பண்டரிபுரம் எருமை

பண்டரிபுரம் எருமை என்பது இந்தியாவில் மகாராட்டிர மாநிலத்தின் சோலாப்பூர், கோலாப்பூர், சதாரா, சாங்லி மாவட்டம் ஆகிய வறண்ட பகுதிகளில் உருவான ஒரு எருமை இனம் ஆகும்.[1] இதன் பெயர் சோலாபூரின் பண்டரிபுரம் நகரத்திலிருந்து தோன்றியது ஆகும். பண்டரிபுரம் எருமைகளின் கொம்புகள் 45-50 சென்டிமீட்டர் நீளம் கொண்டவையாகும் சில எருமைகளின் கொம்புகள் முறுக்கிய நிலையில் காணப்படும். எருமைகளின் கன்று ஈனும் இடைவெளி 465 நாட்களாக உள்ளது. இவற்றின் பால் உற்பத்தி 1400 கிலோ / 305 நாட்கள் ஆகும். [2]

மேற்கோள்கள்

தொகு
  1. Breed data sheet: Pandharpuri. Domestic Animal Diversity Information System of the Food and Agriculture Organization of the United Nations. Accessed September 2013.
  2. Pandharpuri. Central Institute for Research on Buffaloes. Archived 3 February 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டரிபுரம்_எருமை&oldid=2172030" இலிருந்து மீள்விக்கப்பட்டது