பட்டை கழுத்து கீரி

பட்டை கழுத்து கீரி
நாகார்கோல் தேசியப் பூங்காவில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
உ. விட்டிகொல்லா
இருசொற் பெயரீடு
உர்வா விட்டிகொல்லா
(பென்னட், 1835)
பட்டை கழுத்து கீரி பரம்பல்
வேறு பெயர்கள்

கெர்பெசுடெசு விட்டிகொல்லா

பட்டை கழுத்து கீரி (Stripe-necked mongoose)(உர்வா விட்டிகொல்ல) என்பது தென்னிந்தியாவிலிருந்து இலங்கை வரையிலான காடுகள் மற்றும் புதர் நிலங்களில் காணப்படும் கீரி சிற்றினமாகும்.[1]

சிறப்பியல்புகள்

தொகு
 
ஆனைமலை மலையில் ஒரு இணை பட்டை கழுத்து கீரி

இது துரு பழுப்பு நிறத்திலிருந்து கருமையான சாம்பல் நிறத்தில் இருக்கும். தடிமனான உடல் மற்றும் குட்டையான கால்கள், இதன் கழுத்தின் இருபுறமும் பக்கவாட்டாகச் செல்லும் கருப்பு பட்டை கொண்டது. இதன் குறுகிய வால் பெரும்பாலும் கருப்பு நிறத்திலும், வாலின் அடியில் சாம்பல் நிறத்திலும் காணப்படும். தலை முதல் உடல் நீளம் 46-50 செ.மீ. ஆகும். வால் நீளம் 32 செ.மீ. ஆகும். இதன் உடல் எடை 3.1 கிலோ ஆகும். பெண்களை விட ஆண்கள் பெரிய அளவிலானது.

வாழிடமும் பரவலும்

தொகு
 
நாகர்ஹோல் தேசிய பூங்காவில் பட்டை கழுத்து கீரி

பட்டை கழுத்து கீரி மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் இலங்கையிலும் காணப்படுகிறது.[1] 1911ஆம் ஆண்டில், தெற்கு ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு உயிரி காணப்பட்டது.[2]

நடத்தை மற்றும் சூழலியல்

தொகு
 
பந்திப்பூர் தேசிய பூங்காவில் காணப்படும் பட்டை கழுத்து முங்கூஸ்

பகலாடி வகையினைச் சார்ந்த இந்த கீரி, தவளைகள், நண்டுகள், சருகு மான்கள், கருப்பு முயல்கள், கொறித்துண்ணிகள், கோழிகள் மற்றும் ஊர்வன ஆகியவற்றை உணவாக உண்ணுகிறது. இது பொதுவாக மனித வாழிடங்களைத் தவிர்க்கிறது. இவை வழக்கமாகக் கரையோர வாழ்விடங்களில் அல்லது கைவிடப்பட்ட குளங்களின் அருகில் வாழ்கின்றன. இலங்கையில், தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட எல்லைகளுக்குள் இவை அரிதாகவே காணப்படுகின்றன. இருப்பினும், இவை பொதுவாக 2000 மீ உயரத்தில் காணப்படுகிறது. இனப்பெருக்கம் செய்யும் முறை குறித்துத் தெளிவாகத் தகவல்கள் இல்லை என்றாலும், மே மாதத்தின் நடுப்பகுதியில் குட்டிகள் கவனிக்கப்பட்டுள்ளன.[3]

வகைப்பாட்டியல்

தொகு

இரண்டு துணையினங்கள் இச்சிற்றினத்தின் கீழ் உள்ளன. இவை உர்வா விட்டிகொல்லா விட்டிகொல்லா மேற்குத் தொடர்ச்சி மலைகள், குடகு மற்றும் கேரளத்தில் காணப்படுகிறது. இதன் உரோமங்கள் சிவப்பு நிறத்தைக் கொண்டுள்ளது. மற்றொன்று, உர்வா விட்டிகொல்லா இனோர்னேட்டா, கனரா மாகாணத்தில் காணப்படுகிறது. மேலும் இதன் உரோமங்களில் சிவப்பு நிறம் இல்லை.[4]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Muddapa, D.; Choudhury, A.; Punjabi, G. A. (2016). "Herpestes vitticollis". IUCN Red List of Threatened Species 2016: e.T41619A45208503. https://www.iucnredlist.org/species/41619/45208503. 
  2. Allen, P. R. (1911). "Mungooses in the Eastern Ghats". Journal of the Bombay Natural History Society 21 (1): 237–238. https://archive.org/details/journalofbombayn21121912bomb/page/237. 
  3. {{cite book}}: Empty citation (help)
  4. Balaji, K.; Satyanarayana, J. E. (2016). "The first record of Stripe-necked Mongoose Herpestes vitticollis Bennett, 1835 (Mammalia: Carnivora: Herpestidae) from the Eastern Ghats of Andhra Pradesh, India". Journal of Threatened Taxa 8 (14): 9684–9686. doi:10.11609/jott.3123.8.14.9684-9686. 
  • Pocock, R.I. (1941). The fauna of British India, including Ceylon and Burma. Mammalia, 2nd Edition, 2. Taylor & Francis, London, U.K.
  • Prater, S. H. (1971). The Book of Indian Animals – 3rd Edition.Bombay Natural History Society. Oxford University Press, Bombay, 324pp.
  • Corbet, G.B. & J.E. Hill (1992). Mammals of the Indo-Malayan Region: A Systematic Review. Oxford University Press, Oxford, UK.
  • Van Rompaey, H. & Jayakumar, M. N. (2003). The Stripe-necked Mongoose, Herpestes vitticollis. Small Carnivore Conservation 28: 14–17.
  • Mudappa, D. (2013). Herpestids, viverrids and mustelids, pp. 471–498. In: Johnsingh, A.J.T. & N. Manjrekar (eds.). Mammals of South Asia -1. Universities Press, Hyderabad, India.
  • Menon, V. (2014). Indian Mammals - A Field Guide. Hachette India, Gurgaon, India, 528pp.
  • Sreehari, R. & P.O. Nameer (2016). Small carnivores of Parambikulam Tiger Reserve, southern Western Ghats, India. Journal of Threatened Taxa 8(11): 9306–9315; https://dx.doi.org/10.11609/jott.2311.8.11.9306-9315
  • Nayak, A.K., M.V. Nair & P.P. Mohapatra (2014). Stripe-necked Mongoose Herpestes vitticollis in Odisha, eastern India: A biogeographically significant record. Small Carnivore Conservation 51: 71–73.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டை_கழுத்து_கீரி&oldid=3834265" இலிருந்து மீள்விக்கப்பட்டது