படகுண்டி

பாக்கித்தானுள்ள ஒரு கிராமம்

படகுண்டி அல்லது பட்டகுண்டி ( Batakundi) என்பது பாக்கித்தானின் கைபர் பக்துன்வாவில் உள்ள மன்செரா மாவட்டத்திலுள்ள நரான் [1] என்ற நகரத்துக்கு கிழக்கே 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு சுற்றுலா நகரம் ஆகும். இது ககன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. [2]

படகுண்டி
بٹہ کنڈی
கிராமம்
படகுண்டியின் ஒரு காட்சி
படகுண்டியின் ஒரு காட்சி
படகுண்டி is located in Khyber Pakhtunkhwa
படகுண்டி
படகுண்டி
ஆள்கூறுகள்: 34°55′54″N 73°46′27″E / 34.9316°N 73.7743°E / 34.9316; 73.7743
நாடு பாக்கித்தான்
மாகாணம்கைபர் பக்துன்வா மாகாணம்
மாவட்டம்மன்செரா
ஏற்றம்
2,624 m (8,609 ft)
நேர வலயம்ஒசநே+05:00 (PKT)

அமைவிடம்

தொகு

படகுண்டி, கைபர் பக்துன்வாவில் காரகோரம் நெடுஞ்சாலையில்[3] அமைந்துள்ளது. மன்செரா-நரான்-ஜல்கட்-சிலாஸ் சாலையில் பாபுசர் வரை செல்லும் பாதை இங்கிருந்தே ஆரம்பமாகிறது. [4] தானுந்துகளால் இதனை எளிதில் அணுக முடியும்.

சுற்றுலா ஈர்ப்புகள்

தொகு
 
படகுண்டி அருவி

பாபுசர் கணவாய் முழுவதும் தங்கள் பயணத்தைத் திட்டமிடும் போது, மக்கள் பெரும்பாலும் படகுண்டியில் உள்ள விடுதிகளில் தங்குவார்கள். இந்நகரம் ஆண்டு முழுவதும் சுற்றுலாவாசிகளுக்கு திறந்திருக்கும்.[5]

இந்த்கோ மொழி பேசும் குஜ்ஜர்கள் இங்கு பெரும்பான்மையினராக உள்ளனர்.[6]

சான்றுகள்

தொகு
  1. "Locals, tourists trapped in heavy Naran snowfall". தி எக்சுபிரசு திரிப்யூன் (in ஆங்கிலம்). 2018-10-16. பார்க்கப்பட்ட நாள் 2022-11-14.
  2. Javaid, Aiyza (2019-07-19). "Exploring the beautiful Kaghan Valley". Daily Times (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-14.
  3. "Along The Mighty Karakoram Highway". miTraveller (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-05-31. பார்க்கப்பட்ட நாள் 2022-11-14.
  4. "Tourism boom likely in Kaghan valley as Mansehra-Naran-Jalkhad Road reopens". டான் (in ஆங்கிலம்). 2022-04-18. பார்க்கப்பட்ட நாள் 2022-11-14.
  5. "Batakundi". www.enroutepakistan.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-14.
  6. Ali, Ihsan (2006) (in English). Mapping and documentation of the cultural assets of Kaghan Valley, Mansehra: final report. UNESCO Office in Islamabad. https://unesdoc.unesco.org/ark:/48223/pf0000216933. பார்த்த நாள்: 2022-11-15. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=படகுண்டி&oldid=3778130" இலிருந்து மீள்விக்கப்பட்டது