பக்சர் கோட்டை

இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள பக்சர் நகரில் இருக்கும் ஒரு கோட்டை

பக்சர் கோட்டை (Buxar Fort) இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள பக்சர் நகரத்தில் அமைந்துள்ளது. பக்சர் மாவட்டத்தின் தலைநகரமான இந்நகரம் கிழக்கு இந்தியாவில் கிழக்கு உத்தரப்பிரதேசத்திற்கு எல்லையாக அமைந்துள்ளது. 1054 ஆம் ஆண்டு மன்னர் ருத்ரா தியோ பக்சர் கோட்டையைக் கட்டினார். [1] தாடகை என்ற அரக்கியை இராமர் கொன்ற இடமாகவும், விசுவாமித்திர முனிவரின் ஆசிரமம் இருந்த இடமாகவும் கருதப்படுவதால் பக்சர் நகரம் கலாச்சார பாரம்பரியத்திற்கு பெயர் பெற்றது. [2]

பக்சர் கோட்டை
Buxar Fort
பகுதி: பீகார்
பக்சர், பீகார், இந்தியா
பக்சர் கோட்டை Buxar Fort is located in பீகார்
பக்சர் கோட்டை Buxar Fort
பக்சர் கோட்டை
Buxar Fort
ஆள்கூறுகள் 25°33′38″N 83°58′50″E / 25.56049°N 83.98054°E / 25.56049; 83.98054
வகை கோட்டை மற்றும் அரண்மனை
இடத் தகவல்
இட வரலாறு
கட்டிய காலம் 1054
கட்டியவர் மன்னர் ருத்ரா தியோ

பெயர்காரணம்

தொகு

பக்சர் என்ற சொல் வியாக்ராசரிலிருந்து பெறப்பட்டதாகும் துர்வாச முனிவரின் சாபத்தின் விளைவாக புலி முகம் கொண்டிருந்த வேத்சிரா புனித தொட்டியில் குளித்தபின் சாபவிமோசனம் பெற்றார். பின்னர் இவருக்கு வியாக்ராசர் என்று பெயரிடப்பட்டது. [3]

புவியியல்

தொகு

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள பக்சர் நகரில் கங்கை ஆற்றின் கரையில் பக்சர் கோட்டை அமைந்துள்ளது. [4]

வரலாறு

தொகு

பக்சர் மாவட்டம் அதன் தாய் மாவட்டமான போச்பூருடன் நெருங்கிய தொடர்பையும் பழமையான வரலாற்றையும் கொண்டுள்ளது. [5] புராணங்களின்படி, பக்சரின் பண்டைய முக்கியத்துவம் பிராமண புராணம் மற்றும் வரா புராணம் போன்ற காவியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. [6] 1764 ஆம் ஆண்டு இந்த கோட்டைக்கு அருகே பக்சர் போர் நடந்தது, கிழக்கிந்திய கம்பெனி அப்போரில் வெற்றி பெற்றது.

அகழ்வாய்வுகள்

தொகு

1926-1927 ஆம் ஆண்டில் ஆற்றங்கரையோரத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் போது 3 ஆம் நூற்றாண்டு மற்றும் 4 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பிராமி எழுத்து கல்வெட்டுகளுடன் இரண்டு முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன, [7] கோட்டையின் தெற்குப் பகுதியும் கோட்டை முகப்பும் மட்டுமே இப்போது நிற்கின்றன என்று 1812 ஆம் ஆண்டு பக்சர் கோட்டையை பார்வையிட்ட கிழக்கிந்திய கம்பெனியின் மருத்துவ அலுவலர் பிரான்சிசு புக்கானன் குறிப்பிட்டுள்ளார். கோட்டையில் பூமிக்கு அடியில் ஒரு சுரங்கப்பாதை இருந்ததாகவும், அங்கு பழங்கால உருவங்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த இடம் பாதாளகங்கை என்று அழைக்கப்பட்டதாகவும் பிரான்சிசு அப்போது கூறினார். [8] 1871-1872 ஆம் ஆண்டில் அலெக்சாண்டர் கன்னிங்ஙாம் கோட்டைக்கு வருகை தந்தபோது, கோட்டையில் எந்த வரலாற்று கலைப்பொருட்களையும் காணவில்லை என்று குறிப்பிட்டு இது முற்றிலும் பிராமணிய தளம் என்றார். தொல்பொருள் ஆர்வம் எதுவும் இங்கில்லை என்றும் கூறினார். [9]

மேற்கோள்கள்

தொகு
  1. "Buxar is a city of gods, demons and ancient civilisations". outlooktraveller. பார்க்கப்பட்ட நாள் 22 November 2018.
  2. Sinha, Nishi. Tourism Perspective in Bihar. APH Publishing. p. 77. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170249757.
  3. "History". buxar.nic.in. National Informatics Centre, Ministry of Electronics & Information Technology, Government of India. பார்க்கப்பட்ட நாள் 22 November 2018.
  4. "Bihar: A Quick Guide To Buxar". outlooktraveller. outlookindia. பார்க்கப்பட்ட நாள் 22 November 2018.
  5. "History of District - Buxar". Vidyadaan. Archived from the original on 2 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 26 November 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "History of District - Buxar". Vidyadaan. Archived from the original on 2 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 26 November 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Bihar: A Quick Guide To Buxar". outlooktraveller. outlookindia. பார்க்கப்பட்ட நாள் 26 November 2018.
  8. "Buxar Fort". outlooktraveller. outlookindia. பார்க்கப்பட்ட நாள் 27 November 2018.
  9. "Things to See & Do". outlooktraveller. outlookindia. பார்க்கப்பட்ட நாள் 27 November 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்சர்_கோட்டை&oldid=3561353" இலிருந்து மீள்விக்கப்பட்டது