வரைகதை

(பகடிப்படம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வரைகதை அல்லது சித்திரக்கதை (Comics) என்பது ஒரு கதையின் நிகழ்வுகள் வரிசைப்படுத்தப்பட்ட முறையில் வரையப்பட்டு, அக்கதையின் கதைப்பாத்திரங்களுக்கிடையான உரையாடல்கள் பெட்டிகளில் அல்லது ஊதுபைகளில் (balloons) தரப்படும் கதை-ஓவிய வெளிப்பாட்டு வடிவம் ஆகும். தமிழில் படக்கதை என்றும் காமிக்ஸ் (Comics) என்ற ஆங்கில சொல்லைத் தமிழ்படுத்தியும் பரவலாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

சொற்பிறப்பியல்

தொகு
 
முதல் நவீன ஜப்பானிய வரைகதை துண்டு ரகுடென் கிடஜாவாவால் (Rakuten Kitazawa) உருவாக்கப்பட்டது. 1902ஆம் ஆண்டின், தகோசகு டொ மொகாபே நொ டோக்யோ கென்புட்சு (Tagosaku to Mokube no Tōkyō Kenbutsu,[a])

ஆங்கில மொழியில் 'காமிக்ஸ்' (comics) என்ற வார்த்தை நகைச்சுவை என்ற பொருளைத் தருகிறது. இது ஆரம்பகால அமெரிக்க பத்திரிகைகளில் அதிக ஆதிக்கம் செலுத்தியது. "வரைகதை புத்தகம்" என்ற சொல், குழப்பமான வரலாற்றைப் பெற்றுள்ளது.

வரைகதை புத்தகங்கள் பெரும்பாலும் நகைச்சுவையானதாக இல்லை. இவை வழக்கமான புத்தகங்களோ அல்லது பருவ வெளியீடுகளோ அல்ல.[1]

வரைகதைகள், ஜப்பானீய மொழியில், மங்கா (manga) என்றும், பிரஞ்சு மொழியில், பிராங்கோ பெல்ஜியன் வரைகதை பந்தேஸ் டெஸ்ஸினீஸ் (bandes dessinées) என்றும் அழைக்கப்படுகின்றன. வேறுபட்ட பண்பாடுகளில், அவரவர்களின் மொழிகளில் வெவ்வேறு விதமாகக் குறிக்கப்பட்டாலும், 'காமிக்ஸ்' எனும் ஆங்கில வார்த்தை அனைவராலும் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.[2]

பல பண்பாடுகள் ஆங்கில மூல வார்த்தையான 'காமிக்ஸ்' (comics) என்ற வார்த்தையிலிருந்து வரைகதைக்கான தம் மொழிப் பெயர்களை வருவித்துள்ளன:

  • உருசிய மொழியில், 'காமிக்' (Комикс, komiks)[3]
  • ஜெர்மானிய மொழியில், 'காமிக்' (comic)[4]
  • சீன மொழியில், 'மன்ஹுவா' (manhua)[5]
  • கொரிய மொழியில், 'மன்ஹ்வா' (manhwa)[6]
  • ஜப்பானீய மொழியின் 'மங்கா' என்ற வார்த்தை சீன எழுத்துக்களால் எழுதப்பட்டது.[7]

தோற்றம் மற்றும் மரபுகள்

தொகு

ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஜப்பான் ஆகிய நாடுகள் வரைகதைத் துறையில் வெவ்வேறு பாதைகளைக் கொண்டுள்ளன.[8] ஐரோப்பியர்களைப் பொருத்தமட்டில், 1827ல் சுவிஸ் நாட்டின் ரோடால்ஃப் டாப்ஃபெர் (Rodolphe Töpffer) வரைகதைகளைத் துவக்கி வைத்தார். 1890ல் அமெரிக்காவில் ரிச்சர்டு எஃப் அவுட்கால்ட் (Richard F. Outcault) வெளியிட்ட 'மஞ்சள் குழந்தை' எனும் செய்தித்தாள், அமெரிக்க வரைகதைத் துறையின் அடித்தளமாகும். இருப்பினும், பல அமெரிக்கர்கள், ரோடால்ஃப் டாப்ஃபெர் தான் முன்னோடி என அங்கீகரிக்கின்றனர்.[9]

