லால் பகதூர் சாஸ்திரி விளையாட்டரங்கம்
லால் பகதூர் சாஸ்திரி விளையாட்டரங்கம் (The Lal Bahadur Shastri Stadium (தெலுங்கு: లాల్ బహదూర్ శాస్త్రి స్టేడియం) ஐதராபாத்து, தெலங்கானாவில் உள்ள விளையாட்டரங்கம் ஆகும். பதே மைதானம் என அழைக்கப்பட்ட இந்த அரங்கத்தில் துடுப்பாட்டம் மற்றும் கால்பந்து போட்டிகள் நடைபெறுகிறது.[1] இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரியாக இருந்த லால் பகதூர் சாஸ்திரியின் நினைவாக 1967 இல் இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
பதே மைதானம் | |
அரங்கத் தகவல் | |
---|---|
அமைவிடம் | ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா |
உருவாக்கம் | 1950 |
இருக்கைகள் | 25,000 |
உரிமையாளர் | தெலங்காணா மாநிலம் |
இயக்குநர் | ஐதராபாத்துCricket Association |
குத்தகையாளர் | பதே ஐதராபாத்து எஃப் சி, ஐதராபாத்து துடுப்பாட்ட அணி |
முடிவுகளின் பெயர்கள் | |
பவிலியன் எண்ட் ஹில் ஃபோர்ட் எண்ட் | |
பன்னாட்டுத் தகவல் | |
முதல் தேர்வு | 19 நவம்பர், 1955: இந்தியா எ நியூசிலாந்து |
கடைசித் தேர்வு | December 2, 1988: இந்தியா எ நியூசிலாந்து |
முதல் ஒநாப | 10 செப்டம்பர், 1983: இந்தியா எ பாக்கித்தான் |
கடைசி ஒநாப | 19 நவம்பர், 2003: இந்தியா எ நியூசிலாந்து |
22 சூன் 2014 இல் உள்ள தரவு மூலம்: Lal Bahadur Shastri Stadium, Cricinfo |
வரலாறு
தொகுஅசிஃப் ஜஹி எனும் ஐதராபாத் நிசாமின் காலத்தில் இது போலோ மைதானமாக இருந்தது.[2][3] செகாந்திராபாத்திலுள்ள ஜிம்கானா அரங்கத்தில் போதிய அளவில் இருக்கை வசதிகள் இல்லாமல் இருந்தது.[4] எனவே சர்வதேச போட்டிகள் இந்த மைதானத்தில் நடந்தது. நவம்பர் 1995 இல் நியூசிலாந்துக்கு எதிராக முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி நடந்தது.[5]
= இவற்றையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Lal Bahadur Shastri Stadium Ground Profile". பார்க்கப்பட்ட நாள் 8 April 2006.
- ↑ "Polo in its Heyday". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2019-05-17.
- ↑ Raya, Lallana. Legacy of the Nizam's. Vani Prakashan. p. 148.
- ↑ Ramnarayan V. "Memories of Fateh Maidan".
- ↑ "Lal Bahadur Stadium".[தொடர்பிழந்த இணைப்பு]