நையோபியம் பாசுபைடு
நையோபியம் பாசுபைடு (Niobium phosphide) என்பது NbP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] நையோபியமும் பாசுபரசும் சேர்ந்து வினைபுரிந்து நையோபியம் பாசுபைடு உருவாகிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பாசுபேனைலிடின்நையோபியம்
| |
இனங்காட்டிகள் | |
12034-66-1 | |
ChemSpider | 74753 |
EC number | 234-810-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82840 |
| |
பண்புகள் | |
NbP | |
வாய்ப்பாட்டு எடை | 123.88 |
தோற்றம் | கருஞ்சாம்பல் படிகங்கள் |
அடர்த்தி | 6,48 கி/செ.மீ3 |
கரையாது | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நாற்கோணகம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுநையோபியத்தையும் சிவப்பு பாசுபரசையும் சேர்த்து சுட்டால் நையோபியம் பாசுபைடு உருவாகிறது.
இயற்பியல் பண்புகள்
தொகுஇச்சேர்மம் இடத்தியல் மற்றும் வழக்கமான மின்னணு நிலைகளை இணைக்கும் ஒரு தனித்துவமான பொருளாகும். இதன் அதிவிரைவு எலக்ட்ரான்கள் மிகப் பெரிய காந்தத் தன்மையைக் காட்டுகின்றன. எனவே NbP புதிய மின்னணுக் கூறுகளில் பயன்படுத்த ஏற்றதாக இருக்கும்.[2]
நையோபியம் பாசுபைடு நாற்கோணக வடிவத்தில் I 41md என்ற இடக்குழுவில் a = 0.3334 நானோமீட்டர், c = 1.1378 நானோமீட்டர், Z = 4 என்ற அளவுருக்களில் கருஞ்சாம்பல் நிறப் படிகங்களாக நையோபியம் பாசுபைடு உருவாகிறது.[3]
தண்ணீரில் இது கரையாது.
டாண்டலம் ஆர்சனைடு போல நையோபியம் பாசுபைடு ஒர் அரை உலோகமாக உள்ளது.[4][5]
பயன்
தொகுஅதிக சக்தி, அதிக அதிர்வெண் பயன்பாடுகள் மற்றும் சீரொளி இருமுனையங்களில் பயன்படுத்தப்படும் ஒரு குறைகடத்தியாக லிதேத்தியம் பாசுபைடு பயன்படுகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Niobium Phosphide" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
- ↑ Chen, Yulin (July 13, 2015). "Niobium Phosphide (NbP) Holds Promise for New Magnetoresistance Components". Power Electronics. பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
- ↑ Lomnits’ka, Ya. F.; Shupars’ka, A. I. (1 July 2006). "Reactions of niobium and tungsten with phosphorus" (in en). Powder Metallurgy and Metal Ceramics 45 (7–8): 361–364. doi:10.1007/s11106-006-0090-1. https://link.springer.com/article/10.1007%2Fs11106-006-0090-1. பார்த்த நாள்: 15 December 2021.
- ↑ Xu, Di-Fei; Du, Yong-Ping; Wang, Zhen; Li, Yu-Peng; Niu, Xiao-Hai; Yao, Qi; Pavel, Dudin; Xu, Zhu-An et al. (18 September 2015). "Observation of Fermi Arcs in Non-Centrosymmetric Weyl Semi-Metal Candidate NbP" (in en). Chinese Physics Letters 32 (10): 107101. doi:10.1088/0256-307x/32/10/107101. Bibcode: 2015ChPhL..32j7101X. https://iopscience.iop.org/article/10.1088/0256-307X/32/10/107101. பார்த்த நாள்: 15 December 2021.
- ↑ Fu, Yan-Long; Sang, Hai-Bo; Cheng, Wei; Zhang, Feng-Shou (1 September 2020). "Topological properties after light ion irradiation on Weyl semimetal niobium phosphide from first principles" (in en). Materials Today Communications 24: 100939. doi:10.1016/j.mtcomm.2020.100939. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S2352492819312772. பார்த்த நாள்: 15 December 2021.