நொச்சிகுளம்

தென்காசி மாவட்ட சிற்றூர்

நொச்சிகுளம் (Nochikulam) என்பது தமிழ்நாட்டின், தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூராகும். இது சங்கரன்கோவிலுக்கு மேற்கே 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 438.44 ஹெக்டேர். மக்கள் தொகை 2011 கணக்கெடுப்பின்படி 1213 ஆகும். இதில் ஆண்கள் 618 பேரும் பெண்கள் 595 பேரும் ஆவர். இந்த ஊரில் 347 வீடுகள் உள்ளன.[1] அருகில் உள்ள இரயில் நிலையம் சங்கரன்கோயில் தொடர்வண்டி நிலையம் (5-6 கி.மீ.தொலைவு). இங்கு அரசு உதவி பெறும் நடுநிலைப்ப்ள்ளி உள்ளது. இங்குள்ள மக்களின் முதன்மையான தொழில் விவசாயம் ஆகும். இங்கு உணவு பயிர்களான நெல், கம்பு, சோளம் முதலியன பயிரிடப்ப்டுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Nochikulam". https://villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 10 அக்டோபர் 2017. {{cite web}}: External link in |publisher= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நொச்சிகுளம்&oldid=3401169" இலிருந்து மீள்விக்கப்பட்டது