படகோனியா பாலைவனம்
படகோனியன் பாலைவனம் அல்லது படகோனியா பாலைவனம் அல்லது படகோனியன் ஸ்டெப்பி (Patagonian Desert or Patagonia Desert or Patagonian Steppe), தென் அமெரிக்காவின் அர்ஜெண்டினா நாட்டின் கிழக்கில் படகோனியாவில் அமைந்துள்ளது.[1] படகோனியா பாலைவனம் 673,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன் (260,000 mi2)., உலகின் நான்காவது பெரிய பாலைவனமாக உள்ளது.
படகோனியா பாலைவனம் | |
Desert | |
படகோனியா பாலவனம் (நாசாவின் செய்மதிப்படம்)
| |
நாடு | அர்ஜெண்டினா, சிலி |
---|---|
மிகவுயர் புள்ளி | தொமுயொ 15,449 அடி (4,709 m) |
- ஆள்கூறுகள் | 36°35′40″S 70°25′21″W / 36.59444°S 70.42250°W |
மிகத்தாழ் புள்ளி | லகுனா டெல் கார்பன் −344.5 அடி (−105.0 m) |
- ஆள்கூறு | 49°34′34.2″S 68°21′5.0394″W / 49.576167°S 68.351399833°W |
பரப்பு | 6,70,000 கிமீ² (2,58,688 ச.மைல்) |
Biome | பாலைவனம் |
அமைவிடம்
தொகுபடகோனியா பாலைவனம் அர்ஜெண்டினாவில் பெருமளவும், சிலி நாட்டில் சிறிதளவும் கொண்டுள்ளது. படகோனியாவில் அமைந்த இப்பாலைவனத்தின் கிழக்கு எல்லையாக அட்லாண்டிக் பெருங்கடலும், மேற்கெல்லையாக பசிபிக் பெருங்கடலும் உள்ளது. தெற்கு அர்ஜெண்டினாவில் அமைந்த இப்பாலைவனத்தில் மத்தியப் பகுதிகளில் உள்ள ஸ்டெப்பிப் புல்வெளிகள், மருந்திற்கு பயன்படும் குட்டை செடிகளுடன், சிலி நாட்டின் கிழக்குப் பகுதி வரை பரவியுள்ளது. [2]
நிலவியல்
தொகுகுளிர் பாலைவானமான படகோனிய பாலைவனத்தில் மேட்டு நிலங்களும், மலைமுகட்டுத் திரள்களும், ஆற்றுச் சமவெளிகளும், இடுங்கிய செங்குத்தான பள்ளத்தாக்குகளும், ஆற்றுக் குடைவுகளும் காணப்படுகிறது. பாலைவனத்தின் மேற்கில் உள்ள பாம்பாஸ் புல்வெளிகளும், வறண்ட மலைப்பாங்கான மேட்டு நிலங்களும் கொண்டுள்ளது.
மக்கள்
தொகுஇப்பாலைவனத்தில் வேட்டையாடும் இன மக்களான மபுச்சி மக்கள், சிலியர்கள், அர்ஜெண்டினா மக்கள், வேல்ஸ் மக்கள் ஆடு, மாடு மற்றும் குதிரை போன்ற கால்நடைகளை மேய்க்கின்றனர்.
புவியியல் & தட்ப வெப்பம்
தொகுமழை மறைவு பிரதேசத்தில் அமைந்த படகோனியப் பாலைவனத்தின் குளிர்காலம் ஏழு மாதங்களும், கோடைக் காலம் ஐந்து மாதங்களும் கொண்டது. குளிர்காலத்தில் அதிகபட்சமாக 12 முதல் 3 பாகை செல்சியஸ் வெப்ப நிலை கொண்டுள்ளது. மேற்கில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி மிக உயர்ந்த ஆண்டீஸ் மலைத்தொடர்கள் மறைப்பதால் இப்பாலைவனம் மறைவு பிரதேசமாக உள்ளது.[3] கோடைகாலத்தில் அதிக பட்சமாக 6 முதல் 31 பாகை செல்சியஸ் வெப்ப நிலை கொண்டுள்ளது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Patagonia
- ↑ The Physical Geography of Patagonia and Tierra del Fuego. Andrea M.J. Coronato, Fernando Coronato, Elizabeth Mazzoni and Mirian Vazquez
- ↑ McDonald, James E. Climatology of Arid Lands பரணிடப்பட்டது 2007-06-16 at the வந்தவழி இயந்திரம், Arid Lands Information Center, University of Arizona.
வெளி இணைப்புகள்
தொகுமேலும் படிக்க
தொகு- Gasso S. and Stein A.F., Does dust from Patagonia reach the sub-Antarctic Atlantic ocean? Geophys. Res. Letters, 34 (1): Art. No. L01801 JAN 3 2007. http://dx.doi.org/10.1029/2006GL027693
- Joseph R. McConnell, Alberto J. Aristarain, J. Ryan Banta, P. Ross Edwards, and Jefferson C. Simo, 20th-Century doubling in dust archived in an Antarctic Peninsula ice core parallels climate change and desertification in South America, Published online before print March 26, 2007, 10.1073/pnas.0607657104