பசந்தி தேவி கல்லூரி
வகை | இளங்கலை மற்றும் முதுகலை கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 5 August 1959 |
சார்பு | கொல்கத்தா பல்கலைக்கழகம் |
Academic affiliation | கொல்கத்தா பல்கலைக்கழகம் |
தலைவர் | பேராசிரியர் (முனைவர்) சிப்ரஞ்சன் சாட்டர்ஜி |
முதல்வர் | டாக்டர் இந்திலா குஹா |
கல்வி பணியாளர் | டாக்டர் அதிதி சர்க்கார் (ஒருங்கிணைப்பாளர்-IQAC) |
நிருவாகப் பணியாளர் | ஸ்ரீ சாமிக் சவுத்ரி (நிர்வாக உதவியாளர்) |
மாணவர்கள் | 1500+ |
பட்ட மாணவர்கள் | 1400+ |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 100+ |
அமைவிடம் | 147B, ராஷ் பிஹாரி ஏவ், பாலிகங்கே , , , 743355 , 22°31′09″N 88°21′42″E / 22.519302°N 88.3616963°E |
வளாகம் | நகர்ப்புறம் |
மொழி | பெங்காலி மற்றும் ஆங்கிலம் |
படிமம்:Basanti Devi College logo.jpg | |
பசந்தி தேவி கல்லூரி என்பது கொல்கத்தாவில் மேற்கு வங்க அரசால் 1959 ஆம் ஆண்டு பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டதும் அரசு நிதியுதவி பெறும் முதல் பெண்கள் கல்லூரியுமாகும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பிரித்தானிய ஆட்சியின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட முதல் இந்தியப் பெண்மணியும், சிறந்த சுதந்திரப் போராட்ட வீரரான ஸ்ரீ சித்தரஞ்சன் தாஸின் மனைவியுமான, சுதந்திரப் போராட்ட வீரர் பசந்தி தேவியின் பெயரால் இப்பெயர் பெற்றுள்ளது. இக்கல்லூரி, கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1]
கல்லூரி அமைப்பு
தொகுநகர்ப்புற மற்றும் கிராமப்புற சந்திப்பில் அமைந்துள்ள இந்த கல்லூரி இவ்விரு பகுதிகளைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மை சமூகங்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள பெண் மாணவர்களின் கல்வித்தேவைகளைப் பூர்த்தி செய்ய பயன்படுகிறது.இக்கல்லூரி சிறப்புத் தேவையுடைய பெண்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்பை வழங்குகிறது.[2]
கல்கத்தா பல்கலைக்கழகத்தால் நிர்ணயிக்கப்பட்ட கல்லூரிப் பாடத்திட்டத்துடன், பெண் மாணவர்களின் சுய-உதவி திறன், தன்னம்பிக்கை மற்றும் சுதந்திரத்தை வளர்த்துக் கொள்ள உதவுவதன் மூலம் அவர்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது. கல்கத்தா பல்கலைக்கழகத்தின் கீழ் BA (Hons/Major/General), B.Sc (Hons/General) மற்றும் ஆங்கிலத்தில் MA (சுய நிதி) & MA அரசியல் அறிவியலில் (சுய நிதி) ஆகிய இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளை இக்கல்லூரி வழங்கிவருகிறது.
இக்கல்லூரியில் நேதாஜி சுபாஸ் திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் கீழ் ஒரு ஆய்வு மையமும் உள்ளது (மைய குறியீடு : A-02) இது வார இறுதிகளில் மட்டும் இயங்கும்.
குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்
தொகு- லோபாமுத்ரா மித்ரா, பாடகி
- தனுஸ்ரீ சக்ரவர்த்தி, நடிகை
- ரூக்மா ரே, நடிகை
மேற்கோள்கள்
தொகு- ↑ "Affiliated College of University of Calcutta". Archived from the original on 2012-02-18.
- ↑ "கல்லூரியின் வரலாறு". Archived from the original on 2017-06-05. பார்க்கப்பட்ட நாள் 2024-02-05.