இந்தியத் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2014-2015

இந்திய துடுப்பாட்ட அணியின் சுற்றுப் பயணம்

2014-2015 இந்தியத் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலிய சுற்றுப்பயணம் 2014 நவம்பர் 24 முதல் 2015 பெப்ரவரி 1 வரை இடம்பெற்றது. இதன் போது இந்திய அணி ஆத்திரேலிய அணியுடன் இரண்டு முதல்-தரப் பயிற்சி ஆட்டங்களிலும் நான்கு தேர்வுப் போட்டிகளிலும் பங்காற்றியது. முதல் தேர்வுப் போட்டி டிசம்பர் 4 இல் நடத்தத் தீர்மானிக்கப்பட்டிருந்தாலும், பிலிப் இயூசின் திடீர் இறப்பை அடுத்து முதல் தேர்வுப் போட்டி டிசம்பர் 9 இல் நடைபெற்றது.[1][2][3] மூன்றாம் தேர்வுப் போட்டி சமநிலையில் முடிந்ததால், இந்திய அணித் தலைவர் மகேந்திரசிங் தோனி தேர்வுப் போட்டிகளில் இருந்து உடனடியாக இளைப்பாறுவதாக அறிவித்தார்.[4] சிட்னி நகரில் இடம்பெற்ற 4வது இறுதித் தேர்வுப் போட்டி சமநிலையில் முடிவடைந்ததை அடுத்து, ஆத்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் தேர்வுத் தொடரை வென்று போர்டர்-கவாஸ்கர் கிண்ணத்தைப் பெற்றது.

ஆத்திரேலியாவில் இந்தியத் துடுப்பாட்ட அணியின் சுற்றுப்பயனம், 2014-15
ஆத்திரேலியா
இந்தியா
காலம் 24 நவம்பர் 2014 – 10 சனவரி 2015
தலைவர்கள் மைக்கல் கிளார்க் (1வது தேர்வு)
ஸ்டீவ் சிமித் (2-4 தேர்வுகள்)
விராட் கோலி (1-ம், 4-ம் தேர்வுகள்)
மகேந்திரசிங் தோனி (2-ம், 3-ம் தேர்வுகள்)
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 4-ஆட்டத் தொடரில் ஆத்திரேலியா 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் ஸ்டீவ் சிமித் (769) விராட் கோலி (692)
அதிக வீழ்த்தல்கள் நேத்தன் லியோன் (23) முகம்மது சமி (15)
தொடர் நாயகன் ஸ்டீவ் சிமித் (ஆசி)

இந்திய அணி கார்ல்ட்டன் மிட் முத்தரப்பு ஒருநாள் போட்டிகளில் 2015 சனவரி 16 முதல் பெப்ரவரி 1 வரை கலந்து கொண்டு ஆத்திரேலிய, இங்கிலாந்து அணிகளுடன் மோதவிருக்கிறது.[5]

அணிகள் தொகு

தேர்வுகள்
  ஆத்திரேலியா   இந்தியா

தேர்வுத் தொடர் (போர்டர்-கவாஸ்கர் கிண்ணம்) தொகு

1வது தேர்வுப் போட்டி தொகு

9–13 டிசம்பர் 2014
அறிக்கை
7/517d (120 ஓவர்கள்)
ஸ்டீவ் சிமித் 162* (231)
கார்ன் சர்மா 2/143 (33 ஓவர்கள்)
444 (116.4 ஓவர்கள்)
விராட் கோலி 115 (184)
நேத்த லியோன் 5/134 (36 ஓவர்கள்)
5/290d (69 ஓவர்கள்)
டேவிட் வார்னர் 102 (166)
கார்ன் சர்மா 2/95 (16 ஓவர்கள்)
315 (87.1 ஓவர்கள்)
விராட் கோலி 141 (175)
நேத்தன் லியோன் 7/152 (34.1 ஓவர்கள்)
ஆத்திரேலியா 48 ஓட்டங்களால் வெற்றி
அடிலெயிட் ஓவல், அடிலெயிட்
நடுவர்கள்: இயன் கூல்ட் (இங்), மராயிஸ் எராஸ்மஸ் (தெ.ஆ)
ஆட்ட நாயகன்: நேத்தன் லியோன் (ஆசி)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலிய அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • இரண்டாம் நாள் ஆட்டம் மழை காரணமாக 32 ஓவர்கள் மட்டுமே விளையாடப்பட்டது.
  • கார்ன் சர்மா (இந்) தனது முதலாவது தேர்வுப் போட்டியை விளையாடினார்.
  • பிலிப் இயூசின் இறப்பை நினைவுகூர்ந்து அவர் "13வது ஆட்டக்காரர்' ஆக அறிவிக்கப்பட்டார்.

