பட்டம் சிறீராமமூர்த்தி

இந்திய அரசியல்வாதி

பட்டம் சிறீராமமூர்த்தி ( Bhattam Srirama Murthy) (12 மே 1926 - 6 ஜூலை 2015) ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை மற்றும் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக இருந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார்.

பட்டம் சிறீராமமூர்த்தி
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்
முன்னையவர்கே. ஏ. சுவாமி
பின்னவர்உமா கஜபதி ராஜு
தொகுதிவிசாகப்பட்டினம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1926-05-02)2 மே 1926
தர்மாவரம் கிராமம், விசயநகர மாவட்டம்
இறப்பு6 சூலை 2015(2015-07-06) (அகவை 89)
விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
துணைவர்பட்டம் சத்யவதி
பிள்ளைகள்3; 1 மகன் மற்றும் 2 மகள்கள்
வாழிடம்(s)18-1-18, கே. கி. எச். சாலை, விசாகப்பட்டினம்
இணையத்தளம்[1]

அரசியல் தொகு

இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சுமார் 16 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தார். 1945-46 இல் விஜயநகரம் நகர மாணவர் காங்கிரசின் பொதுச் செயலாளராகவும், 1946-47 ஆம் ஆண்டு மகாராஜா கல்லூரி மாணவர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். இவர் 1955 இல் இந்திய சோசலிச கட்சி மற்றும் மாநில சோசலிசட் கட்சியின் இணைச் செயலாளராக இருந்தார். 1957 இல் அதே கட்சியின் பொதுச் செயலாளராக ஆனார்.

1962 ஆம் ஆண்டு விஜயநகரம் தொகுதியிலிருந்தும், 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளில் பரவாடா தொகுதியிலிருந்தும் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆந்திரப் பிரதேச அரசில் அமைச்சராக இருந்தார். 1972 இல் கல்வி மற்றும் கலாச்சார விவகாரங்கள், 1974-78 க்கு இடையில் சமூக நலன் மற்றும் 1981 இல் கலாச்சார விவகாரங்கள் ஆகிய துறைகளை வகித்தார்.

பின்னர் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து 1984 இல் விசாகப்பட்டினம் மக்களவைத் தொகுயில் வெற்றி பெற்று 8வது மக்களவைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஹங்கேரியில் நடைபெற்ற உலக அமைதி அவையின் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.

இலக்கியப்பணி தொகு

இவர் 1947-48 "ஜெய பாரத்" இதழின் துணை ஆசிரியராகவும், 1969 இல் "பிரஜாரதம்" , "ஆந்திர ஜனதா" ஆகிய தெலுங்கு நாளிதழ்களின் ஆசிரியராகவும் இருந்தார். தெலுங்கு மொழியில் நான்கு புத்தகங்களை எழுதியுள்ளார். 6 தசாப்தங்களாக நீடித்த அரசியல் வாழ்க்கையை உள்ளடக்கிய தனது வாழ்க்கை வரலாற்றை "சுவேச்ச பாரதம்" என்ற தலைப்பில் எழுதி 2009 இல் வெளியிட்டார் [1]

சொந்த வாழ்க்கை தொகு

1926 மே 12 அன்று விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள தர்மாவரம் கிராமத்தில் சன்னய்யாவின் மகனாகப் பிறந்தார். இவர் சத்தியவதி என்பவரை மணந்தார். இவர்களுக்கு 1 மகனும் 2 மகள்களும் இருந்தனர்.

இறப்பு தொகு

நீண்ட நாள் உடல்நலக்குறைவு காரணமாக விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 6 ஜூலை 2015 அன்று இறந்தார். [2]

மேற்கோள்கள் தொகு

  1. Book review of Swechcha Bharatam at AVKF.org
  2. "Freedom Fighter Bhattam Srirama Murthy Passes Away- The New Indian Express".

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டம்_சிறீராமமூர்த்தி&oldid=3822347" இலிருந்து மீள்விக்கப்பட்டது