பசந்த குமார் தாசு

பசந்த குமார் தாசு (Basanta Kumar Das)(21 நவம்பர் 1899 - 6 ஏப்ரல் 1957) என்பவர் இந்திய மீன்வள விலங்கியல் நிபுணர் ஆவார். இவர் காற்றைச் சுவாசிக்கும் மீன்களைப் பற்றி ஆய்வு செய்துள்ளார். ஐதராபாத்திலுள்ள உசுமானியா பல்கலைக்கழகத்தில் விலங்கியல் பேராசிரியராகப் பணியாற்றினார்.

பசந்த குமார் தாசு
Basanta Kumar Das.jpg
பிறப்புசெப்டம்பர் 21, 1899(1899-09-21)
இறப்பு6 ஏப்ரல் 1957(1957-04-06) (அகவை 57)
குடியுரிமைஇந்தியர்
துறைமீன்வளம், விலங்கியல்
பணியிடங்கள்
கல்வி கற்ற இடங்கள்
Academic advisorsஇந்திய அறிவியல் கழக மாநாடு

வாழ்க்கை மற்றும் வேலைதொகு

தாசு மேற்கு வங்காளம், வர்தமான் மாவட்டத்தில் உள்ள கங்கூரில் பிறந்தார். இவர் முயர் மத்திய கல்லூரியில் சேர்ந்து 1918-ல் எம். எஸ். பட்டம் பெறுவதற்கு முன்பு அலகாபாத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்றார். இவர் 1920-ல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளரானார். வெளிநாட்டில் படிக்க உத்தரப் பிரதேச மாநில உதவித்தொகை பெற்றார். இவர் இம்பீரியல் கல்லூரியில் சேர்ந்தார். இங்கு ஈ. டபுல்யூ. மெக்பிரைடின் வழிகாட்டுதலின் கீழ் காற்றைச் சுவாசிக்கும் மீன்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார்.[1][2] 1926-ல் இலண்டன் பல்கலைக்கழகத்தில் அறிவியல் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் (1926-31) விலங்கியல் பேராசிரியரானார். இதன் பின்னர் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் (1931-52) பணியில் சேர்ந்தார். இவர் 1953 முதல் இறக்கும் வரை மீன்வள பிரிவு இயக்குநராக இருந்தார். ஐதராபாத் மிருகக்காட்சிசாலையின் திட்டமிடலிலும் ஈடுபட்டுள்ளார். 1940-ல் இந்திய அறிவியல் மாநாட்டின் விலங்கியல் பிரிவுக்கு இவர் தலைமை தாங்கினார். 1931-ல் இம்பீரியல் கல்லூரியின் கக்சிலி நினைவுப் பரிசைப் பெற்றார்[3] .

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பசந்த_குமார்_தாசு&oldid=3412310" இருந்து மீள்விக்கப்பட்டது