பட்டாகிராம் மாவட்டம்
பட்டாகிராம் மாவட்டம் (Battagram) (பஷ்தூ: بټګرام ولسوالۍ, உருது: ضلع بٹگرام) பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2][3][4] இதன் நிர்வாகத் தலைமையிடம் பட்டாகிராம் நகரம் ஆகும். பட்டாகிராம், கைபர் பக்துன்வா மாகாணத்தின் தலைநகரான பெசாவர் நகரத்திற்கு வடகிழக்கே கிலோ மீட்டர் தொலைவிலும்; மன்செராவுக்கு வடமேற்கே 75 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. 1301 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம் மலைகளால் சூழ்ந்துள்ளது. 2005 பாகிஸ்தான் நிலநடுக்கத்தின் போது இம்மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
பட்டாகிராம் | |
---|---|
மாவட்டம் | |
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்) | |
ஆள்கூறுகள்: 34°25′N 73°06′E / 34.41°N 73.1°E | |
நாடு | பாக்கித்தான் |
மாகாணம் | கைபர் பக்துன்வா மாகாணம் |
நிறுவிய ஆண்டு | சூலை 1993 |
தலைமையிடம் | பட்டாகிராம் |
அரசு | |
• வகை | மாவட்ட நிர்வாகம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,301 km2 (502 sq mi) |
ஏற்றம் | 1,038 m (3,406 ft) |
மக்கள்தொகை (2017)[1] | |
• மொத்தம் | 4,76,749 |
• அடர்த்தி | 370/km2 (950/sq mi) |
நேர வலயம் | ஒசநே5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டெண் | 21040 |
இடக் குறியீடு | 0997 |
தாலுகாக்கள் | 2 |
இணையதளம் | battagram |
அமைவிடம்
தொகுபட்டாகிராம் மாவட்டத்தின் வடக்கில் கொலை-பாலாஸ் மாவட்டம், கிழக்கில் மன்செரா மாவட்டம், தெற்கில் தோர்கர் மாவட்டம், மேற்கில் சாங்லா மாவட்டம் எல்லைகளாக உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
தொகு2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கள் தொகை 476,749 ஆகும். அதில் ஆண்கள் 238,402 மற்றும் பெண்கள் 238,312 உள்ளனர். எழுத்தறிவு 36.31% கொண்டுள்ளது. 100% விழுக்காடு மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் மதச்சிறுபான்மையோர் 161 பேர் மட்டுமே உள்ளனர்.[1]பஷ்தூ மொழி 82.19%, இண்டிகோ மொழி 2.87% மற்றும் 14.32% மகக்ள் பிற பழங்குடி மொழிகள் பேசுகின்றனர்.
மாவட்ட நிர்வாகம்
தொகுஇம்மாவட்டம் அல்லாய் தாலுகா மற்றும் பட்டாகிராம் தாலுகா என இரண்டு தாலுகாக்கள் கொண்டுள்ளது. மேலும் 20 ஒன்றியக் குழுக்களைக் கொண்டுள்ளது. [5]
மாகாணச் சட்டமன்றத் தொகுதிகள்
தொகுகைபர் பக்துன்வா மாகாணச் சட்டமன்றத்திற்கு இம்மாவட்டம் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "District Wise Results / Tables (Census - 2017)". www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics.
- ↑ "District Profile BATTAGRAM (PDF)" (PDF). www.erra.pk. Archived from the original (PDF) on 2012-04-30. பார்க்கப்பட்ட நாள் 2017-12-02.
- ↑ Correspondent, A (2017-09-29). "Hazara varsity campus sought in Battagram" (in en-US). DAWN.COM. https://www.dawn.com/news/1360758.
- ↑ "Abaseen division to be approved after population census: Hoti" (in en-US). The Nation. http://nation.com.pk/19-Jun-2011/abaseen-division-to-be-approved-after-population-census-hoti.
- ↑ Tehsils & Unions in the District of Battagram – Government of Pakistan, NRB, archived from the original on 9 February 2012, பார்க்கப்பட்ட நாள் 19 March 2012
உசாத்துணை
தொகு- 1981 District Census report of Mansehra. District Census Report. Vol. 23. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 1983.
- 1998 District Census report of Batagram. Census publication. Vol. 18. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 1999.