ந,ந,ஈ,தி மாணவர் இயக்கம்

நங்கை, நம்பி, ஈரர், திருனர் மாணவர் இயக்கத்தின் தோற்றம் (LGBT student movement ) அமெரிக்காவில் 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து பிற சில இயக்கங்களின் நடவடிக்கைகளுக்கும் தொடர்பிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. குடிசார்உரிமைகள் இயக்கம் மற்றும் இரண்டாம்-அலை பெண்ணிய இயக்கம் அமெரிக்காவில் உள்ள மற்ற சிறுபான்மை குழுக்களுக்கு சம உரிமையை பெற்றுத் தருவதனை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஸ்டோன்வால் கலவரத்திற்கு சில வருடங்களுக்கு முன்பு இந்த மாணவர் இயக்கம் தொடங்கியிருந்தாலும், இந்த கலவரம் அமெரிக்காவில் அதிக நடவடிக்கை எடுப்பதற்கு உதவியது. இருந்த போதிலும், இந்த ஓரின சேர்க்கை மாணவர் அமைப்புகளின் செயல்பாடானது ந,ந,ஈ,தி வரலாற்றாசிரியர்களிடமிருந்து குறைந்த கவனத்தையே பெற்றது. [1] மேலும், இந்தப் போராட்டத்தின் விளைவாகவே இந்த இயக்கம் உருவாக்கப்பட்டது என்பதும் இதற்கான ஒரு காரணமாக அமைந்தது. மற்ற வரலாற்றாசிரியர்கள் இந்த குழுவானது அடிப்படை நங்கை, நம்பி, ஈரர், திருனர் இயக்கங்களின் சில அடிப்படை கொள்கைகளுடன் முரண்படுகிறது. இருந்தபோதிலும் இந்த இயக்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக அவர்கள் கருதினர். [1]

மாணவர் இயக்கத்தின் நேரங்களும் இடங்களும் மாறுபட்டாலும், இலக்குகள் பெரும்பாலும் ஒரே மாதிரியானவை: சோடோமி சட்டங்களை ஒழித்தல், கல்வி வளாகங்களில் நங்கை, நம்பி, ஈரர், திருனர் ஆகியோருக்கான சமத்துவம், [2] எயிட்சு ஆராய்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்குதல், [3] ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குதல், [4] நங்கை, நம்பி, ஈரர், திருனர் ஆகியோர்களை கொடுமைப்படுத்துதல் மற்றும் தற்கொலையைத் தடுத்தல் ஆகியன முக்கிய நோக்கங்களாகும். நங்கை, நம்பி, ஈரர், திருனர் மாணவர் அமைப்புகள் இன்று அடிப்படை கொள்கைகள் பற்றிய புரிதலை மேம்படுத்த ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கியுள்ளன. வெற்றிகரமான அணுகுமுறைகளை அடையாளம் காணவும் வேறுபடுத்தவும் வரலாற்று ஆராய்ச்சிகளை ஆதாரமாகப் பயன்படுத்துதல்.

ஆஸ்திரேலியா தொகு

ஆஸ்திரேலியாவில் உள்ள பல கல்லூரிகளில் மாணவர் சங்கம் உள்ளது, இது நங்கை, நம்பி, ஈரர், திருனர் மாணவர் செயல்பாட்டை நிதி ரீதியாகவும் வேறு விதங்களிலும் ஆதரிக்க உதவுகிறது. பெரும்பாலும் இவர்களுக்கு பாதுகாப்பினை வழங்குதல் மற்றும் ந,ந,ஈ,தி அதிகாரிகள் மாணவர் சங்கக் கொள்கையினை உருவாக்குதல் .ந,ந,ஈ,தி மாணவர் ஆர்வலர்கள், ஒருபால திருமணம் போன்ற அவர்கள் சமூகத்திற்கு முக்கியமானதாக கருதும் ஆஸ்திரேலியாவில் உள்ள பிரச்சனைகளைப் பரப்புவதற்கு ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். [4] இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள ந,ந,ஈ,தி மாணவர்கள் தங்கள் வளாகங்களில் நல்ல புரிதல்களைக் கொண்டுள்ளனர் என்றும் மாணவர்கள் தங்கள் நாட்டில் ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்க இந்த இந்தப் பயன்படுத்துகின்றனர் என்பதும் புலனாகிறது.

இந்தியா தொகு

இந்தியாவில் உள்ள பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ந,ந,ஈ,தி ஆதரவு குழுக்கள் உள்ளன, அவை ந,ந,ஈ,தி இளைஞர்களுக்கு தேவையான அனைத்து வகையான ஆதரகளையும் வழங்குகின்றன. மேலும் இந்தக் குழுக்களானது ந,ந,ஈ,தி பற்றிய விழிப்புணர்வுகளையும் வழங்குகிறது. பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் , சமூக ஊடகங்கள் மூலம் இந்த செயல்பாட்டில் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர். இந்த ஆதரவு குழுக்கள் ந,ந,ஈ,தி சமூகங்களை கொடுமைப்படுத்துதல் மற்றும் சமூக பாகுபாடுகளை ஒழிப்பது ஓரின சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்குதல், இந்திய ஆயுதப்படைகளில் ந,ந,ஈ,தி மக்கள் சேவை செய்தல் போன்றவற்றையும் நோக்கமாகக் கொண்டுள்ளன .

மெக்சிகோ தொகு

2004 ஆம் ஆண்டில், மெக்ஸிக்கோ நகரம், மெக்ஸிக்கோவில் உள்ள ஒரு தனியார் அமெரிக்க பள்ளி ஓரின ஆதரவு இயக்கத்தினை உருவாக்கியது.

இவற்றையும் காண்க தொகு

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 Beemyn, Brett (2003). "The Silence is Broken: A History of the First Lesbian, Gay, and Bisexual College Student Groups". Journal of the History of Sexuality 12 (2): 205–223. doi:10.1353/sex.2003.0075. https://archive.org/details/sim_journal-of-the-history-of-sexuality_2003-04_12_2/page/205. 
  2. "LGBT Groups Call For Change in China's Schools, Colleges". Radio Free Asia. பார்க்கப்பட்ட நாள் 2015-11-21.
  3. "ACT UP, LGBT, HIV and related topics (actup)". Archived from the original on 2012-04-17. பார்க்கப்பட்ட நாள் 2021-09-11.
  4. 4.0 4.1 Rodgers, Jessica (2010-08-01). "'Live your liberation – don't lobby for it': Australian queer student activists' perspectives of same-sex marriage". Continuum 24 (4): 601–617. doi:10.1080/10304312.2010.489722. பன்னாட்டுத் தர தொடர் எண்:1030-4312. http://eprints.qut.edu.au/28493/1/c28493.pdf. பார்த்த நாள்: 2021-09-11. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ந,ந,ஈ,தி_மாணவர்_இயக்கம்&oldid=3632802" இலிருந்து மீள்விக்கப்பட்டது