பார்டர்-கவாஸ்கர் கிண்ணம்

பார்டர்-கவாஸ்கர் கிண்ணம் (Border-Gavaskar Trophy) என்பது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே விளையாடப்படும் தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் ஆகும். இது ஐசிசியின் எதிர்கால சுற்றுப்பயண திட்டம் மூலம் பல்வேறு காலக்கட்டங்களில் நடைபெற்று வருகிறது. ஒருவேளை தொடர் முடிவு எட்டப்படாமல் நிறைவடைந்தால், முன்பு கிண்ணத்தை வைத்திருக்கும் அணி அதைத் தக்கவைத்துக் கொள்ளும்.

பார்டர்-கவாஸ்கர் கிண்ணம்
பார்டர்-கவாஸ்கர் கோப்பை
நாடு(கள்) ஆத்திரேலியா
 இந்தியா
நிர்வாகி(கள்)சிஏ
பிசிசிஐ
வடிவம்தேர்வுத் துடுப்பாட்டம்
முதல் பதிப்புஆத்திரேலியா 1996–97 (இந்தியா) [1]
கடைசிப் பதிப்பு2023 (இந்தியா)
அடுத்த பதிப்பு2024-25
போட்டித் தொடர் வடிவம்தேர்வு தொடர்
மொத்த அணிகள்2
தற்போது கோப்பையை வைத்திருப்பவர் இந்தியா (11-வது முறை)
அதிகமுறை வெற்றிகள் இந்தியா (11 முறை)
அதிகபட்ச ஓட்டங்கள்இந்தியா சச்சின் டெண்டுல்கர் (3,262) [2]
அதிகபட்ச வீழ்த்தல்கள்ஆத்திரேலியா நேத்தன் லயன் (116) [3]

இந்த தொடருக்கு ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர் மற்றும் இந்தியாவின் சுனில் கவாஸ்கர் ஆகியோரின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. இருவரும் தங்கள் துடுப்பாட்ட வாழ்க்கையில் 10,000 தேர்வுத் துடுப்பாட்ட ஓட்டங்களை அடித்த முதல் 2 தேர்வுத் துடுப்பாட்ட வீரர்கள் ஆவர். அந்தந்த அணிகளின் முன்னாள் அணித் தலைவர்களான இருவரும் தேர்வுத் துடுப்பாட்டத்தில் அதிக ஓட்டங்கள் எடுத்து உலக சாதனை படைத்தவர்கள் ஆவர்.

தேர்வுத் தொடர்கள்

தொகு
ஆண்டு போட்டி நடத்தும் நாடு முதல் போட்டி தேர்வு இந்தியா ஆத்திரேலியா சமன் வெற்றி கோப்பை தொடர் நாயகன்
1996–97   இந்தியா 10 அக்டோபர் 1996
1
1
0
0
இந்தியா இந்தியா   நயன் மோங்கியா
1997–98   இந்தியா 6 மார்ச் 1998
3
2
1
0
இந்தியா இந்தியா   சச்சின் டெண்டுல்கர்
1999–2000   ஆத்திரேலியா 10 திசம்பர் 1999
3
0
3
0
ஆத்திரேலியா ஆத்திரேலியா   சச்சின் டெண்டுல்கர்
2001   இந்தியா 27 பெப்ரவரி 2001
3
2
1
0
இந்தியா இந்தியா   ஹர்பஜன் சிங்
2003-04   ஆத்திரேலியா 4 திசம்பர் 2003
4
1
1
2
சமன் இந்தியா   ராகுல் திராவிட்
2004   இந்தியா 6 அக்டோபர் 2004
4
1
2
1
ஆத்திரேலியா ஆத்திரேலியா   டேமியன் மார்ட்டின்
2007-08   ஆத்திரேலியா 26 திசம்பர் 2007
4
1
2
1
ஆத்திரேலியா ஆத்திரேலியா   பிறெட் லீ
2008   இந்தியா 9 அக்டோபர் 2008
4
2
0
2
இந்தியா இந்தியா   இஷாந்த் ஷர்மா
2010   இந்தியா 1 அக்டோபர் 2010
2
2
0
0
இந்தியா இந்தியா   சச்சின் டெண்டுல்கர்
2011-12   ஆத்திரேலியா 26 திசம்பர் 2011
4
0
4
0
ஆத்திரேலியா ஆத்திரேலியா   மைக்கல் கிளார்க்
2013   இந்தியா 22 பெப்ரவரி 2013
4
4
0
0
இந்தியா இந்தியா   ரவிச்சந்திரன் அசுவின்
2014-15   ஆத்திரேலியா 9 திசம்பர் 2014
4
0
2
2
ஆத்திரேலியா ஆத்திரேலியா   ஸ்டீவ் சிமித்
2017   இந்தியா 23 பெப்ரவரி 2017
4
2
1
1
இந்தியா இந்தியா   ரவீந்திர ஜடேஜா
2018-19   ஆத்திரேலியா 6 திசம்பர் 2018
4
2
1
1
இந்தியா இந்தியா   செதேஷ்வர் புஜாரா
2020–21   ஆத்திரேலியா 17 திசம்பர் 2020
4
2
1
1
இந்தியா இந்தியா   பாட் கம்மின்ஸ்
2022–23   இந்தியா 9 பிப்ரவரி 2023
4
2
1
1
இந்தியா இந்தியா   ரவீந்திர ஜடேஜா

  ரவிச்சந்திரன் அஷ்வின்

மேற்கோள்கள்

தொகு
  1. "Records / Border-Gavaskar Trophy / Series results". espncricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 7 January 2018.
  2. Records / Border-Gavaskar Trophy / Most runs, பார்க்கப்பட்ட நாள் 2019-10-17
  3. Records / Border-Gavaskar Trophy / Most wickets, பார்க்கப்பட்ட நாள் 2019-10-17
  4. "Pucovski, Green headline Test and Australia A squads". cricket.com.au (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-12.