ஜப்பான் நாட்டு நையாண்டி கார்ட்டூன்களும், வரைகதைகளும், நீண்ட வரலாற்றைப் பெற்றுள்ளன. 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் யுகியோ-இ (ukiyo-e) கலையின், ஜப்பானிய வரைகலைஞர் ஒக்குசாய், கேலிச்சித்திரங்களையும், வரைகதைகளையும் பிரபலப்படுத்தினார்.[10] இரண்டாம் உலகப் போருக்குப் பின், நவீன ஜப்பானிய வரைகதைகள், செழுமையுற்று தழைத்தோங்கத் தொடங்கின. ஒசாமு தெசூகா வளமிக்க வரைகதைகளை, உருவாக்கினார்.[11]

அகலப் பரப்புத் தொடர் காட்சி 11 ஆம் நூற்றாண்டின் நோர்மானிய மன்னர் வில்லியம் உருவாக்கிய நூல்வேலைப்பாட்டு பேயூ திரைக்கம்பளம், வரைகதைக்கான ஒரு முன்னோடி என்று கோட்பாட்டாளர்களால் விவாதிக்கப்பட்ட வரைகதை.

வரைகதை கோட்பாட்டாளர்களும், வரலாற்றாசிரியர்களும் மேற்கொண்ட பரம்பரையியல் ஆய்வுகள் மூலம், பிரான்ஸ் நாட்டின் லாஸ்காக்ஸ் (Lascaux) குகை ஓவியங்கள், வரைகதைகளின் முன்னோடி என்ற தகவல் வெளிப்பட்டது.[12] இவை காலவரிசைப்படி வரையப்பட்ட தொடர் படங்களாக உள்ளன. வரைகதைகளுக்கான பிற சான்றுகள்:

  • எகிப்து நாட்டின் ஹீரோகிளிப்ஸ் (hieroglyphs) எழுத்துமுறை,
  • ரோம் நாட்டின் திராயானின் தூண் ஓவியங்கள்,[13]
  • நோர்மானிய மன்னர் வில்லியமின் நூல்வேலைப்பாட்டு பேயூ திரைக்கம்பளம் (11 ஆம் நூற்றாண்டு)[14]
  • 1370ஆம் ஆண்டின் பாய்ஸ் புரோடாட் (bois Protat) மரஞ்செதுக்கு ஓவியங்கள்
  • 15 ஆம் நூற்றாண்டின் அர்ஸ் மொரீன்டி (Ars moriendi) மற்றும் மரச்செதுக்கு வேலைப்பாட்டுப் பாணி தொகுப்புப் புத்தகங்கள்
  • ஸிஸ்டைன் (Sistine) கிறித்துவச் சிறுகோயிலில் உள்ள மைக்கேலேஞ்சலோவின் கடைசித் தீர்ப்பு ஓவியம்,[13]
  • 18 ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய ஓவியர் வில்லியம் ஹோகார்த் (William Hogarth) வரைந்த காரசாரமான, கடுமையான, கசப்பான அரசியல், சமூக நையாண்டி ஓவியங்கள்[15]

ஆங்கில மொழி வரைகதைகள்

தொகு
பட் ஃபிஷரின் (Bud Fisher) மட்டும் ஜெஃப்பும் (1907–1982) - முதல் வெற்றிகரமான தினசரி வரைகதைப் பட்டை (1907).

