பட்லர் வரையன் பாம்பு

பட்லர் வரையன் பாம்பு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
கொலுபிரிடே
துணைக்குடும்பம்:
கொலும்பிரினே
பேரினம்:
லைகோடான்
இனம்:
லை. பட்லேரி
இருசொற் பெயரீடு
லைகோடான் பட்லேரி
பெளலஞ்சர், 1900

பட்லர் வரையன் பாம்பு (Butler's wolf snake) என்று அழைக்கப்படும் லைகோடான் பட்லேரி (Lycodon butleri), கொலுப்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாம்பு சிற்றினம் ஆகும்.[2] இந்தச் சிற்றினம் தெற்கு தாய்லாந்து மற்றும் தீபகற்ப மலேசியாவினைப் பூர்வீகமாகக் கொண்டவை.[1]

சொற்பிறப்பியல்

தொகு

சிலாங்கூர் மாநில அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளரான இங்கிலாந்து விலங்கியல் நிபுணர் ஆர்தர் லெனாக்சு பட்லரின் பெயரால் லைகோடான் பட்லேரி என இப்பாம்பு பெயரிடப்பட்டது.[2][3]

இனப்பெருக்கம்

தொகு

பட்லர் வரையன் பாம்பு முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடியது.[2]

தொகுதிவரலாறு

தொகு

லைகோடான் பட்லேரி என்பது லைகோடான் பேரினத்தினைச் சார்ந்த ஓர் சிற்றினம். பொதுவாக ஓநாய் பாம்புகள் அல்லது வரையன் பாம்புகள் என்று அழைக்கப்படும் பாம்புகளின் பேரினமாகும்.[4] இந்தப் பேரினம் பாம்பு குடும்பமான கொலுப்ரிடேவைச் சேர்ந்தது. இது மிகப்பெரிய பாம்பு குடும்பமாகும். அந்தாட்டிக்காவைத் தவிர அனைத்துக் கண்டத்திலும் இந்தப் பாம்புச் சிற்றினங்கள் காணப்படுகின்றன.[5]

வாழிடமும் சூழலியலும்

தொகு

லை. பட்லேரி என்பது ஒரு நிலப்பரப்பில் வாழும் சிற்றினமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 1,100 முதல் 1,500 மீ (3,600 முதல் 4,900 ) உயரத்தில் உள்ள மலைப்பாங்கான காடுகளில் காணப்படுகிறது.[1] பகுதி நேரங்களில் மரங்களில் வாழக்கூடியது.[2]

புவியியல் வரம்பு

தொகு

லை. பட்லேரி தெற்கு தாய்லாந்தில் உள்ள கிராபி மாகாணத்திலிருந்தும், மலேசியா தீபகற்பத்திலிருந்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது.[1]

பாதுகாப்பு நிலை

தொகு

2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் அடிப்படையில், பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் லைகோடான் பட்லேரி "தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக" கருதுகிறது. இந்தச் சிற்றினம் பெரிய அளவில் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவில்லை. மேலும் மக்கள்தொகை போக்குகள் குறித்தும் எதுவும் அறியப்படவில்லை.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 species:Larry Lee Grismer; species:Tanya Chan-ard (2012). "Lycodon butleri ". IUCN Red List of Threatened Species 2012: e.T192225A2058052. doi:10.2305/IUCN.UK.2012-1.RLTS.T192225A2058052.en. https://www.iucnredlist.org/species/192225/2058052. பார்த்த நாள்: 20 November 2021. 
  2. 2.0 2.1 2.2 2.3 Hallermann, Jakob; Uetz, Peter. "Lycodon butleri ". The Reptile Database. பார்க்கப்பட்ட நாள் 11 August 2015.
  3. Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. (Lycodon butleri, p. 44).
  4. "Wolf snake". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 13 June 2015.
  5. Bauer, Aaron M. (1998). Cogger, H.G.; Zweifel, R.G. (eds.). Encyclopedia of Reptiles and Amphibians. San Diego: Academic Press. pp. 188–195. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-178560-2.

மேலும் வாசிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்லர்_வரையன்_பாம்பு&oldid=4071909" இலிருந்து மீள்விக்கப்பட்டது