பசிளிகாதா

(பசிலிக்காடா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பசிளிகாதா அல்லது லூகானியா (இத்தாலியம்: Regione Basilicata (Lucania)) என்பது தென் இத்தாலியிலுள்ள ஒரு பகுதி. இப்பகுதி போதேன்சா மாகாணம் மற்றும் மாதேரா மாகாணம் என இரு மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மக்கட்தொகை 590,944 ஆகும். இதன் தலைநகரம் போதேன்சா ஆகும். 2004 ஆம் ஆண்டில் மக்கள் தொகை 597,768 ஆக இருந்தது. இப்பகுதி மிகவும் மலைப்பகுதியாகும். இதன் காரணமாக, நவீன காலத்தில் இப்பகுதியில் தகவல்தொடர்பு கொள்வதற்கு மிகவும் கடினமாக இருந்தது. இது இத்தாலியின் மிகக் வளர்ச்சி குறைந்த பகுதிகளாகும். இப்பகுதியின் மிக உயர்ந்த புள்ளி மொன்ட் பொலினோ 2233 மீ (7325 அடி) ஆகும். இந்த பகுதியில் ஒரு இறந்த எரிமலை, மான்டே வில்ப்ரேஷன் உள்ளது. இப்பகுதியின் பரப்பளவு 9,992 கிமீ 2 (3,858 சதுர மைல்).

பசிளிகாதா பகுதியில் உள்ள ”மடேராவின் கற்கள்”

இத்தாலி நாட்டின் மிக வறிய பகுதிகளில் ஒன்றாக இப்பகுதி இருந்தது. எண்ணெய் கண்டுபிடிக்கப்படதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக .இப்பகுதி பொருளாதார ரீதியாக பணக்கார பகுதியாகி விட்டது.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசிளிகாதா&oldid=3404514" இலிருந்து மீள்விக்கப்பட்டது