படைப்புவாதம்

படைப்புவாதம் (Creationism) என்பது மனிதன், உயிரினங்கள், புவி மற்றும் அண்டத்தை ஒரு மீயிற்கை படைப்பாளர் (கடவுள்) தோற்றுவித்தார் எனும் சமய நம்பிக்கையாகும். 18ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் படிவளர்ச்சிக் கொள்கையின் உருவாக்கத்துக்குப்பின் விவிலியத்தின் தொடக்க நூலில் சொல்லப்பட்டுள்ளனவற்றுக்கு அறிவியல் அடிப்படை உண்டு என்று காட்ட முயற்சிகள் செய்யப்பட்டன. இக்கருத்தை முன்வைத்தவர்கள் படைப்புவாதிகள் என்றும் படிவளர்ச்சி எதிர்ப்பாளர்கள் என்றும் அறியப்பட்டனர். 1920களில் இருந்து ஐக்கிய அமெரிக்காவில் கிறித்தவ அடிப்படைவாதிகள் படிவளர்ச்சிக் கொள்கையினை எதிர்த்து படைப்புவாதத்தை முன்னிறுத்தி வருகின்றனர். படைப்புவாதத்தில் பல வகைகள் உண்டு. படிவளர்ச்சியை அறவே ஏற்றுக் கொள்ள மறுத்து விவிலியத்தில் சொல்லப்பட்டுள்ளதை (ஏழு நாட்களில் அண்டத்தின் படைப்பு, உயிரினங்கள் தனித்தனியே படைக்கப்பட்டன, புவியின் வயது சில ஆயிரம் வருடங்களே) என்று நம்புபவர்கள்; படிவளர்ச்சியை ஏற்று அதன் கர்த்தா கடவுளே என்போர், கிறித்தவமல்லாத பிற சமயங்களில் உள்ள படைப்பு தொன்ம கதைகளை நம்புவோர் போன்றவர்கள் இவற்றுள் அடக்கம். படைப்புவாதத்தை அறிவியல் பாடமாகக் கற்றுத் தர ஐக்கிய அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டதால், நுண்ணறிவு வடிவமைப்புக் கோட்பாடு படைப்புவாதிகளால் அறிமுகப்படுத்தப்படது.[1][2][3][4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. Eugenie C. Scott (with forward by Niles Eldredge) (2004). Evolution vs. Creationism: An Introduction. Berkley & Los Angeles, California: University of California Press. p. 114. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-520-24650-0. http://books.google.com/?id=03b_a0monNYC&printsec=frontcover&dq=evolution+vs.+creationism&q. பார்த்த நாள்: 16 June 2010 Also: Westport, Connecticut: Greenwood Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-313-32122-1
  2. Ronald L. Numbers. "The 'Ordinary' View of Creation". Counterbalance Meta-Library. பார்க்கப்பட்ட நாள் 2010-08-11.
  3. "A Spectrum of Creation Views held by Evangelicals". American Scientific Affiliation. பார்க்கப்பட்ட நாள் 2007–10–18. All Christians in the sciences affirm the central role of the Logos in creating and maintaining the universe. In seeking to describe how the incredible universe has come to be, a variety of views has emerged in the last two hundred years as continuing biblical and scientific scholarship have enabled deeper understanding of God's word and world. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. Ronald L. Numbers. Darwinism Comes to America. Harvard University Press. பார்க்கப்பட்ட நாள் 2007–10–18. Creationists of today are not in agreement concerning what was created according to Genesis. {{cite book}}: Check date values in: |accessdate= (help)
  5. Ruth Bancewicz. "Making your mind up about the HOW of creation". Christians in Science. Archived from the original on 2011-09-28. பார்க்கப்பட்ட நாள் 2007–10–18. But Christians often disagree on the HOW. There are three main viewpoints held by evangelical Christians who hold to a high view of Scripture. Theistic evolutionism is an acceptance of evolution as the best current scientific description of the way that God made the world. It is the dominant viewpoint amongst Christians active in academic science or theology (see refs 1,2,3). Young Earth Creationism is a rejection of mainstream science in favour of an interpretation of the Genesis account that takes the 6 days of creation literally (see refs 4,5). Intelligent Design represents a range of views. In contrast to Theistic evolution or Young Earth Creationism, it is not concerned with Biblical interpretation (see refs 6,7,8). This is often viewed as middle ground for Christians, but is very controversial, for a mixture of theological, philosophical and scientific reasons. Most proponents of intelligent design would accept an old earth (c. 4.5 billion years), but reject the theory of evolution on two grounds: 1) that there is not enough evidence for evolution, and 2) complex biological systems are evidence for a designer. The Intelligent Design movement also use the evidence for fine tuning in cosmology that many theistic evolutionists talk about, so there is some common ground here. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=படைப்புவாதம்&oldid=3561663" இலிருந்து மீள்விக்கப்பட்டது