பக்ரியா குறிப்பட கோபுரம்

பாக்கித்தானிலுள்ள வானளாவி

பக்ரியா குறிப்பட கோபுரம் (Bahria Icon Tower) பாக்கித்தான் நாட்டின் கராச்சியில் உள்ள கிளிஃப்டனின் கடலோர நகராட்சியில் கட்டப்பட்டுள்ளது. வானளாவிய வளாகமான இந்த கட்டடம் 62-அடுக்கு கோபுரத்தை உள்ளடக்கியுள்ளது. 300 மீட்டர் (980 அடி)[2][3] உயரம் கொண்டு பாக்கித்தானின் மிக உயரமான கட்டிடமாகவும் தெற்காசியாவில் ஐந்தாவது உயரமான கட்டிடமாகவும் சிறப்பு பெற்றுள்ளது.[5][6] வளாகத்திற்கு அருகில் ஒரு 42-அடுக்கு கட்டடத்தையும் உள்ளடக்கியுள்ளது.[7] இது பக்ரியா நகர குழுமத்திற்கு சொந்தமானதாகும்.

பக்ரியா குறிப்பட கோபுரம்
Bahria Icon Tower
بحریہ آئکون ٹاور
சூன் 2021 இல் பக்ரியா குறிப்பட கோபுரம்
Map
பொதுவான தகவல்கள்
நிலைமைநிறைவு
இடம்பக்ரியா குறிப்பட கோபுரம், #5, தொகுதி 4, சாக்ரா-இ-பிர்தௌசி, கிளிப்டன் கராச்சி, பாக்கித்தான்
ஆள்கூற்று24°48′42″N 67°01′38″E / 24.8117°N 67.0271°E / 24.8117; 67.0271
கட்டுமான ஆரம்பம்2009
முகடு நாட்டப்பட்டது2017
நிறைவுற்றது2022
செலவுஅமெரிக்க டாலர் 162.5 மில்லியன்[4]
உரிமையாளர்பக்ரியா நகரம்
உயரம்
முனை305 மீட்டர்கள் (1,001 அடி)[2][3]
கூரை273 மீட்டர்கள் (896 அடி)[1]
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை62 + 7 தரையடி
தளப்பரப்பு2,230,500 m2 (24,009,000 sq ft)
உயர்த்திகள்16
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)அர்சத் சாகித் அப்துல்லா நிறுவனம்.
மேம்பாட்டாளர்பக்ரியா நகரம்
முதன்மை ஒப்பந்தகாரர்அபிப் ரபீக் தனியார் நிறுவனம்
பிற தகவல்கள்
தரிப்பிடம்1,700 வாகனங்கள்
வலைதளம்
bticon.com

அமைவிடம் தொகு

உயர்தர கிளிஃப்டன் பகுதியில் இந்த வளாகம் நான்கு ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.[8] 8 ஆம் நூற்றாண்டின் ஆன்மீகவாதியாகவும் கராச்சியின் புரவலர் துறவியாகவும் பரவலாகக் கருதப்படும் அப்துல்லா சா காசியின் [9]நினைவிடத்திற்கும் பாக் இப்னே காசிம் பூங்காவிற்கும் அருகில் இவ்வளாகம் அமைந்துள்ளது.[10]

வரலாறு தொகு

பக்ரியா குறிப்பட கோபுரத்தின் கட்டுமானம் 2009 ஆம் ஆண்டு தொடங்கியது.[11] கட்டுமானத்தின் போது, அடித்தளம் அமைப்பதற்கான அகழ்வு பணிகளின்போது போக்குவரத்துக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.[12] 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இறுதிகட்டப் பணிகள் நிறைவடைந்தன.[13] நவம்பர் 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் திருமண மண்டபம் மற்றும் திரையரங்கம் நிறுவப்பட்ட இடத்தில் சிறிய தீ விபத்து ஏற்பட்டது.[14] பக்ரியா குழுமத்தின் உரிமையாளரான மாலிக் ரியாசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளால் கட்டுமானத்தின் வேகம் மந்தமடைந்தது.[15]

உள்ளமைப்பு தொகு

பிரதான கட்டடத்தின் 10 தளங்களில் பெறுநிறுவன அலுவலகங்கள் அமைந்துள்ளன. 40 தளங்கள் அடுக்குமாடி குடியிருப்புகளும், பாக்கித்தானின் மிக உயரமான மொட்டை மாடி உணவகம், இரட்டை அடுக்கு அதிவேக தூக்கிகள், ஒரு பேரங்காடி ஆகியவை இடம்பெரற்றுள்ளன.[16][17][18] 16 அதிவேக உயர்த்திகள், 1700 வாகன நிறுத்துமிடங்கள்[19] என மொத்தமாக 2,230,500 சதுரமீட்டர் (24,008,902 அடிகள்) பரப்பளவில் வானளாவி அமைந்துள்ளது.[19]

