நையோபியம் பெர்குளோரேட்டு

வேதிச் சேர்மம்


நையோபியம் பெர்குளோரேட்டு (Niobium perchlorate) என்பது Nb(ClO4)5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் ஒரு நீருறிஞ்சும் படிகத்திண்மமாக நையோபியம் பெர்குளோரேட்டு காணப்படுகிறது. ஈரக் காற்று அல்லது தண்ணீருடன் உடனடியாக வினையில் ஈடுபட்டு நையோபியம்(V) ஆக்சைடை உருவாக்குகிறது.[1][2]

நையோபியம் பெர்குளோரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
  • நையோபியம்(V) பெர்குளோரேட்டு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/5ClHO4.Nb/c5*2-1(3,4)5;/h5*(H,2,3,4,5);/q;;;;;+5/p-5
    Key: CVPZOZZKOZLDIB-UHFFFAOYSA-I
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • O=Cl(=O)(=O)O[Nb](OCl(=O)(=O)=O)(OCl(=O)(=O)=O)(OCl(=O)(=O)=O)OCl(=O)(=O)=O
பண்புகள்
Nb(ClO4)5
வாய்ப்பாட்டு எடை 590.16 கி/மோல்
தோற்றம் வெண் படிகங்கள்
உருகுநிலை 70 °C (158 °F; 343 K)[1] (சிதைவடையும்)
வினைபுரியும்[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் வனேடைல் பெர்குளோரேட்டு
தாண்டலம்(V) பெர்குளோரேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

நையோபியம் பெண்டாகுளோரைடுடன் நீரற்ற பெர்குளோரிக்கு அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்து நையோபியம் பெர்குளோரேட்டை தயாரிக்கலாம்:[1]

NbCl5 + 5 HClO4 → Nb(ClO4)5 + 5 HCl

வினைகள் தொகு

நையோபியம் பெர்குளோரேட்டு 70 பாகை செல்சியசு வெப்பநிலையில் சிதைவடைந்து நையோபைல் பெர்குளோரேட்டாக மாறுகிறது. இவ்வினையில் இருகுளோரின் ஏழாக்சைடு வாயு வெளியிடப்படுகிறது:[1]

Nb(ClO4)5 → NbO(ClO4)3 + Cl2O7

நையோபைல் பெர்குளோரேட்டு 115 பாகை செல்சியசு வெப்பநிலையில் மேலும் சிதைவடைந்து NbO2ClO4 சேர்மத்தைக் கொடுக்கும். இது 220 பாகை செல்சியசு வெப்பநிலையில் மேலும் சிதைவடைந்து நையோபியம் பெண்டாக்சைடைக் கொடுக்கிறது.[1]

சீசியம் பெர்குளோரேட்டு மற்றும் நையோபியம் பெர்குளோரேட்டு போன்ற பெர்குளோரேட்டுகளுடன் நீரற்ற பெர்குளோரிக் அமிலத்துடன் 0 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிவதால் [Nb(ClO4)6 மற்றும் Cs2[Nb(ClO4)7 போன்ற பெர்குளோரேட்டோநையோபேட்டுகள் உருவாகின்றன. [1]

கட்டமைப்பு தொகு

நியோபியம் பெர்குளோரேட்டின் கட்டமைப்பு ஒற்றை-படிக எக்சுகதிர் விளிம்புவளைவு ஆய்வு மூலம் தெளிவுபடுத்தப்படவில்லை என்றாலும், அகச்சிவப்பு மற்றும் தூள் எக்சுகதிர் விளிம்புவளைவு ஆய்வு மூலம் தெளிவுபடுத்தப்பட்டது. இதன்படி நையோபியம் பெர்குளோரேட்டில் ஒற்றையீதல் பிணைப்பு மற்றும் ஈரீதல்பிணைப்பு ஈந்தணைவிகள் இரண்டும் உள்ளன.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 Babaeva, V. P.; Rosolovskij, V. Ya. (1984). "Anhydrous niobium(V) perchlorate and perchloratoniobates" (in en). Russian Journal of Inorganic Chemistry 29 (11): 1566–1568. https://www.osti.gov/etdeweb/biblio/5623736. பார்த்த நாள்: 5 December 2023. 
  2. Berg, Rolf W. (1992). "Progress in Niobium and Tantalum coordination chemistry". Coordination Chemistry Reviews 113: 1–130. doi:10.1016/0010-8545(92)80074-2. https://archive.org/details/sim_coordination-chemistry-reviews_1992-03_113/page/n10.