பக்த நந்தனார் (1935 திரைப்படம்)
மணிக்லால் டாண்டன் இயக்கத்தில் 1935 இல் வெளியான தமிழ்த்திரைப்படம்
பக்த நந்தனார் (Bhakta Nandanar) 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஹாலிவுடில் பயிற்சி பெற்ற மணிக்லால் டாண்டன் என்பவர் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார்.[1][2][3][4][5][6]
பக்த நந்தனார் | |
---|---|
இயக்கம் | மணிக்லால் டாண்டன் |
தயாரிப்பு | ஹசன்தாஸ் கிளாசிக்கல் டாக்கீஸ் |
நடிப்பு | கே. பி. சுந்தராம்பாள் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் |
வெளியீடு | 1935 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
திரைக்கதை
தொகுகோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றிய நந்தனார் சரித்திரம் காவியத்தை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது.
நடிகர்கள்
தொகு- கே. பி. சுந்தராம்பாள் - நந்தனாராக
- மகாராஜபுரம் விசுவநாத ஐயர் - வேதியராக
சில துணுக்குகள்
தொகு- பக்த நந்தனாரில் மொத்தம் 41 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இவற்றில் சுந்தராம்பாள் மட்டும் 19 பாடல்களைப் பாடியிருந்தார்.
- அக்காலத்தில் கருநாடக இசையில் மிகவும் புகழ்பெற்றிருந்த மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் நடித்த ஓரேயொரு திரைப்படம் இதுவாகும்.[1]
- இத்திரைப்படத்தின் படச்சுருள்கள் ஒரு தீ விபத்தில் முழுமையாக எரிந்து போனதால் இதன் பிரதிகள் தற்போது கிடைப்பதற்கில்லை.[1]
இவற்றையும் பார்க்கவும்
தொகு- நந்தனார் - திருநாளைப் போவார் நாயனார்
- நந்தனார் சரித்திரம் - காவியம்
- நந்தனார் (1933 திரைப்படம்)
- நந்தனார் (1942 திரைப்படம்)
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Guy, Randor (8 பெப்பிரவரி 2008). "Blast from the past: Nandanar -- 1935". தி இந்து. Archived from the original on 8 செப்டெம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 5 நவம்பர் 2017.
- ↑ Baskaran, S. Theodore (1996). The eye of the serpent: an introduction to Tamil cinema. Chennai: East West Books. p. 80.
- ↑ Baskaran, S. Theodore (1981). The message bearers: the nationalist politics and the entertainment media in South India, 1880–1945. Chennai: Cre-A. p. 119.
- ↑ National Film Development Corporation of India (1998). Indian cinema: a visual voyage (Hardback ed.). Ministry of Information and Broadcasting, Govt of India. p. 127. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-230-0646-8.
- ↑ Rajadhyaksha, Ashish; Willemen, Paul (1994). Encyclopaedia of Indian cinema. British Film Institute. p. 309. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85170-455-5.
- ↑ "He transcended barriers with aplomb, The Hindu 1 February 2002". Archived from the original on 30 நவம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 23 நவம்பர் 2009.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)