நோவி கபாடியா
நோவி கபாடியா (Novy Kapadia) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் ஆவர். 1952 ஆம் ஆண்டு பிறந்த இவர் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் நாள் காலமானார். கால்பந்து விளையாட்டின் விமர்சகராகவும் வர்ணனையாளராகவும் நோவி கபாடியா செயல்பட்டார். இந்தியாவின் மூத்த கால்பந்து நிபுணராகவும் ஒரு வர்ணனையாளராகவும் கருதப்படுகிறார். கால்பந்திற்கு மட்டும் வர்ணனையாளராக இல்லாமல் ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு, பொதுநலவாய விளையாட்டு மற்றும் பிற பல விளையாட்டு நிகழ்வுகளில் ஒரு பகுதியாக இருந்துள்ளார். தில்லியிலுள்ள தில்லி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட சிறீ குரு தேச் பகதூர் கல்சா கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். 2003 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டுவரை பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார்.[1][2]
பார்சி இனத்தைச் சேர்ந்த கபாடியா விளையாட்டு, இலக்கிய விமர்சனம் மற்றும் இவரது பார்சி பாரம்பரியம் தொடர்பான பல புத்தகங்களை எழுதியுள்ளார்.[3][4] இந்திய கால்பந்தின் பல வாழ்க்கை என்பது இவர் எழுதிய நூல்களில் பிரபலமான நூலாகும்.[5]
முதுகெலும்பு மற்றும் மூளையில் உள்ள நரம்புகள் காலப்போக்கில் செயல்பாட்டை இழக்கச் செய்யும் மோட்டார் நியூரான் என்ற ஓர் அரிய வகைநோயால் கபாடியா பாதிக்கப்பட்டார். தன்னுடைய 68 ஆவது வயதில் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 அன்று புது தில்லியில் இறந்தார்.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Press Trust of India. "Veteran football commentator Novy Kapadia dies at 67". The Telegraph (India). பார்க்கப்பட்ட நாள் 18 November 2021.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ 2.0 2.1 "‘Even when the world stopped caring about Indian football, Novy Kapadia didn’t’" (in en). The Indian Express. 18 November 2021. https://indianexpress.com/article/sports/football/even-when-the-world-stopped-caring-about-indian-football-novy-kapadia-didnt-7629882/.
- ↑ Srivatsa, Veturi. "Novy Kapadia: Barefoot to Boots And The Many Facets of Indian Football". Parsi Khabar (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 10 August 2021.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ Lokapally, Vijay (6 September 2017). "The incorrigible lover of the beautiful game: in conversation with Novy Kapadia" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/books/books-authors/the-incorrigible-lover-of-the-beautiful-game-in-conversation-with-novy-kapadia/article19628363.ece.
- ↑ Barefoot to Boots: The Many Lives of Indian Football Penguin India. Retrieved 21 November 2021.