பங்கசினான்
பங்கசினான் (Pangasinan) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், இலோகொஸ் பிராந்தியத்தில் அமைந்துள்ள நான்கு மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் லிங்காயென் ஆகும். இம்மாகாணத்தில் 1,333 கிராமங்களும், 44 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் மூன்றாம் அமடோ எஸ்பினோ (Amado Espino III) ஆவார். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக பங்கசினான் மாகாணத்தின் சனத்தொகை 2,956,726 ஆகும்.[2] இதன் மொத்த நிலப்பரப்பளவு 5,451.01 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 15ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 6ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் இலோகானோ, தகலாகு , ஆங்கிலம் உள்ளடங்கலாக ஐந்து பிரதான மொழிகள் பேசப்படுகின்றன.
பங்கசினான் | |
---|---|
மாகாணம் | |
நாடு | பிலிப்பீன்சு |
பிராந்தியம் | இலோகொஸ் பிராந்தியம் |
நேர வலயம் | ஒசநே+8 (பிசீநே) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "List of Provinces". PSGC Interactive. Makati City, Philippines: National Statistical Coordination Board. Archived from the original on 11 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 30 December 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Population of the provine". Archived from the original on 2011-07-09. பார்க்கப்பட்ட நாள் 2017-01-10.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)