பசீர் அல் குவாதைமி

யேமன் நாட்டு சதுரங்க வீரர்

பசீர் அல் குவாதைமி (Basheer Al-Qudaimi) யேமன் நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீரராவார். 1984 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். 2008 ஆம் ஆண்டில் பன்னாட்டு சதுரங்க மாசுட்டர் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. முன்னதாக 2007 ஆம் ஆண்டில் அரபு சதுரங்க வெறியாளர் போட்டியை பசீர் வென்றார். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் இவர் தனிநபர் தங்கப் பதக்கம் வென்றார்.

பசீர் அல் குவாதைமி
Basheer Al Qudaimi
நாடுயெமன்
பிறப்பு1984
பட்டம்பன்னாட்டு மாசுட்டர் (2008)
பிடே தரவுகோள்2440 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2464 (சூலை 2008)

சுயசரிதை தொகு

2003 ஆம் ஆண்டில் பசீர் அல் குவாதைமி யேமன் சதுரங்க கழகம் நடத்திய அரபு கழக சதுரங்க வெற்றியாளர் போட்டியில் 3 ஆவது இடத்தை வென்றார். [1] 2007 ஆம் ஆண்டில் யேமன் நாட்டின் டைசு நகரத்தில் நடைபெற்ற அரபு சதுரங்க வெற்றியாளர் போட்டியை வென்றார். [2]

பசீர் அல் குவாதைமி யேமன் அணிக்காக சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகளில் விளையாடினார்: [3]

  • 2002 - பிளெட்டு நகரம் (+9, =1, -1) 35 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு
  • 2006 - துரின் நகரத்தில் நடந்த 37 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு (+7, =0, -0) தனிநபர் தங்கப் பதக்கம்.
  • 2008 - திரெசுடன் நகரத்தில் நடந்த 38 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு (+5, =2, -3),
  • 2010 - கான்டி-மான்சிசுக்கு (+3, =1, -6) 39 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு இரண்டாவது குழு ,
  • 2014 - 41 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு டிரோம்சோ நகரம் (+4, =4, -2)
  • 2018 - படுமியில் நடந்த 43 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு (+6, =2, -1). [4]

மேலும் இவர் யேமன் அணிக்காக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சதுரங்கப் போட்டி (2010) மற்றும் பான் அரபு விளையாட்டு சதுரங்கப் போட்டி (2007-2011) ஆகியவற்றில் பங்கேற்று விளையாடினார், அங்கு இவர் தனிப்பட்ட நபர் தங்கப் பதக்கத்தை வென்றார். [5]

2008 ஆம் ஆண்டில் பசீர் அல் குவாதைமிக்கு பன்னாட்டு மாசுட்டர் பட்டம் வழங்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. "OlimpBase :: 5th Arab Club Chess Championship, Damascus 2003, Al-Wahda Sana'a". www.olimpbase.org.
  2. "Chess-Results Server Chess-results.com - Arab Men Chess Championship 2007". chess-results.com.
  3. "OlimpBase :: Men's Chess Olympiads :: Bashir Al-Qudaimi". www.olimpbase.org.
  4. "Chess-Results Server Chess-results.com - 43rd Olympiad Batumi 2018 Open". chess-results.com.
  5. "OlimpBase :: Pan Arab Games (men) :: Bashir Al-Qudaimi". www.olimpbase.org.

புற இணைப்புகள் தொகு

  • Basheer Al-Qudaimi player profile and games at Chessgames.com
  • Basheer Al Qudaimi chess games at 365chess.com
  • Basheer Al-Qudaimi rating card at FIDE
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசீர்_அல்_குவாதைமி&oldid=3779725" இலிருந்து மீள்விக்கப்பட்டது