மும்பை ஜிம்கானா
மும்பை ஜிம்கானா (Bombay Gymkhana) என்பது மும்பையில் 1875 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட உடற்பயிற்சிப் போட்டி விளையாட்டுப் பொதுவிடம் ஆகும்.[1] இதனை கிளாட் பேட்லி எனும் பொறியாளர் வடிவமைத்தார்.[2]
எஸ்பிளானடே மைதானம் அசாத் மைதானம் | |
மும்பை ஜிம்கானா மைதானம் | |
அரங்கத் தகவல் | |
---|---|
அமைவிடம் | தென் மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
உருவாக்கம் | 19 சூன், 1875 |
இருக்கைகள் | 15,000 |
உரிமையாளர் | பிரிஹன் மும்பை மாநகராட்சி |
கட்டிடக் கலைஞர் | கிளாட் பேட்லி |
இயக்குநர் | மும்பை ஜிம்கானா |
குத்தகையாளர் | இந்திய ரக்பி அணி, உள்ளூர் சங்கங்கள் |
முடிவுகளின் பெயர்கள் | |
n/a | |
பன்னாட்டுத் தகவல் | |
ஒரே தேர்வு | 15 டிசம்பர், 1933: இந்தியா எ இங்கிலாந்து |
12 ஆகஸ்டு 2015 இல் உள்ள தரவு மூலம்: Bombay Gymkhana Ground, Cricinfo |
விளையாட்டுகள்
தொகுநீளமான இந்த கட்டிடமானது முகப்பறை, மேசைப்பந்தாட்டம், இறகுப் பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளுக்கான மைதானம், உணவகம் மற்றும் ஓய்விடம் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இந்த சங்கத்தில் உறுப்பினராவது சற்று கடினமாகும்.[3] இங்கு துடுப்பாட்டம் குளிர்காலத்திலும் ரக்பி மற்றும் கால்பந்து போன்ற விளையாட்டுகள் பருவப் பெயர்ச்சிக் காற்று காலங்களிலும் விளையாடப்படுகிறது. இந்த மைதானத்தில் டிசம்பர் 15, 1933இல் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முதல் தேர்வுத் துடுப்பாட்டம் நடைபெற்றது.[4] இந்தப் போட்டிக்கு சி. கே. நாயுடு தலைவராக இருந்தார். அந்தப் போட்டியில் 50,000 பார்வையாளர்கள் இருந்தனர்.மேலும் வழக்கமான விலையை விட ஐந்து மடங்கு அதிகமான விலைக்கு நுழைவுச் சீட்டு விற்பனையானது.[5] இந்தப் போட்டியில் லாலா அமர்நாத் நூறு ஓட்டங்கள் அடித்தார். இது இந்தியத் துடுப்பாட்ட அணியின் மிகச் சிறந்த போட்டிகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.[6]
சான்றுகள்
தொகு- ↑ Sarkar, Arita (21 August 2016). "Once Upon A Time: Bombay Gymkhana was first club to bring multiple sports together". The Indian Express. https://indianexpress.com/article/cities/mumbai/once-upon-a-time-bombay-gymkhana-was-first-club-to-bring-multiple-sports-together-2988064/.
- ↑ "Bombay gymkhana plans to shut kitchens: The History". Mid Day. பார்க்கப்பட்ட நாள் 2009-06-17.
- ↑ "New clubs on the block". Daily News and Analysis. Archived from the original on 5 December 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-06-17.
- ↑ "Gymkhana Ground: Test Matches". ESPN Cricinfo. 17 சூன் 2011. Archived from the original on 16 திசம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 17 சூன் 2011.
- ↑ "When Test cricket came to India". ESPNCricinfo. 29 April 2006. http://www.espncricinfo.com/magazine/content/story/245528.html. பார்த்த நாள்: 28 February 2012.
- ↑ "'Pure romantic, Byron of Indian cricket'". The Hindu. 6 August 2000 இம் மூலத்தில் இருந்து 15 செப்டம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130915054431/http://www.hindu.com/2000/08/06/stories/07060282.htm. பார்த்த நாள்: 28 February 2012.