18 ஆம் நூற்றாண்டின் பிரிட்டனில் பருவகால நகைச்சுவைப் பத்திரிகைகள் மிகவும் பிரபலமாக இருந்தன. அவற்றுள் முன்னோடிப் பத்திரிகை, 1825 ஆம் ஆண்டின் கிளாஸ்கோ கண்ணாடி (Glasgow Looking Glass) மற்றும் மிகவும் பிரபலமான பத்திரிகை பஞ்ச் (Punch).[16] பஞ்ச் பத்திரிகையானது நகைச்சுவை மற்றும் கேலிச்சித்திரங்களுக்கு கார்ட்டூன் என்ற வார்த்தையை அளித்து பிரபலப்படுத்தியது.[17] இந்த இதழில் கார்ட்டூன்கள் தொடர் காட்சிகளாக வரையப்பட்டன.[16] 1884 ஆம் ஆண்டில் அதன் வாராந்திரிப் பத்திரிகையில் ஆலி ஸ்லோபர் (Ally Sloper) எனும் கதாபாத்திரம் சிறப்பாக அறிமுகப்படுத்தப்பட்டது.[18] அவுட்குல்டின் (Outcoult) 'மஞ்சள் குழந்தை', எனும் வரைகதை செய்தித்தாள் வரைகதைப் பட்டையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இது ஆரம்பகாலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலும் முழு வண்ணப் பக்கமாக வெளிவந்தது.[19] 1896 மற்றும் 1901 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கார்ட்டூனிஸ்டுகள் தங்களுடைய வரைகதைகளில், வரிசைத்தொடர்புடைமைகள், இயக்கம், பேச்சு ஊதுபைகள் போன்றவற்றை இணைத்து வளமூட்டிப் பரிசோதித்தனர்.[20] 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், 1907 ஆம் ஆண்டில், பட் ஃபிஷரின் (Bud Fisher) 'மட்டும் ஜெஃப்பும்' (Mutt and Jeff) என்ற வரைகதைப் பட்டைகள் பெரிய அளவில் வெற்றியைக் கண்டன. அதன் பின் செய்தித்தாள்களில், குறுகிய, கருப்பு-வெள்ளை தினசரி வரைகதைப் பட்டைகள் பெருமளவில் இடம் பெற்றன.[21]

பிரிட்டனில், ஒருங்கிணைந்த (Amalgamated) அச்சகத்தில் தயாரிக்கப்பட்ட வரைகதைப் பட்டைகளில் மேற்கொள்ளப்பட்ட பிரபலமான மாற்ற பாணிகள்:

  • வரைகதைகளுக்கு கீழே உரைகள் இணைத்தல்
  • விளக்கப்பட்ட வரைபடத் துண்டுகள் சேர்த்தல்
  • நகைச்சுவை மற்றும் வேடிக்கையான வெட்டு பகுதிகளைச் சேர்த்தல்[22]

பத்திரிக்கை உலகில் முதன்முதலாக நகைச்சுவை வரைகதைப் பட்டைகள் பெரும் ஆதிக்கம் செலுத்தின. இந்த வரைகதைப் பட்டைகளில் சாகச செயல்கள்,  நாடகங்கள், எதிர்பாராத சிறப்புச் சம்பவங்கள் சேர்க்கப்பட்டு பிரபலமாக்கப்பட்டன.[21] 1930 களில் வரைகதைப் புத்தகங்கள் எனும் மெல்லிய பத்திரிகைகள் வெளியிடப்பட்டன. பின் அவை மறுபதிப்பு செய்யப்பட்டன. தசாப்தத்தின் முடிவில், அசல் உள்ளடக்கம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.[23] 1938 ஆம் ஆண்டில் அதிரடி வரைகதைகளும், மற்றும் அவற்றின் நாயகர்களும் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இது சூப்பர்மேன் போன்ற முன்னணி நாயகர்களின் காலமாக இருந்தது. இதுவே வரைகதைப் புத்தகங்களின் பொற்காலம்.[24] "சிதைவுக் கூளங்களின் அச்சுறுத்தல் (Dennis the Menace)", "நம்பிக்கையிழந்த டான் (Desperate Dan)" மற்றும் "தெருக் குழந்தைகளின் பலத்த அடி(Bash Street Kids)" போன்ற வரைகதைகளின் நாயகர்கள் பிரித்தானிய பள்ளி மாணவர்களைப் பெரிதும் கவர்ந்தனர்.[25] முன்னணி நாயகர்களின் வரைகதைகளும், அதிரடி வரைகதைகளும் நகைச்சுவை மற்றும் அதிரடி பாணிகளைக் கொண்ட கலவைகளாக ஒருங்கிணைந்த அச்சகத்தினரால் வெளியிடப்பட்டன.[26]

