பண்டங்களின் கதை

பண்டங்களின் கதை (The Story of Stuff, த இசுடோரி ஒஃப் இசுடஃப்) என்பது நுகர்வுப் பண்பாட்டை விமர்சிக்கும் ஒரு விபரணப் படம். இத்திரைப்படம் 20 நிமிடம் நீளம் ஓடக்கூடியது. இந்தப் படத்தை அன்னி லெனார்டு என்பவர் விபரணம் செய்தார். இந்தப் படத்தை இணையத்தில் இலவசமாகப் பாக்கலாம். இதனை 4 மில்லியன் நபர்கள் இதுவரை பார்த்துள்ளதாக தளம் தெரிவிக்கிறது.[1][2][3]

பண்டங்களின் கதை
The Story of Stuff
இயக்கம்லூயிஸ் ஃபொக்ஸ்
கதைசொல்லிஅன்னி லெனார்டு
வெளியீடு4 டிசம்பர் 2007
ஓட்டம்20 நிமி
மொழிஆங்கிலம்

உள்ளடக்கம்

தொகு

இப் படம் தற்போதைய மனித பொருளாதாரச் செயற்பாட்டை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கிறது. அவை:

  1. Extraction - பிரித்தெடுத்தல்
  2. Production - உற்பத்தி
  3. Distribution - விநியோகித்தல்
  4. Consumption - நுகர்வு
  5. Disposal - கழிவாக்கல்

இந்த நேரிய செயற்பாடு பேண தாகாதது என்றும். இது திட்டமிட்டு மக்களின் மீது திணிக்கப்பட்டது என்றும் இப்படம் கூறுகிறது. பொருட்களைக் கழிவாக்காமல், ஒரு சுழற்சி முறை பொருளாதரமே பேணத்தகுந்தது என்றும் இப் படம் எடுத்துரைக்கிறது.

இயற்கை வழங்கள் சுரண்டப்படல், சூழல் மாசுறல், மனித விரக்தி ஆகியவை 1950 களின் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட நுகர்வுப் பண்பாட்டால் அதிகரித்து வருகிறது என்கிறது. சில கருத்துரைகள்:

  • அளவுக்குமீறி மீன்பிடித்தால் பெரும்பாலான மீன்பிடி பகுதிகளில் மீன்கள் இல்லை.
  • உற்பத்தி நிறுவனம் கழிவுகளை இலவசமாக சூழலில் விடுவதால் (எ.கா: வேதியியல் கழிவுகள், மாசு வாயுக்கள்), ஒரு பொருளின் உண்மையான உற்பத்திச் செலவு ஈடுசெய்யப்படுவதில்லை (externalized costs).
  • ஒரு கணினியின் micro processor உம் இயங்கு தளமும் பழசாகிவிடும். பயனர்கள் அதை மட்டும் இன்றைப்படுத்தாமல் கணினியை முழுவதுமாக எறிந்துவிட்டு, புதிசு வாங்குகிறார்கள். இது வீண்செலவு, கழிவு.
  • planned obsolescence, perceived obsolescence
  • ஐக்கிய அமெரிக்காவின் 50% வரி வருமானம் படைத்துறைக்கு செலவிடப்படுகிறது.

விமர்சனம்

தொகு
  • இயற்கை வளங்களை திறனாக பயன்படுத்துவதில் தொழில்நுட்பம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில்நுட்பத்தை ஒரு முக்கிய கூறாக இப் படம் கருத்தில் கொள்ளவில்லை.
  • ஒரு பொருளை பெரும் தொகையில் உற்பத்தி செய்யும் பொழுது, அப்பொருளின் விலை குறைகிறது. அது குறைந்த விலைக்கு ஒரு காரணாமக இருக்கலாம். இந்த குறிப்பு பதிவு செய்யப்டவில்லை.
  • வணிக நிறுவனங்களை குற்றவாளிகளாகவும், சமூகத்தை அப்பாவிகளாகவும் சித்தரிக்கிறது.

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Roosevelt, Margot (July 13, 2010). "Teaching 'stuff' about ecology". Los Angeles Times. https://www.latimes.com/archives/la-xpm-2010-jul-13-la-me-story-of-stuff-20100713-story.html. 
  2. "Story Of Stuff". storyofstuff.com. பார்க்கப்பட்ட நாள் 2013-12-29.
  3. "The Story of Stuff". storyofstuff.com. பார்க்கப்பட்ட நாள் 2013-12-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டங்களின்_கதை&oldid=4100339" இலிருந்து மீள்விக்கப்பட்டது