பகுப்பு பேச்சு:ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ள கட்டுரைகள்
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Selvasivagurunathan m in topic பரிந்துரைகள் / வழிகாட்டல்கள்
ஒழுங்கமைவு தேவைப்படும் பகுப்பு |
என்ன ஒழுங்கமைவு தேவைப்படுகிறது?
தொகு@Selvasivagurunathan m என்னென்ன ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. நான் இவற்றில் இருந்து தாவரவியல் கட்டுரைகளுக்கென தனிபகுப்பு உருவாக்குகிறேன். வேறு என்ன தேவைப்படுகிறது? த♥உழவன் (உரை) 07:52, 20 திசம்பர் 2023 (UTC)
- ஒரே மாதிரியான பகுப்புகளையும் ஒன்றிணைக்க பரிந்துரைகள் உள்ளன. அவற்றைக் கவனித்து ஒழுங்கமைக்க வேண்டும் என்பதற்காக இவ்வார்ப்புரு சேர்க்கப்பட்டது. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:05, 20 திசம்பர் 2023 (UTC)
- அப்பரிந்துரைகளை எப்பக்கத்தில் உள்ளது இணைப்பு தருக த♥உழவன் (உரை) 09:02, 20 திசம்பர் 2023 (UTC)
- இதே பகுப்பில், துணைப் பகுப்புகள் பகுதியில் உள்ளன. -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:09, 20 திசம்பர் 2023 (UTC)
- அப்பரிந்துரைகளை எப்பக்கத்தில் உள்ளது இணைப்பு தருக த♥உழவன் (உரை) 09:02, 20 திசம்பர் 2023 (UTC)
- நீங்கள் உருவாக்கியிருக்கும் சேய்ப் பகுப்பு, அடுத்தடுத்த துப்புரவு / மேம்பாட்டுப் பணிகளுக்கு உதவியாக இருக்கும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:14, 20 திசம்பர் 2023 (UTC)
- தேவைப்படும் சேய்ப் பகுப்புகளைக் கூறவும். நேரம் உள்ள போது, அவற்றையும் உருவாக்க விரும்புகிறேன். தாவரவியில் குறித்தவைகளை எனக்குத் தெரிவியுங்கள். த♥உழவன் (உரை) 09:04, 20 திசம்பர் 2023 (UTC)
- ஒருங்கிணைக்க முன்னர் பரிந்துரைகள் உண்மையில் சரியானவைதானா என்பதைப் பார்க்க வேண்டும். பரிந்துரைத்திருப்பதால் அவை கட்டாயம் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமல்ல.--Kanags \உரையாடுக 10:46, 20 திசம்பர் 2023 (UTC)
- சரி. விக்கிப்பீடியா பேச்சு:ஒத்த கட்டுரைகள்/கட்டுரைகளை ஒன்றிணைத்தல் என்ற பக்கத்திலும் உங்கள் குறிப்புகளைக் கண்டேன். நன்றி. த♥உழவன் (உரை) 01:25, 21 திசம்பர் 2023 (UTC)
- ஒருங்கிணைக்க முன்னர் பரிந்துரைகள் உண்மையில் சரியானவைதானா என்பதைப் பார்க்க வேண்டும். பரிந்துரைத்திருப்பதால் அவை கட்டாயம் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமல்ல.--Kanags \உரையாடுக 10:46, 20 திசம்பர் 2023 (UTC)
பரிந்துரைகள் / வழிகாட்டல்கள்
தொகு- சில கட்டுரைகள் சான்று எதுவும் சுட்டப்படாது, சொந்தக் கருத்துகளை கொண்டிருக்கின்றன. அத்தகையக் கட்டுரையை 'சான்றுகளைக் கொண்டிருக்கும் இன்னொரு கட்டுரையுடன்' ஒன்றிணைக்க வேண்டியதில்லை; மாறாக நீக்கவேண்டும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:07, 21 திசம்பர் 2023 (UTC)
- சில கட்டுரைகள் இரு வேறு கட்டுரைகளே. அவற்றை ஒன்றிணைப்பது தவறாகி விடும். எடுத்துக்காட்டு: நெமிலிச்சேரி, நெமிலிசேரி என இரு கட்டுரைகள் இருந்தன. ஒன்றிணைக்கப் பரிந்துரைத்து வார்ப்புரு இடப்பட்டிருந்தது. ஆனால் இக்கட்டுரைகள் திருவள்ளூர் மாவட்டத்திலும், செங்கல்பட்டு மாவட்டத்திலும் உள்ள நெமிலிச்சேரி எனும் ஊர்கள் பற்றியவை ஆகும். எனவே, ஒன்றிணைப்பு வார்ப்புருக்கள் நீக்கப்பட்டு, நெமிலிச்சேரி எனும் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம் உருவாக்கப்பட்டது. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:06, 21 திசம்பர் 2023 (UTC)
- ஒரு சிற்றூரின் பெயரில் கட்டுரையும், அதே பெயரில் ஊராட்சி எனும் தலைப்பில் கட்டுரையும் இருந்தால் அவற்றை ஒன்றிணைக்கக் கூடாது. ஏனெனில் அவை வெவ்வேறானவை. ஊராட்சி என்பது ஒரு கடைசி நிர்வாக அலகு. ஊராட்சிக்குள் பல சிற்றூர்கள் அடங்கும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:05, 22 திசம்பர் 2023 (UTC)