பிரெஞ்சு -பெல்ஜியன் மற்றும் ஐரோப்பிய வரைகதைகள்

தொகு

1827 ஆம் ஆண்டில் பிரெஞ்சு மொழி பேசும் ரோடால்ஃப் டாப்ஃபெர், வரைகதை பட்டைகளை வடிவமைத்து, வடிவமைப்பின் பின்புலத்தில் உள்ள கோட்பாடுகளை அனைவரும் அறியும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.[27] பல்வேறு வரைகதை பட்டைகளைத் தொடங்கி, உற்பத்தி செய்து வெளியிட்டார்.[13] 19 ம் நூற்றாண்டில், செய்தித்தாள்களிலும், பத்திரிகைகளிலும் வரைகதைகள் பரவலாக வெளிவந்தன.[28] 1925 இல் ஜிக் எட் பியூஸ் (Zig et Puce) எனும் ஐரோப்பிய வரைகதைத் தொடரில் பேச்சு ஊதுபைகள் பயன்படுத்தப்பட்டன. பேச்சு ஊதுபைகளால், இத்தொடர் வெற்றி பெற்றுப் பிரபலமானது. பின்னர் பிரெஞ்சு பெல்ஜியன் வரைகதைகளில் ஊதுபைகள் பெருத்த ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின.[29] டின்டினின் (Tintin) சாகச செயல் எனும் தொடரில், பயன்படுத்தப்பட்ட பாணி தனி முத்திரை பதித்தது.[30] 1929 முதல் கூடுதல் செய்தித்தாளிலும் வரைகதைகள் சிறிது சிறிதாக வெளிவந்து பின்னர் தொடர்களாயின.[31] பிராங்கோ-பெல்ஜிய வரைகதைகளில் டின்டின் ஒரு முன்னுதாரண சின்னமாக விளங்கியது.[32]

1934-44ஆம் ஆண்டுகளில் லெ ஜர்னல் டி மிக்கியின் (Le Journal de Mickey) வெற்றியைத்[33] தொடர்ந்து, பல செய்தித்தாள்கள் தங்கள் இதழ்களை வரைகதைகளுக்காக அர்ப்பணித்தன.[34] 20 ஆம் நூற்றாண்டில் முழு வண்ண வரைகதைத் தொகுப்புகள் மிகுந்த அளவில் வெளி வந்தன.[35]

1960 களில் வரையப்பட்ட பந்தேஸ் டெஸ்ஸினீஸ் வரைகதைக் கீற்றுகள் பிரஞ்சு மொழியில் பரவலான பயன்பாட்டிற்கு வந்தன.[36] கேலிச்சித்திர வரைஞர்கள் வயதுவந்தவர்களுக்காகப் வரைகதைகளை உருவாக்கத் தொடங்கினர்.[37] வரைகதைகள் "ஒன்பதாவது கலை" எனும் அந்தஸ்தைப் பெற்றன.[b] வரைகதைகள், பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களை ஈர்க்கும் கலைவடிவங்களாயின.[38] கோஸ்ஸின்னி (Goscinny) மற்றும் அன்டர்ஸோ (Uderzo) ஆகியோரின் வரைகதைகள் பைலட் (Pilote) எனும் இதழில் 1959ல் ஆஸ்டிரிக்ஸின் (Asterix) சாகஸங்கள் என்ற தலைப்பில் வெளியாயின.[39] இவை சிறந்த விற்பனையான பிரஞ்சு மொழி வரைகதைகள் எனப் பெயர் பெற்றன.[40]

1980 முதல், வரைகதை இதழ்கள் குறைந்தன. பல வரைகதை தொகுப்புகள் நேரடியாக வெளியிடப்பட்டன.[41] சிறிய வெளியீட்டாளரான எல்'சங்கம்[42] நீண்ட வரைகதை தொகுப்புகளை[43] பாரம்பரியமற்ற வடிவங்களில்[44] வெளியிட்டது. அச்சு சந்தை சுருங்கிய போதிலும், வரைகதை தொகுப்புகளின் விற்பனை தொடர்ந்து வளர்ந்தது.[45]

தமிழில் வரைகதை

தொகு

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பல வரைகதைகள் வெளிவந்துள்ளன. இவற்றில் சில,

போன்ற புத்தகங்கள் தமிழ் பேசும் உலகில் இன்றும் பிரபலமாக உள்ளன.