2வது தேர்வுப் போட்டி தொகு

17–21 டிசம்பர் 2014
அறிக்கை
408 (109.4 ஓவர்கள்)
முரளி விஜய் 144 (213)
ஜோசு அசில்வுட் 5/68 (23.2 ஓவர்கள்)
505 (109.4 ஓவர்கள்)
ஸ்டீவ் சிமித் 133 (191)
உமேஸ் யாதவ் 3/101 (25 ஓவர்கள்)
224 (64.3 ஓவர்கள்)
ஷிகர் தவான் 81 (145)
மிட்ச்செல் ஜோன்சன் 4/41 (17.3 ஓவர்கள்)
6/130 (23.1 ஓவர்கள்)
கிரிஸ் ரொஜர்சு 55 (57)
இஷாந்த் ஷர்மா 3/38 (9 ஓவர்கள்)
ஆத்திரேலியா 4 விக்கெட்டுகளால் வெற்றி
கபா, பிரிஸ்பேன்
நடுவர்கள்: இயன் கூல்ட் (இங்), மராயிஸ் எராஸ்மஸ் (தெ.ஆ)
ஆட்ட நாயகன்: ஸ்டீவ் சிமித் (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடியது.
  • 2ம் நாள் ஆட்டம் மழை காரணமாக முன்னதாகவே நிறுத்தப்பட்டது.
  • ஜோசு ஹஸில்வுட் தனது முதலாவது தேர்வுப் போட்டியை விளையாடினார்.

3வது தேர்வுப் போட்டி தொகு

26–30 டிசம்பர் 2014
அறிக்கை
530 (142.3 ஓவர்கள்)
ஸ்டீவ் சிமித் 192 (305)
முகம்மது சமி 4/138 (29 ஓவர்கள்)
465 (128.5 ஓவர்கள்)
விராட் கோலி 169 (272)
ராயன் ஹரிஸ் 4/70 (26 ஓவர்கள்)
9/318d (98 ஓவர்கள்)
சோன் மார்ஷ் 99 (215)
இஷாந்த் ஷர்மா 2/49 (20 ஓவர்கள்)
6/174 (66 ஓவர்கள்)
விராட் கோலி 54 (99)
ராயன் ஹரிஸ் 2/30 (16 ஓவர்கள்)
ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிந்தது.
மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம், மெல்பேர்ண்
நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்கி), குமார் தர்மசேன (இல.)
ஆட்ட நாயகன்: ராயன் ஹரிசு (ஆசி)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலிய அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • 4ம் நாள் ஆட்டத்தில் மழையினால் 1 மணி நேரம் ஆட்டம் தடைப்பட்டது.
  • ஜோ பர்ன்சு, (ஆசி), லோகேஷ் ராகுல் (இந்) இருவருக்கும் இது அவர்களது முதலாவது தேர்வுப் போட்டியாகும். இந்திய அணித் தலைவர் மகேந்திரசிங் தோனி தேர்வுப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.[6]

4வது தேர்வுப் போட்டி தொகு

6–10 சனவரி 2015
அறிக்கை
7/572d (152.3 ஓவர்கள்)
ஸ்டீவ் சிமித் 117 (208)
முகம்மது சமி 5/112 (28.3 ஓவர்கள்)
475 (162 ஓவர்கள்)
விராட் கோலி 147 (230)
மிட்ச்செல் ஸ்டார்க் 3/106 (32 ஓவர்கள்)
6/251d (40 ஓவர்கள்)
ஸ்டீவ் சிமித் 71 (70)
ரவிச்சந்திரன் அசுவின் 4/105 (19 ஓவர்கள்)
7/252 (89.5 ஓவர்கள்)
முரளி விஜய் 80 (165)
ஜோசு ஹாசில்வுட் 2/31 (17 ஓவர்கள்)
ஆட்டம் சமநிலையில் முடிந்தது
சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி
நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்), குமார் தர்மசேன (இல)
ஆட்ட நாயகன்: ஸ்டீவ் சிமித் (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலிய அணி முதலிலில் துடுப்பாடியது.
  • முதற்தடவையாக ஆத்திரேலிய அணியின் முதல் ஆறு துடுப்பாட்ட வீரர்களும் முதலாவது இன்னிங்சு ஒன்றில் அரைச்-சதம் அடித்தனர்.[7]

கார்ல்ட்டன் மிட் முத்தரப்பு ஒருநாள் தொடர் தொகு

ஆரம்பத் தொடர் தொகு

16 சனவரி
14:20 (ப/இ)
அறிக்கை
இங்கிலாந்து  
234 (47.5 ஓவர்கள்)
  ஆத்திரேலியா
235/7 (39.5 ஓவர்கள்)
இயோன் மோர்கன் 121 (136)
மிட்ச்செல் ஸ்டார்க் 4/42 (8.5 ஓவர்கள்)
டேவிட் வார்னர் 127 (116)
கிரிஸ் வோகஸ் 4/40 (8 ஓவர்கள்)
ஆத்திரேலியா 3 விக்கெட்டுகளால் வெற்றி
சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), சைமன் பிரை (ஆசி)
ஆட்ட நாயகன்: மிட்ச்செல் ஸ்டார்க் (ஆசி)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • இங்கிலாந்தின் ஓட்ட வீதத்தை விட ஆத்திரேலியாவைன் ஓட்ட வீதம் 1.25 மடங்கு அதிகமாக இருந்ததால், ஆத்திரேலிய அணிக்கு மேலதிக ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. "Border-Gavaskar Trophy, 2014/15". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 செப்டம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. Australia's summer schedule released
  3. India could face 4-0 loss in Australia - McGrath
  4. "Mahendra Singh Dhoni: India captain quits Test cricket". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 30 டிசம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. Australia Tri-Series schedule
  6. Dhoni retires from Test cricket, கிரிக்கின்ஃபோ, டிசம்பர் 30, 2014
  7. "Australia on top after making 572". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2015.

வெளி இணைப்புகள் தொகு