பகானி குயாய்ரா
பகானி குயாய்ரா பகானி உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு மைய-இயந்திர விளையாட்டு தானுந்து. இதன் முன்னைய வகை சொன்டாவிற்கு அடுத்ததான இதன் விலை £850,000[1] ($1,150,000) ஆக 2013இல் விற்பனைக்கு வரும்போது காணப்படும். தென் அமெரிக்க இறக்கை கடவுள் எனப்படும் குயாய்ரா-டாடா என்பதன் பெயரிலிருந்து இது பெயர் பெற்றது.[2][3]
உற்பத்தியாளர் | பகானி |
---|---|
உற்பத்தி | 2011 |
பொருத்துதல் | மெடேனா, இத்தாலி |
முன்பு இருந்தது | பகானி சொன்டா |
வகுப்பு | விளையாட்டு தானுந்து |
திட்ட அமைப்பு | பின் மைய இயந்திரம், பின்-சில்லு இயக்கி அமைவு |
இயந்திரம் | மேர்சிடஸ்-ஏஎம்யி வி12 பை-டேர்போ எம்158, 5980 cc |
செலுத்தும் சாதனம் | 7-வேக தொடர் கடவை. ஏஎம்டி இயந்திர முறை |
சில்லு அடிப்பாகம் | 2,795 mm (110.0 அங்) |
நீளம் | 4,605 mm (181.3 அங்) |
அகலம் | 2,036 mm (80.2 அங்) |
உயரம் | 1,169 mm (46.0 அங்) |
குறட்டுக்கல் எடை | 1,350 km (840 mi) (உலர்) |
செயல்திறன்
தொகுகுயாய்ரா இரட்டை-வலு மேர்சிடஸ்-ஏஎம்யி 60° வி12 இயந்திரத்தைப் பயன்படுத்துகிறது.[3] குயாய்ராவின் 6.0 லீட்டர் இயந்திரம் (எம்158) 700 க்கு மேலான குதிரைவலுவையும் 1,000 N⋅m (740 lb⋅ft) முறுக்குதிறனையும் உற்பத்தி செய்கிறது. இதன் உச்ச வேகம் 230 mph (370 km/h) [1] ஆகவும் 3.3 வினாடிகளில் இது மணிக்கு 0–60 miles per hour (0–97 km/h) மைல் வேகத்தையும் அடையும்.[1] பிரேலி சக்கரங்களைப் பாவித்து இது 230 mph (370 km/h) வேகத்தில் 1.5கி நிலைநிற்றல் கொள்ளளவுடையது.[3]
உசாத்துணை
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Pagani Huayra replaces Zonda, redefines awesome". CNET UK. 2011-01-26. Archived from the original on 2012-07-30. பார்க்கப்பட்ட நாள் 2011-01-26.
- ↑ "Italy's $1.4 Million Pagani Huayra Supercar". Fox News. 28 January 2011. http://www.foxnews.com/leisure/2011/01/28/italys-million-pagani-huyara-supercar/. பார்த்த நாள்: 29 January 2011.
- ↑ 3.0 3.1 3.2 "Pagani Huayra makes its official web debut". Autoblog. 2011-01-25. பார்க்கப்பட்ட நாள் 2011-01-25.
வெளி இணைப்புகள்
தொகு- Official website பரணிடப்பட்டது 2011-03-21 at the வந்தவழி இயந்திரம்
- Pagani Huayra[தொடர்பிழந்த இணைப்பு]