பஞ்சாப் தனிமாநில இயக்கம்

பஞ்சாபி சுபா இயக்கம் (Punjabi Suba movement) அல்லது பஞ்சாப் தனிமாநில இயக்கம் 1950களில் கிழக்கு பஞ்சாபிலிருந்து பஞ்சாபியர்-பெரும்பான்மையரான மாநிலத்தை ("சுபா") அமைக்கப்படுவதற்கான போராட்ட இயக்கம் ஆகும். அகாலி தளத்தால் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தின் விளைவாக பஞ்சாபி மொழியினர் பெரும்பான்மையான பஞ்சாப் மாநிலமும், இந்தி மொழியினர் பெரும்பான்மையான அரியானா மாநிலமும் சண்டிகர் ஒன்றியப் பகுதியும் உருவாயின. சில மலைவாசி மொழியினர் பெரும்பான்மையாக இருந்த கிழக்குப் பஞ்சாபின் பகுதிகள் இமாச்சலப் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

பஞ்சாபி சுபா இயக்கம்
தேதி15 ஆகத்து 1947 (1947-08-15) - 1 நவம்பர் 1966 (1966-11-01)
அமைவிடம்
இலக்குகள்இருமொழி மாநிலமாயிருந்த கிழக்கு பஞ்சாபிலிருந்து பஞ்சாபி-மொழியினருக்குத் தனியான பஞ்சாப் மாநிலத்தை உருவாக்குதல்
முறைகள்போராட்டப் பேரணி, சாலைப் போராட்டங்கள், கலவரம், உண்ணாநிலைப் போராட்டம், பொது வேலைநிறுத்தம்
முடிவுநவம்பர் 11, 1966இல் பஞ்சாப், அரியானா மாநிலங்கள் மற்றும் சண்டிகர் ஒன்றியப் பகுதிஉருவாக்கம். அனைத்து மலைப்பகுதிகளும் இமாச்சலப் பிரதேசத்திற்கு மாற்றப்படுதல்.
தரப்புகள்
ஆதரவு:
அகாலி தளம்
அரியானா லோக் சமிதி
பாரதீய ஜனசங்கம்
வழிநடத்தியோர்