உமா கஜபதி ராஜு

இந்திய அரசியல்வாதி

உமா கஜபதி ராஜு (Uma Gajapathi Raju) ஓர் இந்திய அரசியல்வாதியும், இந்திய நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் நவம்பர் 17, 1953 அன்று கேரளாவின் பாலக்காட்டில் பிறந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார்.

உமா கஜபதி ராஜு
மக்களவை உறுப்பினர்
முன்னையவர்பட்டம் சிறீராமமூர்த்தி
பின்னவர்ம. வீ. வே. சத்தியநாராயண மூர்த்தி
தொகுதிவிசாகப்பட்டினம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 நவம்பர் 1953
பாலக்காடு, கேரளம்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்பூசபதி ஆனந்த கஜபதி ராஜு (விவாகரத்து) இப்போது ரமேஷ் சர்மா
பிள்ளைகள்2 மகள்கள்
வாழிடம்(s)1, கிர்லம்புடி லே அவுட், கடற்கரைச் சாலை, விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம்.

அரசியல் தொகு

இவர் சமூக சேவகராகவும் இருந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சிய்ன் ஆந்திரப் பிரதேசத்தின் இணைச் செயலாளராக ஓராண்டு காலம் இருந்தார். உமாவின் கணவரான ஆனந்த கஜபதி ராஜு ஆந்திராவில் என். டி. ராமராவ் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். ஆனால் 1989 ஆம் ஆண்டில், அதே ஆண்டு மக்களவைத் தேர்தலில் உமா வெற்றிகரமாக போட்டியிடுவதற்கு முன்பு காங்கிரசில் சேர அவர் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து வெளியேறினார். [1] உமா ஒன்பதாவது மக்களவைக்கு, 1989 இல், விசாகப்பட்டினம் மக்களவைத் தொதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1990 இல் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருந்தார். 1991 மக்களவைத் தேர்தலில், இவர் விசாகப்பட்டினத்தில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரிடம் தோற்றுப் போனார்.

குடும்பம் தொகு

இவர் 18 ஆகஸ்ட் 1971 இல் பூசபதி ஆனந்த் கஜபதி ராஜு என்பவரை மணந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் இருந்தனர். தம்பதியினர் 1989 இல் விவாகரத்து செய்தனர். பின்னர் உமா 1991 இல் திரைப்பட தயாரிப்பாளர் ரமேஷ் சர்மாவை மணந்தார். ஆனந்த் கணபதி ராஜு 2016 இல் இறந்தார். இவரது மகள், சஞ்சைதா கஜபதி ராஜு, 2018 இல் பாரதிய ஜனதா கட்சியின் புதுதில்லி பிரிவின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். [2] மேலும், சிம்மாசலம் கோவில் அறக்கட்டளை மற்றும் மான்சாஸ் கல்வி நிறுவனங்கள் (2020-21) [3] [4] [5] ஆகியவற்றின் முன்னாள் தலைவராகவும் இருந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Uma Gajapathi Raju's husband resigns from TDP, to join Congress(I)".
  2. "Anand Gajapathi Raju Daughter Sanchaita Gajapati Joins BJP".
  3. "HC reinstates Ashok Gajapathi Raju as the chairman of MANSAS Trust".
  4. "Sanchaita Gajapati Raju's appointment, scrapped by Andhra Pradesh HC, Ashok Gajapati Raju back".
  5. "Andhra HC cancels appointment of Sanchaita Gajapathi as MANSAS trust chairperson".

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உமா_கஜபதி_ராஜு&oldid=3822355" இலிருந்து மீள்விக்கப்பட்டது