பஞ்சாபி தந்தூர்
பஞ்சாபி தந்தூர் (tandoor, Gurmukhī:ਤੰਦੂਰ; Shahmukhi:تندور) என்பது பஞ்சாபிய உணவு தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பாரம்பரியக் களிமண் அடுப்பாகும். களிமண் அல்லது செங்கல் கொண்டு செய்யப்பட்டு, அதன் ஒருபுறமமைந்த திறப்பின் வழியே எரியூட்டப்படும் பஞ்சாபி பத்தியிலிருந்து தந்தூர்கள் வேறுபட்டவை. பஞ்சாபி பத்திகளின் மேற்புறம் உலோக மூடிகொண்டு மறைக்கப்பட்டு, புகை வெளியேற உருளைவடிவ புகைபோக்கிகளைக் கொண்டிருக்கும்.[1]
தொடங்கிய இடம் | பஞ்சாப் பகுதி |
---|
ரொட்டி, நான் தயாரிப்பதற்காகப் பஞ்சாப் பகுதியிலுள்ள வீட்டு முற்றங்களில் வழக்கமாக தந்தூர்கள் அமைக்கப்பட்டிருக்கும். பஞ்சாபின் கிராமப்புறங்களில் சமுதாயத் தந்தூர்கள் உள்ளன.[1][2][3] தந்தூரி கோழி தயாரிக்கவும் தந்தூர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
வடிவமைப்பு
தொகுபஞ்சாபி தந்தூர் களிமண்ணால் மணிவடிவில் பூமிக்கடியில் அமைக்கப்பட்ட அடுப்பாகும். இந்த அடுப்புகளில் எரிப்பதற்கு விறகு அல்லது கரி பயன்படுத்தப்படுகிறது. அதன்மூலம் 480 பாகைகள் வரை வெப்பம் பெறப்படுகிறது.[4] பஞ்சாபி தந்தூர்கள் தரைக்கு மேலும் அமைக்கப்படுகின்றன.[5] பஞ்சாபி தந்தூரை ஒத்த தொல்பொருட்கள் சிந்து சமவெளிப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருந்தாலும்[6] பிரிவினைக்கு முந்தைய பஞ்சாபின் சமையலோடுதான் பஞ்சாபி தந்தூரின் பயன்பாடு இணைக்கப்பட்டுள்ளது[1][7]
பயன்கள்
தொகுகறியுணவு வகைகளும் ரொட்டியும் தயாரிப்பதற்குப் பஞ்சாபியர்கள் தந்தூர் அடுப்பைப் பயன்படுத்துகின்றனர்.[8] பஞ்சாபி நாட்டுப்புறப் பாடல்களில் தந்தூரி அடுப்பு இடம்பெற்றுள்ளது.[1] 1947 இல் நடந்த பிரிவினைக்குப் பின் இந்தியாவின் பிறபகுதிகளிலும் தந்தூரின் பயன்பாடு பரவியது. மேற்கு பஞ்சாபிலிருந்து தில்லி போன்ற பகுதிகளுக்கு குடிபெயர்ந்த மக்கள் தங்களுடன் தந்தூர்களையும் எடுத்து வந்தனர்.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Alop ho riha Punjabi virsa byHarkesh Singh Kehal Pub Lokgeet Parkashan பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7142-869-X
- ↑ Pind Diyan Gallian PTC Channel - Bilga (Jalandhar) which are also known as tadoors in Punjabi
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-09-14. பார்க்கப்பட்ட நாள் 2016-07-20.
- ↑ Vahrehvah
- ↑ Punjabi tandoor in Amritsar
- ↑ Pop's Mops and Sops - Barbecue and Sauces from Around the World By "B" "B" Quester [1]
- ↑ [2] The Rough Guide to Rajasthan, Delhi and Agra By Daniel Jacobs, Gavin Thomas
- ↑ "What is Mughalai Cuisine?". Archived from the original on 2013-10-10. பார்க்கப்பட்ட நாள் 2016-07-20.
- ↑ New York Times STEVEN RAICHLEN 10 05 2011