பகுப்பாய்வு நுட்பம்
அறிவியலின் ஒரு கிளை, இதில் விஞ்ஞானிகள் பல்வேறு பொருட்களைப் படித்து, அவை எதனால் ஆனது என்பதைப் ப
பகுப்பாய்வு நுட்பம் (Analytical technique) என்பது ஒரு வேதியியல் பொருள், வேதியியல் தனிமம் அல்லது வேதியியல் கலவையின் இயற்பியல் அல்லது வேதியியல் பண்புகளை தீர்மானிக்கப் பயன்படும் ஒரு முறையாகும். [1] எளிமையான எடையறி பகுப்பாய்வு முதல் செறிவுகாணல் பகுப்பாய்வு வரை மிகச்சிறப்பு வாய்ந்த கருவிகளைப் பயன்படுத்தி மிகவும் மேம்பட்ட பலவிதமான நுட்பங்கள் பகுப்பாய்விற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
பகுப்பாய்வு வேதியியலில் பயன்படுத்தப்படும் மிகப் பொதுவான நுட்பங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
- தரம் பார்த்தல்: பகுப்பாய்வு செய்யப்படவேண்டிய பொருளுடன் வினைபுரிவதற்கு தேவையான வினையாக்கியின் அளவை அடிப்படையாகக் கொண்டது.
- மின்னழுத்தமானியைப் பயன்படுத்தி மின்னழுத்தத்தை ஒப்பிடுதல் மற்றும் வோல்ட்டா அளவியல் உள்ளிட்ட மின்பகுப்பாய்வு நுட்பங்கள்
- நிறமாலையியல்: மின்காந்த கதிர்வீச்சுடன் பகுப்பாய்வு செய்யப்படவேண்டிய பொருள் வெளிப்படுத்தும் வேறுபட்ட இடைவினைகளை அடிப்படையாகக் கொண்ட நுட்பம்.
- நிறப்பகுப்பியல்: பகுப்பாய்வு செய்யப்பட வேண்டிய பொருளை மற்ற மாதிரிகளிலிருந்து பிரித்தெடுத்து ஆய்வு செய்வதை அடிப்படையாகக் கொண்ட நுட்பம். இம்முறையினால் மற்ற சேர்மங்களின் குறுக்கீடு இல்லாமல் அளவிடமுடியும்.
- பருமனறி பகுப்பாய்வு: நிறையை அடிப்படையாகக் கொண்டு அயனி ஆய்வு செய்யப்படும் நுட்பம்.
- கதிரியக்கப்பகுப்பாய்வு வேதியியல்: பகுப்பாய்வு செய்யப்பட வேண்டிய பொருளின் அணுக்கருவிலுள்ள கதிரியக்க உட்கருவின் ஆற்றலை பகுப்பாய்வு செய்யும் நுட்பம்.
இவற்றைத் தவிர சிறப்பு பயன்பாடுகளைக் கொண்ட இன்னும் பல நுட்பங்கள் உள்ளன. மேலும் ஒவ்வொரு பெரிய பகுப்பாய்வு நுட்பத்திலும் பல பயன்பாடுகளும் பொது நுட்பங்களில் சில மாறுபாடுகளும் உள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Analytical technique". Archived from the original on 2013-03-17. பார்க்கப்பட்ட நாள் 2013-01-17.