பஞ்சாப் செஞ்சூரியன் வங்கி
பஞ்சாப் செஞ்சூரியன் வங்கி (முன்னதாக செஞ்சூரியன் வங்கி) இந்தியாவில் செயற்பட்டுவந்த தனியார்த் துறை வணிக வங்கியாகும். மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்ட இவ்வங்கிக்கு நாடு முழுவதும் 403 கிளைகளில் 5000க்கும் மேலான பணியாளர்களும் பணியாற்றினர். இதன் பங்குகள் இந்தியப் பங்கு மாற்றகங்கள் மட்டுமின்றி லக்சம்பர்க் நாட்டின் பங்கு மாற்றகத்திலும் பட்டியலிடப்பட்டன. 2008 மே 23 அன்று எச்டிஎஃப்சி வங்கி, இவ்வங்கியை வாங்கி தன்னுடன் இணைத்துக் கொண்டது.[1]
வகை | பொதுப் பங்கு நிறுவனம் |
---|---|
நிலை | 2008ஆம் ஆண்டில் எச்டிஎஃப்சி வங்கியுடன் இணைக்கப்பட்டது |
நிறுவுகை | பானஜி, 1994 (செஞ்சூரியன் வங்கி என) |
தலைமையகம் | நாரிமன் பாயின்ட், மும்பை 400 021 இந்தியா |
முதன்மை நபர்கள் | தலைவர்: ரானா தல்வார் |
தொழில்துறை | வங்கித்தொழில் காப்பீடு மூலதன சந்தைகள், துணை சந்தைகள் |
உற்பத்திகள் | கடன்கள், கடனட்டைகள், சேமிப்புகள், காப்பீடு. |
இணையத்தளம் | www.centurionbop.co.in |