பச்சனாம்பட்டி
கிருஷ்ணகிரி மாவட்ட சிற்றூர்
பச்சனாம்பட்டி (Pachinampatti) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது மேட்டுத்தங்கல் ஊராட்சிக்கு உட்பட்டது.
பச்சனாம்பட்டி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருஷ்ணகிரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635304 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 47 கிலோமீட்டர் தொலைவிலும், ஊத்தங்கரையில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 258 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 70, மொத்த மக்கள் தொகை 252, இதில் 136 ஆண்களும், 116 பெண்களும் அடங்குவர். கிராமத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 67.5 % ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்
மேற்கோள்
தொகு- ↑ "Revenue Administration" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-11.
- ↑ "Pachinampatti Village , Uthangarai Block , Krishnagiri District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-15.