சில பழைய ஆங்கில வரைகதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டும் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. (உதாரணம்: கழுகுவீரன்) கன்னித்தீவு வரைகதை இன்றளவும் தினத்தந்தி செய்தித்தாளில் வந்தவண்ணம் உள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Tagosaku and Mokube Sightseeing in Tokyo (田吾作と杢兵衛の東京見物 Tagosaku to Mokube no Tokyo Kenbutsu?)
  2. பிரெஞ்சு மொழி: neuvième art

மேற்கோள்கள்

தொகு
  1. Groensteen 2012, p. 131 (translator's note).
  2. McKinney 2011, ப. xiii.
  3. Alaniz 2010, ப. 7.
  4. Frahm 2003.
  5. Wong 2002, p. 11; Cooper-Chen 2010, p. 177.
  6. Johnson-Woods 2010, ப. 301.
  7. Cooper-Chen 2010, ப. 177.
  8. Couch 2000.
  9. Gabilliet 2010, p. xiv; Beerbohm 2003; Sabin 2005, p. 186; Rowland 1990, p. 13.
  10. Petersen 2010, p. 41; Power 2009, p. 24; Gravett 2004, p. 9.
  11. Couch 2000; Petersen 2010, p. 175.
  12. Gabilliet 2010, p. xiv; Barker 1989, p. 6; Groensteen 2014; Grove 2010, p. 59; Beaty 2012; Jobs 2012, p. 98.
  13. 13.0 13.1 13.2 Gabilliet 2010, ப. xiv.
  14. Gabilliet 2010, p. xiv; Beaty 2012, p. 61; Grove 2010, pp. 16, 21, 59.
  15. Grove 2010, ப. 79.
  16. 16.0 16.1 Clark & Clark 1991, ப. 17.
  17. Harvey 2001, ப. 77.
  18. Meskin & Cook 2012, ப. xxii.
  19. Nordling 1995, ப. 123.
  20. Gordon 2002, ப. 35.
  21. 21.0 21.1 Harvey 1994, ப. 11.
  22. Bramlett, Cook & Meskin 2016, ப. 45.
  23. Rhoades 2008, ப. 2.
  24. Rhoades 2008, ப. x.
  25. Childs & Storry 2013, ப. 532.
  26. Bramlett, Cook & Meskin 2016, ப. 46.
  27. Harvey 2010.
  28. Lefèvre 2010, ப. 186.
  29. Vessels 2010, p. 45; Miller 2007, p. 17.
  30. Screech 2005, p. 27; Miller 2007, p. 18.
  31. Miller 2007, ப. 17.
  32. Theobald 2004, p. 82; Screech 2005, p. 48; McKinney 2011, p. 3.
  33. Grove 2005, ப. 76–78.
  34. Petersen 2010, pp. 214–215; Lefèvre 2010, p. 186.
  35. Petersen 2010, ப. 214–215.
  36. Grove 2005, ப. 51.
  37. Miller 1998, p. 116; Lefèvre 2010, p. 186.
  38. Miller 2007, ப. 23.
  39. Miller 2007, ப. 21.
  40. Screech 2005, ப. 204.
  41. Miller 2007, ப. 33–34.
  42. Beaty 2007, ப. 9.
  43. Lefèvre 2010, ப. 189–190.
  44. Grove 2005, ப. 153.
  45. Miller 2007, ப. 49–53.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரைகதை&oldid=4121137" இலிருந்து மீள்விக்கப்பட்டது