பஞ்ச வாத்தியம்

பஞ்ச வாத்தியம் (Panchavadyam) இது கேரள மாநிலத்தின் கோயில்களில் ஐந்துவகை இசைக்கருவிகளால் வாசிக்கப்படும் இசை ஆகும்.

பஞ்ச வாத்தியம்

திமிலை

தொகு

இது மரத்தினால் செய்யப்பட்டு தோலினால் கட்டப்பட்ட தோற்கருவியாகும். இது பாணி எனவும் அழைக்கப்படுகிறது. மணற்கடிகார வடிவில் இருக்கும் திமிலை இசைக்கருவியானது கேரளா மற்றும் தென்னிந்தியக் கோவில்களில் இசைக்கப்படுகிறது

மத்தளம்

தொகு

தோலக் எனப்படும் மத்தளம். நடுவில் பெரியதாகவும் கடைசியில் சிறியதாகவும் இருக்கும் இக்கருவி இரண்டு கைகளால் இசைக்கப்படுகிறது.

இந்தளம்

தொகு

இது இரண்டு தட்டு வடிவில் அமைந்த உலோகத்தால் செய்யப்பட்ட இதனை இரு கைகளில் பொருத்தி இசைக்கப்படுகிறது.

உடுக்கை

தொகு

தோல் இசைக்கருவியான இதைக் கைகளைக் கொண்டு இசைக்கலாம். உலோகத்தால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட இரு பக்கங்களும் விரிந்து இடை சிறுத்தும் இருக்கும், இக்கருவி இரண்டு கை விரல்களால் இசைக்கப்படுகிறது

கொம்பு

தொகு

வளைந்த உலோகத்தால் செய்யப்பட்ட இதனை வாயினால் ஊதி இசைக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்ச_வாத்தியம்&oldid=3446203" இலிருந்து மீள்விக்கப்பட்டது