பஞ்ச-பரமேட்டிகள்
சமணத்தில் பஞ்ச-பரமேட்டிகள் (சமக்கிருதம்: पञ्च परमेष्ठी "ஐந்து உயருயிரிகள்") என்போர் வணங்கத்தக்க, ஐந்து அடுக்கு சமயத் தலைவர்களாவர்.[1][2]
மேலோட்டம்
தொகுஐந்து உயருயிரிகளும் பின்வருவோராவர்:
- அருகதர்: விழிப்புணர்வு பெற்ற, கேவல ஞானத்தை அடைந்த அனைத்து உயிர்களும் அருகதர்களாகக் கருதப்படுவர். 24 தீர்த்தங்கரர்கள் அல்லது சினர்கள் எனப்படும் தற்போதைய காலச்சுழற்சியில் சமண மதத்தை நிறுவியவர்களாகக் கருதப்படும் அனைவரும் அருகதர்களாவர். அனைத்துத் தீர்த்தங்கரர்களும் அருகதர்களாயினும், அனைத்து அருகதர்களும் தீர்த்தங்கரர்களல்ல.[2]
- சித்தர் (அசிரி): பிறப்பு மற்றும் இறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலையடைந்த உயிர்கள்.
- ஆச்சாரியர்
- உபாத்தியாயர் ("நல்வழிப்படுத்துவோர்")
- முனி அல்லது சமணத் துறவிகள்
இவ்வைந்து பேரின் முதலெழுத்துக்களாகிய அ+அ+அ+உ+ம என்பன இணைக்கப்பட்டு அசைச்சொல்லாகிய ஓம் உருவாகிறது.[1]
ஐந்து உயருயிரிகள்
தொகுதிரவியசங்கிரகம் எனும் முக்கிய சமண நூல் ஐந்து உயருயிரிகளின் (பஞ்ச பரமேட்டிகள்) இயல்புகளைச் சுருக்கமாக வரையறுக்கின்றது.[3]
- உலக ஆசிரியரின் (அருகதர்) வரையறை - வரி 50.[4]
- விடுதலையடைந்த உயிர்களின் (சித்தர்) வரையறை - வரி 51.[5]
- முதன்மை நல்வழிப்படுத்துவோரின் (ஆச்சாரியர்) வரையறை - வரி 52.
- நல்வழிப்படுத்துவோரின் (உபாத்தியாயர்) வரையறை - வரி 53.
- துறவியின் (சாது) வரையறை - வரி 54.
“ | ஐந்து உயரிய உயிர்களின் (பஞ்ச-பரமேட்டி) பண்புகளைப் போற்றியவாறு, முப்பத்தைந்து, பதினாறு, ஆறு, ஐந்து, நான்கு, இரண்டு மற்றும் ஓரெழுத்துக்களாலான புனித மந்திரங்களைத் தியானிக்குக, ஓதுக அல்லது உச்சரிக்குக. மேலும், ஆசிரியனின் (குரு) கற்பித்தலுக்கிணங்க ஏனைய மந்திரங்களைத் தியானிக்குக மற்றும் ஓதுக.[6] | ” |
அருகதர்
தொகுநான்கு கொடிய கர்மங்களை (காதிய கர்மங்கள்) ஒழித்த, முடிவில் நம்பிக்கை, மகிழ்ச்சி, அறிவு மற்றும் வலுப் பொருந்திய, மிகவும் நற்குறி பொருந்திய உடலில் வாழுகின்ற (பரமௌதாரிக சாரீர), தூய உயிரியான அவ் உலக ஆசிரியர் (அருகதர்) தியானிக்கத் தக்கவராவார்.
— திரவியசங்கிரகம் (50)[4]
மேலும் பார்க்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 Jaini, Padmanabh S. (1998). The Jaina Path Of Purification. Motilal Banarsidass. p. 163. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120815780. பார்க்கப்பட்ட நாள் 10 December 2012.
- ↑ 2.0 2.1 Shah, Natubhai (1998). Jainism: The World of Conquerors, Volume 1. Sussex Academic Press. p. 174. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781898723301. பார்க்கப்பட்ட நாள் 14 December 2012.
- ↑ Jain 2013, ப. 177-196.
- ↑ 4.0 4.1 Jain 2013, ப. 177.
- ↑ Jain 2013, ப. 182.
- ↑ Jain 2013, ப. 173.