பசீர் பாக்
பசீர் பாக் (Basheerbagh) ஐதராபாத்தில் உள்ள ஓர் முக்கிய நகரமாகும். இப்போது இது வணிக மற்றும் வணிக மையமாக உள்ளது. அபிட்ஸ், கோட்டி, நம்பள்ளி மற்றும் ஹிமாயத் நகர் போன்ற பிற பெரிய வணிகப் பகுதிகளுடன் நெருக்கமாக இருப்பதால் இப்பகுதியின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. நன்கு அறியப்பட்ட பசீர் பாக் அரண்மனையும் இங்கு அமைந்துள்ளது. இது உசேன் சாகர் ஏரிக்கும் அருகில் உள்ளது. [1]
வரலாறு
தொகுபசீர்-உத்- தௌலா நவாப் சர் அசுமான் ஜக் பகதூர் என்பவரின் நினைவாக பசீர்பாக் எனப் பெயரிடப்பட்டது. இங்குள்ள பசீர் பாக் அரண்மனை 1880ஆம் ஆண்டில் இந்த பகுதியில் கட்டப்பட்டது.
வணிகப் பகுதி
தொகுஇங்கு ஏராளமான நகைக் கடைகளும், அதிக அளவிலான வணிக வளாகங்களும் உள்ளன. நகரத்தின் பிரபல திரையரங்குகளான ஸ்கைலைன் & ஸ்டெர்லிங் திரைப்பட அரங்கம் இங்கு அமைந்திருக்கின்றன. அயக்கர் பவன் (வருமான வரி அலுவலகம்), காவல் ஆணையர் அலுவலகம், காவல் கட்டுப்பாட்டு அறை, மத்திய கலால் மற்றும் சுங்க மற்றும் பொருட்கள் மற்றும் சேவை வரி அலுவலகம், தெலங்காணா சுற்றுலாவின் இட ஒதுக்கீடு அலுவலகம் போன்ற சில முக்கியமான அரசு கட்டிடங்கள் இங்கு அமைந்துள்ளன. பாபு கான் எஸ்டேட் (ஒரு காலத்தில் ஐதராபாத்தில் 14 மாடிகளைக் கொண்ட மிக உயரமான கட்டிடம்) மற்றும் கான் லத்தீப் கான் எஸ்டேட் போன்ற பெரிய வணிக கட்டிடங்கள் இங்கு பல்வேறு வகையான வணிகங்களை நடத்தி வருகின்றன.
கல்வி
தொகுநன்கு அறியப்பட்ட நிசாம் கல்லூரி மற்றும் சங்கம் இதன் புறநகரில் அமைந்துள்ளது.
விளையாட்டு
தொகுபசீர்பாக் ஒரு விளையாட்டு மையமாக இக்கிறது. மேலும் கால்பந்து மற்றும் தடகளத்திற்காக பயன்படுத்தப்படும் பல்நோக்கு லால் பகதூர் விளையாட்டு அரங்கம் இங்கே அமைந்துள்ளது. ஐதராபாத்தை இந்திய ராணுவத்திற்கு ஒப்படைக்கும் பணி இங்கு நடந்ததால் இது முன்பு பதே மைதானம் என்று அழைக்கப்பட்டது. முன்னதாக இது சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளை நடத்த பயன்படுத்தப்பட்டது. பூப்பந்தாட்டம் மற்றும் டென்னிசுக்குபயன்படுத்தப்படும் ஒரு உட்புற மைதானமும் இங்கே உள்ளது. தற்போது அவை அதிகம் பயன்படுத்தப்படவில்லை. இது காச்சிபௌலி நகரின் விளையாட்டு மையமாக மாறியுள்ளது. இந்திய துடுப்பாட்ட லீக்கின் போட்டிகள் இங்குள்ள அரங்கங்களை புதுப்பித்துள்ளன.
குறிப்புகள்
தொகு- ↑ [1] பரணிடப்பட்டது 2007-11-16 at the வந்தவழி இயந்திரம் Hussain Sagar