடர்பான அமைப்பில் ஒன்றுமாக உயர் அழுத்த நிலைகளில் இரண்டு வேறுபட்ட அமைப்புகள் அறியப்படுகின்றன.[4]

NbO2 தண்ணீரில் கரையாது. வலிமையான ஆக்சிசன் ஒடுக்கியாகச் செயல்பட்டு கார்பன் டை ஆக்சைடை கார்பனாகவும் , கந்தக டை ஆக்சசைடை கந்தகமாகவும் குறைக்கிறது[1]. நையோபியம் உலோகத்தை தொழிற்சாலைகளில் தயாரிக்கும்[1] பரணிடப்பட்டது 2008-08-29 at the வந்தவழி இயந்திரம், செயல்முறையில் Nb2O5 சேர்மத்தை ஐதரசன் ஒடுக்கம் [5]செய்யும் போது நையோபியம் ஈராக்சைடு ஓர் இடைநிலை விளைபொருளாக உருவாகிறது. தொடர்ந்து NbO2மக்னீசியம் ஆவியுடன் வினைபுரிந்து நையோபியம் உலோகம் உருவாகிறது[6].

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 C. K. Gupta, A. K. Suri, S Gupta, K Gupta (1994), Extractive Metallurgy of Niobium, CRC Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-6071-4
  2. Pradyot Patnaik (2002), Handbook of Inorganic Chemicals,McGraw-Hill Professional, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-049439-8
  3. Wells A.F. (1984) Structural Inorganic Chemistry 5th edition Oxford Science Publications பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-855370-6
  4. Bolzan, A; Fong, Celesta; Kennedy, Brendan J.; Howard, Christopher J. (1994). "A Powder Neutron Diffraction Study of Semiconducting and Metallic Niobium Dioxide". Journal of Solid State Chemistry 113: 9. doi:10.1006/jssc.1994.1334. Bibcode: 1994JSSCh.113....9B. 
  5. Patent EP1524252, Sintered bodies based on niobium suboxide, Schnitter C, Wötting G
  6. Method for producing tantallum/niobium metal powders by the reduction of their oxides by gaseous magnesium, US patent 6171363 (2001), Shekhter L.N., Tripp T.B., Lanin L.L. (H. C. Starck, Inc.)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நையோபியம்_ஈராக்சைடு&oldid=3956501" இலிருந்து மீள்விக்கப்பட்டது