பகுப்பு பேச்சு:விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்

இந்தப் பகுப்பில் தாவரங்கள் குறித்தான கட்டுரைகள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளன. இக்கட்டுரைகளில் பொதுவான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். துறைசார்ந்த பயனர்களின் உதவி தேவைப்படுகிறது. என்னுடையப் பரிந்துரைகளை இங்கு பட்டியலிட்டுள்ளேன்:

  1. தலைப்புகள் நகர்த்தப்படல் வேண்டும்.
  2. கட்டுரையின் வடிவமைப்பு கலைக்களஞ்சிய நடைக்கு மாற்றப்படல் வேண்டும்.
  3. மேற்கோள்கள் முறையாக காட்டப்படல் வேண்டும். கூடுதல் மேற்கோள்கள் சேர்க்கப்படல் வேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:56, 25 மார்ச் 2023 (UTC)

@D Neethidoss: துறைசார்ந்த பயனர் என்பதால், கவனித்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:35, 27 மார்ச் 2023 (UTC)

துப்புரவு பணிகளில் பங்கேற்கிறேன்.நடுநாடன் (பேச்சு

) 08:55, 30 மார்ச் 2023 (UTC)

செம்மைப்படுத்துதல் தொகு

இந்தப் பகுப்பிலுள்ள தாவரங்கள் குறித்த கட்டுரைகள், விக்கிப்பீடியாவிற்குரிய தரத்திற்கு ஈடுகொடுக்கவில்லை. தானியங்கித் தமிழாக்கம் என்பன போன்று இல்லை என்பதால், நீக்கவும் இயலவில்லை. தேவைப்படும் அறிவியற் கட்டுரைகள் என்பதால், தக்கவைத்து, செம்மைப்படுத்துதலே சரியானதாகும். வடிவமைப்புக் குறித்த தெளிவின்மையால், தரமற்ற கட்டுரைகளாக உள்ளன. குறிப்பாக தலைப்புகள், மேற்கோள் சுட்டும் முறை.

செய்யவேண்டிய பொதுவான முன்னேற்றங்கள்:

  1. ஆங்கிலக் கட்டுரையுடன் மொழியிடை இணைப்பு
  2. கலைக்களஞ்சியத்திற்கு ஏற்ற வகையிலான கட்டுரை வடிவமைப்பு
  3. குறைந்தபட்சம் ஒரு மேற்கோளிற்காவது இணையத்தள இணைப்பு (தகவலை சரிபார்க்க)
  4. கட்டுரைத் தலைப்புகளில் உரிய திருத்தம்

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:59, 19 மே 2023 (UTC)Reply

Return to "விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்" page.