பகுப்பு பேச்சு:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்

கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள் பகுக்கப்படும் போது தமிழ் அகர வரிசையில் வராமல் ஆங்கில வரிசையில் வருவதைக் காண முடிகிறது. கட்டுரைகளின் இறுதியில் {{DEFAULTSORT:Bhagat, Chetan}} என்பது போல் இப்பிரச்சினைக்குக் காரணம் என நினைக்கிறேன்--ரவி 11:14, 28 ஜூலை 2010 (UTC)

ஆமாம். அவற்றை அனைத்துப் பக்கங்களில் இருந்தும் நீக்க வேண்டும். மகேசுவரியின் தானியங்கி இதனைச் செய்யுமா?--Kanags \உரையாடுக 11:32, 28 ஜூலை 2010 (UTC)

கூகுள் கட்டுரைகளில் தானியக்கமாக சரி செய்யக்கூடிய இன்ன பிற விசயங்களையும் இனங்கண்டு ஒட்டு மொத்தமாக தானியங்கியை இயக்கவது நன்று.--ரவி 13:51, 28 ஜூலை 2010 (UTC)

துணைப் பகுப்புகள் தொகு

@Selvasivagurunathan m துணைப்பகுப்புகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது போல் எனக்குத் தோன்றுகிறது. உதாரணமாக கூகுள் தமிழாக்கம்- நபர்கள் என்ற துணைப்பகுப்பில் எழுத்தாளர்கள், துடுப்பாட்டக்காரர்கள்,நடிகர்கள், அரசியல்வாதிகள், நோபல்பரிசு பெற்றவர்கள்,பெண்கள், பெண் நிர்வாக அலுவலர்கள் மற்றும் கணிதவியலாளர்கள் ஆகிய அனைவரையும் சேர்த்திருக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் உருவாக்கிய காரணத்தினை என்னால் அறிய முடிகிறது. கணிதம், அறிவியல், விளையாட்டு என்று உருவாக்கியிருந்தால் உங்களது பெரும்பான்மையான நேரம் மிச்சமாகியிருக்கும் என்பது என் பணிவான கருத்து. காரணம் துப்புரவுப் பணியில் ஈடுபடும் பெரும்பான்மையான பயனர்கள் கொஞ்சம் அனுபவம் பெற்றவர்களாக இருப்பதனால் அவர்களால் கட்டுரைகளை எளிதாக தேர்வு செய்திருக்க முடியும் என நினைக்கிறேன். நன்றி ஸ்ரீதர். ஞா (✉) 15:29, 4 செப்டம்பர் 2022 (UTC)

ஆம், துணைப் பகுப்புகளின் எண்ணிக்கை அதிகம்தான். இயன்றளவு ஒன்றுசேர்த்திருக்கிறேன். எனினும், பெரும்பாலான துணைப் பகுப்புகள் தேவையே; உதாரணமாக, பகுப்பு:கூகுள் தமிழாக்கம்-பெண்கள். தொடர்பங்களிப்பாளர்கள் மட்டுமல்லாது, அண்மைக் கால பங்களிப்பாளர்களையும் கருத்திற் கொண்டதாலேயே அதிக துணைப் பகுப்புகள் உண்டாக்க வேண்டியதாயிற்று. மேலும், பயனர்களுக்கு மிகவும் எளிதாக இருக்க வேண்டும் எனும் கூடுதல் கவனமும் காரணம். இந்தப் பகுப்புகள் பராமரிப்புப் பகுப்புகள் என்பதால், BOT கணக்கில் உட்பதிகை செய்து பணியாற்றுகிறேன். தங்களின் கருத்துகளுக்கு நன்றி; கவனத்திற் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:10, 4 செப்டம்பர் 2022 (UTC)
வணக்கம் @Sridhar G: துணைப் பகுப்புகளுக்குள் கட்டுரைகளை கொண்டுவருவதற்கு நன்றி. இந்த மாற்றத்தையும் செய்தால்தான், கட்டுரையானது துணைப் பகுப்பிற்குள் மட்டும் வரும். இல்லையென்றால் தாய்ப் பகுப்பின் கீழும் இருக்கும். கட்டுரைகள் துணைப் பகுப்பிற்குள் செல்லச் செல்லவே, மற்ற கட்டுரைகளை நாம் வகைப்பிரித்தல் செய்ய இயலும். ஆரம்பம் முதல் இதனை நான் கடைப்பிடித்து வந்துள்ளேன். --SelvasivagurunathanmBOT (பேச்சு) 08:27, 7 செப்டம்பர் 2022 (UTC)
நல்லது. இன்று அதனை செய்து விடுகிறேன். ஸ்ரீதர். ஞா (✉) 08:41, 7 செப்டம்பர் 2022 (UTC)
@Sridhar G: {{வார்ப்புரு:கூகுள் தமிழாக்கக் கட்டுரை}}, {{வார்ப்புரு:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்}} ஆகியவற்றிற்கிடையே உள்ள வித்தியாசம்:- இரண்டாவது வார்ப்புருவில், < includeonly >பகுப்பு:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்< /includeonly > என்பது இருக்காது. எனவே துணைப் பகுப்பினை இடும்போதோ, அல்லது இட்டபிறகோ வார்ப்புரு மாற்றத்தை செய்யவேண்டும் என்பதனை கவனத்திற் கொள்ளுங்கள். நன்றி! (இந்தத் தகவலை எழுதி சேமிக்கும்போது, தொகுத்தல் முரண் ஏற்பட்டது; எனவே மீண்டும் எழுதியுள்ளேன்.)--SelvasivagurunathanmBOT (பேச்சு) 09:01, 7 செப்டம்பர் 2022 (UTC)
ஆயிற்று. ஸ்ரீதர். ஞா (✉) 15:16, 7 செப்டம்பர் 2022 (UTC)

நிறைவுற்ற வகைப்பிரித்தல் தொகு

வகைபிரித்தல் எனும் கட்டுரையை கணிதவியல் எனும் பகுப்பின்கீழ் கொண்டு வந்ததோடு, வகைப்பிரிப்புப் பணி இன்று நிறைவுற்றது. கடைசி வேலை தானாகவே அமைந்தது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:10, 21 சனவரி 2023 (UTC)Reply

Return to "கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்" page.