வளாகத்தின் 62 அடுக்குகள் தரை மட்டத்திற்கு மேலேயும் 7 அடுக்குகள் தரைமட்டத்திற்கு கீழேயும் அமைந்துள்ளன.[11] செல்போர் நிறுவனத்தின் எஃகு கொள்முதல் செய்யப்பட்டு கண்ணாடி முகப்புடன் வலுவூட்டப்பட்ட கருங்கற்காரையால் வளாகம் கட்டப்பட்டுள்ளது.[20]

விருதுகள் தொகு

  • இடத்தை திறம்பட பயன்படுத்தியதற்காகவும், பயன்பாட்டை அதிகப்படுத்தியதற்கும் இவ்வளாகம் கட்டடக்கலை வடிவமைப்பு விருதுகளை வென்றது.
  • 2012 ஆம் ஆண்டு உயர்தர கட்டிடக்கலைக்கான ஆசியா பசிபிக்கின் பன்னாட்டு சொத்து விருதை இவ்வளாகம் வென்றது.

படக்காட்சியகம் தொகு

 

மேற்கோள்கள் தொகு

  1. "Bahria Town ICON - The Skyscraper Center". www.skyscrapercenter.com. பார்க்கப்பட்ட நாள் 2018-12-27.
  2. 2.0 2.1 "Bahria Town Icon". 9 June 2020.
  3. 3.0 3.1 "62-storey Bahria Town Icon reaches structural completion". Pakistan Today. https://archive.pakistantoday.com.pk/2017/10/16/62-storey-bahria-town-icon-reaches-structural-completion/. 
  4. D4Sys. "Welcome to Costveyors (Pvt.) Ltd.- Bahria Town Icon". Archived from the original on 3 January 2016. பார்க்கப்பட்ட நாள் 17 December 2015.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  5. Khurram Shahzad (January 22, 2016). "Country's tallest building 'Bahria Town Icon' inaugurated in Karachi". Daily Pakistan. http://en.dailypakistan.com.pk/pakistan/countrys-tallest-building-bahria-town-icoe-inaugurated-in-karachi/. 
  6. Sam Neymra (January 24, 2016). "Country's Tallest Building Bahria Icon Tower Inaugurated In Karachi". TheNewsTrack இம் மூலத்தில் இருந்து 25 ஜனவரி 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160125165948/http://www.thenewstrack.com/countrys-tallest-building-bahria-icon-tower-inaugurated-in-karachi/. 
  7. "Amp".
  8. "Executive Summary" (PDF). Archived from the original (PDF) on 2016-09-11. பார்க்கப்பட்ட நாள் 2016-05-31.
  9. Hasan, Arif (27 April 2014). "Karachi's Densification". Dawn. பார்க்கப்பட்ட நாள் 6 December 2016. The other site is the over 1,200-year-old tomb of Ghazi Abdullah Shah, a descendant of Imam Hasan. He has become the patron saint of Karachi and his urs is an important event for the city and its inhabitants.
  10. Mangi, Faseeh. "In the 'Best Hidden' Frontier Market, a Boom Signals a Pakistan Revival". Bloomberg.com. பார்க்கப்பட்ட நாள் 2016-05-31.
  11. 11.0 11.1 "Bahria Town Icon, Karachi | 1193055 | EMPORIS". www.emporis.com. பார்க்கப்பட்ட நாள் 2020-04-14.
  12. Faiza Ilyas (July 23, 2014). "Outcry over Clifton high-rise, traffic project during Sepa hearing". Dawn. Dawn Media. http://www.dawn.com/news/1121001. 
  13. "62-storey Bahria Town Icon reaches structural completion - Pakistan Today". www.pakistantoday.com.pk. பார்க்கப்பட்ட நாள் 2020-04-14.
  14. "Small fire breaks out in Bahria Icon Tower in Karachi's Clifton | SAMAA". Samaa TV (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-14.
  15. Asad, Malik (2020-02-08). "Malik Riaz, others summoned in Bahria Icon Tower reference case". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-14.
  16. "90% work completed of Bahria Town Icon, will be inaugurated today - Pakistan - Dunya News". dunyanews.tv. பார்க்கப்பட்ட நாள் 2016-05-31.
  17. "Pakistan's tallest building 'Bahria Town Icon' inaugurated". www.thenews.com.pk. பார்க்கப்பட்ட நாள் 2016-05-31.
  18. "Infrastructure development: It's time to fly over Clifton - The Express Tribune". The Express Tribune (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-05-01. பார்க்கப்பட்ட நாள் 2016-05-31.
  19. 19.0 19.1 "Bahria Town ICON - The Skyscraper Center". www.skyscrapercenter.com. பார்க்கப்பட்ட நாள் 2020-04-14.
  20. "Cellpor Building Solutions". www.cellpor.com.

புற இணைப்புகள் தொகு