பகுப்பு பேச்சு:பாரதிய ஜனதா கட்சித் தேசியத் தலைவர்கள்

பாரதிய ஜனதா கட்சித் தேசியத் தலைவர்கள் - வல்லினம் மிகாது என நினைக்கிறேன்... கி. கார்த்திகேயன் (பேச்சு) 15:35, 15 ஏப்ரல் 2013 (UTC)

சரியே, கட்சியின் தேசியத் தலைவர்கள் என்று வர வேண்டும். பகுப்புகள் உருவாக்கும் போது சற்றே கவனம் தேவை -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:09, 15 ஏப்ரல் 2013 (UTC)

பகுப்பு மாற்றல் குறித்து

தொகு

தற்போது உள்ளடக்கங்கள் குறைவாகவே இருப்பதால், இப்பகுப்பினை நீக்கிவிட்டு புதிய தலைப்பில் பகுப்பினை உருவாக்கி தொடர்பான கட்டுரைகளிலும் பகுப்பினை மாற்றி விடலாம் என்றிருக்கிறேன். ஆட்சேபனையோ, மாற்றுக் கருத்துகளோ இருப்பின் தெரிவிக்கவும். மூன்று நாட்களுக்குப் பிறகு மாற்றலாம் என்றிருக்கிறேன். --அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 10:01, 20 ஏப்ரல் 2013 (UTC)

கார்த்தி, நான்கைந்து கட்டுரைகள் இருந்தாலே ஒரு பகுப்புக்கு போதுமே. நீக்க வேண்டாம் என நினைக்கிறேன். வேறெந்த பகுப்பாக மாற்ற நினைக்கிறீர்கள்?--சோடாபாட்டில்உரையாடுக 02:38, 24 ஏப்ரல் 2013 (UTC)
பகுப்பின் தலைப்பில் எழுத்துப்பிழை, பாரதிய ஜனதா கட்சித் தேசியத் தலைவர்கள் என தவறுதலாக இட்டுவிட்டேன். அதனால் தலைப்பை மாற்ற வேண்டியிருக்குமோ என்ற சந்தேகத்திலேயே கேட்டேன். மாற்றவேண்டிய அவசியம் இல்லையென்றால் மிக்க மகிழ்ச்சி, அவசியம் மாற்ற வேண்டுமாயின் பாரதிய ஜனதா கட்சி தேசியத் தலைவர்கள் (அ) பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர்கள் இரண்டில் ஏதாவது ஒன்றை பயன்படுத்துகிறேன். --10:24, 25 ஏப்ரல் 2013 (UTC)
Return to "பாரதிய ஜனதா கட்சித் தேசியத் தலைவர்கள்" page.