பங்கஜ் சிங்

பங்கஜ் சிங் (Pankaj Singh பிறப்பு 6 மே 1985) ஒரு இந்திய துடுப்பாட்ட வீரர் ஆவார் . [1] டிசம்பர் 2018 இல், ரஞ்சி டிராபியில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப் பந்துவீச்சாளர் எனும் சாதனை படைத்தார். [2] இவர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டம் ஆகிய சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார்.மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்டம், முதல் தரத் துடுப்பாட்டம் ஆகிய உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். மேலும் இவர் 2004 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2006 ஆம் ஆண்டில் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமான இவர் 2014 ஆம் ஆண்டில் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார். இவர் தற்போது வரை 117 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 1513 ஓட்டங்களையும் , 76 பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 447 ஓட்டங்களையும் ,1 ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியு 3 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.

உள்ளூர் , ஐபிஎல்தொகு

அவர் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடுகிறார். [1] [3] 2006 ஆம் ஆண்டில் ராஜஸ்தானை ரஞ்சி பிளேட் லீக் தொடரில் பிரநிதித்துவப்படுத்தினார். அந்தத் தொடரின் இறுதியில் மொத்தமாக 21 இழப்புகளை 20.95 என்ற கணக்கில் எடுத்தார். தென் ஆப்ரிக்கா ஆ அணிக்கு எதிரான போட்டிக்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்த இந்தியாவின் தேர்வுத் துடுப்பாட்ட அணியில் இவர் தேர்வானார். ஸ்ரீசாந்த் மற்றும் முனாஃப் படேல் ஆகியோர் காயம் காரணமாக விலகியதால் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அவர் 2017–18 ரஞ்சி டிராபியில் ராஜஸ்தான் துடுப்பாட்ட அனிக்காக ஐந்து போட்டிகளில் விளையாடி 13 இழப்புகளைக் கைப்பற்றினார்.இதன்மூலம் அதிக இழப்புகளைக் கைபற்றிய வீரர்கள் வரிசையில் இவர் முதலிடம் பிடித்தார். [4]

முதல் தரத் துடுப்பாட்டம்தொகு

இவர் 2004 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.2004 ஆம் ஆண்டில் டெல்லி நவமபர் 25 இல் சர்வீசஸ் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் மும்பை துடுப்பாட்ட அணி சார்பாக இவர் விளையாடினார்.

இருபது20தொகு

2007 ஆம் ஆண்டில் இவர் இருபது20 போட்டியில் அறிமுகமானார். ஏப்ரல் 4 இல்ஜெய்பூரில் உத்தரப் பிரதேச துடுப்பாட்ட அணிக்கு எதிரான இருபது20 போட்டியில் இவர் உத்தரப் பிரதேச துடுப்பாட்ட அணி சார்பாக தனது முதல் போட்டியில் விளையாடினார்.

பட்டியல் அதொகு

2006 ஆம் ஆண்டில் இவர் பட்டியல் அ போட்டியில் அறிமுகமானார். பெப்ரவரி 10, ஜெய்பூரில் மத்தியப் பிரதேச துடுப்பாட்ட அணிக்கு எதிரான இருபது20 போட்டியில் இவர் ராஜஸ்தான் துடுப்பாட்ட அணி சார்பாக போட்டியில் விளையாடினார்.

சர்வதேசப் போட்டிகள்தொகு

2017 ஆம் ஆண்டில் இவர் சர்வதேச துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். சூலை 27, சௌதாம்ப்டனில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக இந்தியத் துடுப்பாட்ட அணி சார்பாக தனது முதல் போட்டியில் விளையாடினார்.

இந்தியத் துடுப்பாட்ட அணி 2007 ஆம் ஆண்Dஇல் ஆத்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. பார்டர்-கவாஸ்கர் கிண்ணத் தொடருக்கான இந்திய தேர்வுத் துடுப்பாட்ட அணியில் இவர் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அந்தப் போட்டியில் இவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பங்கஜ்_சிங்&oldid=2870281" இருந்து மீள்விக்கப்பட்டது