நோக்கு கூலி

நோக்கு கூலி (Nokku kooli) என்பது கேரளா மாநிலத்தில் மட்டும் பல்லாண்டுகளாக நடைமுறையில் உள்ள பாரம் தூக்கும் மற்றும் இறக்கும் தொழிலாளர்களின் அரை-சட்டபூர்வமான வேலைப் பண்பாடு ஆகும்.[1] இந்த வேலை முறை கேரளாவின் தொழிற்சங்கங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதற்கு கேரளா அரசியல்வாதிகளின் மறைமுக ஆதரவு உண்டு.[2] கேரளாவில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த சுமை தூக்குபவர்களால் மட்டுமே வாகனங்களிலிருந்து பொருட்களை ஏற்றவோ அல்லது இறக்கவோ முடியும். உரிமையாளர் வேறு நபர்களைக் கொண்டு அப்பணியைச் செய்தால், சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சுமைகளை ஏற்றி அல்லது இறக்குவதை பார்த்துக் கொண்டிருப்பர். இதற்கு நோக்கு கூலியும் (பார்த்துக்கொண்டிருந்ததற்கான கட்டணம்), சுமைகளைத் தொட்டு விட்டு போய்விட்டால் அதற்கு தொடு கூலியும் கண்டிப்பாகக் கேட்டு வசூலிப்பர். ஒரு நிறுவனம், இயந்திரம் வாயிலாக பணி மேற்கொள்ளும் போது தொழிலாளர்கள் பணியிடத்திற்கு வந்து அமர்ந்து ஏழு மணி நேரம் வேடிக்கை பார்த்து, அடாவடியாக சம்பளம் வாங்குவர். இதற்கு பெயர் தான் நோக்கு கூலி [3]

பொதுமக்களின் கோரிக்கையால் இந்த நோக்கு கூலி மற்றும் தொடு கூலி நடைமுறையை 1 மே 2018 அன்று கேரள அரசு தடை செய்து அறித்துள்ளது.[4] [5][6]

மேலும் கேரள உயர் நீதிமன்றம் இந்த சட்ட விதிகளுக்கு முரணான நோக்கு கூலி மற்றும் தொடு கூலி வலுக்கட்டாயமாக பொதுமக்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்களிடம் கேட்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் இட கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.[7]

நோக்கு கூலியால் பொதுமக்கள் படும் அவலங்கள் குறித்து மலையாள எழுத்தாளர் பால் சக்காரியா, நோக்கு கூலியை பின்வரும் எடுத்துக்காட்டுடன் விளக்குகிறார்: நீங்கள் வீட்டுச் சாமான்களை ஓரிடத்திலிருந்து, வேறிடத்திற்கு ஏற்றி, இறக்குகிறீர்கள் எனில் அதற்கு தொழிலாள தோழர்கள் ஏற்ற/இறக்குவதற்கு ஒரு பெரிய தொகையைக் கோருகின்றனர்; எனவே நண்பர்களின் உதவியுடன் அதை நீங்களே செய்ய முடிவு செய்கிறீர்கள். தோழர்கள் தூரத்திலிருந்து பார்க்கிறார்கள்; நீங்கள் ஏற்றி, இறக்கி முடித்தவுடன், அவர்கள் கேட்கும் ஊதியத்தை கொடுக்கும்படி கேட்கிறார்கள். நீங்கள் பணம் செலுத்தவில்லை என்றால், கொஞ்சம் வன்முறையால் நீங்கள் காயப்படுவீர்கள். கேரளாவில் தொழிலாளி வேலை செய்யாவிட்டாலும் அவருக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று கூறுகிறது. அது ஒரு வகையான தொழிலாளர்களின் சொர்க்கம் என காரல் மார்க்ஸ் கூட எதிர்பார்க்கவில்லை. [8]

நோக்குக் கூலி மற்றும் தொடு கூலிக்கு எதிராக கேரள அரசு மற்றும் கேரளா உயர் நீதிமன்றம்]] தடை விதித்தாலும், கேரளா தொழிலாளர்கள், கனரக வாகனகளில் கொண்டுவரப்படும் சுமைகளுக்கு தற்போது வரை நோக்குக் கூலி மற்றும் தோடு கூலி கேட்டு கட்டாயப்படுத்தும் நிகழ்வுகள் தொடர்கிறது. செப்டம்பர், 2021-இல் இஸ்ரோவிற்கு சொந்தமான பெரும்சுமை கொண்ட கருவிகளை கனரக வாகனத்தில் ஏற்றிக் கொண்டு திருவனந்தபுரத்திற்கு சென்ற போது கேரளாவின் நோக்கு கூலி தொழிலாளர்கள் வழிமறித்து கூலி கேட்டனர். இஸ்ரோ அதிகாரிகள் கேரளா அரசுடன் தொடர்பு கொண்ட பிறகே வேண்டா வெறுப்பாக நோக்கு கூலி தொழிலாளர்கள் இஸ்ரோவின் கனரக வாகனத்தைச் செல்ல அனுமதித்தனர். [9][10] [11]

மேற்கோள்கள்

தொகு
  1. "'When elections come, Congress party gets suicidal tendencies' - Interview with Paul Zacharia". India Abroad. 2011-04-15 இம் மூலத்தில் இருந்து 2018-05-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180501224545/http://www.indiaabroad-digital.com/indiaabroad/20110415?pg=31#pg31. 
  2. "Men (Not) At Work". Outlook. 2008-05-12.
  3. நோக்கு கூலி
  4. ‘நோக்கு கூலி’ முறை ரத்து: கேரள அரசு உத்தரவு
  5. "Labour Department cracks down on nokku kooli". The Hindu. 16 February 2012. https://www.thehindu.com/news/cities/Kochi/labour-department-cracks-down-on-nokku-kooli/article2899336.ece. 
  6. நோக்குகூலிக்கு அதிரடியாகத் தடைப்போட்ட கேரள அரசு!
  7. "Implement goonda-act against nokku kooli: HC". Archived from the original on 2013-05-08. பார்க்கப்பட்ட நாள் 2021-09-07.
  8. "Self Destruct". The Indian Express. 25 May 2012. http://www.indianexpress.com/news/selfdestruct-m/953532/0. 
  9. கேரளம்: நோக்கு-கூலி-கேட்டு இஸ்ரோ லாரியை மடக்கிய தொழிலாளா்கள்
  10. மீண்டும் தலைதூக்கும் நோக்கு கூலி: இஸ்ரோ லாரியை மடக்கிய தொழிலாளர்கள்!
  11. "ISRO truck blocked in Kerala; trade union members seek 'gawking charge'". Hindustan Times (in ஆங்கிலம்). 5 September 2021. பார்க்கப்பட்ட நாள் 5 September 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோக்கு_கூலி&oldid=3561301" இலிருந்து மீள்விக்கப்பட்டது