பண்டாரவளை மத்திய கல்லூரி
பண்டாரவளை மத்திய கல்லூரி (Bandarawela Central College) இலங்கையில் மத்திய மலைநாட்டின் பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றாகும். தேசியப் பாடசாலையான இது ஒரு கலவன் பாடசாலையாகும்.
பண்டாரவளை மத்திய கல்லூரி | |
---|---|
அமைவிடம் | |
பண்டாரவளை இலங்கை | |
தகவல் | |
வகை | தேசியப் பாடசாலை |
குறிக்கோள்கள் | Paraththan Patipajjathi |
தொடக்கம் | 1948 |
நிறுவனர் | அமரசேகர |
அதிபர் | எம்.எம். விமலசேகர |
பணிக்குழாம் | 120 |
தரங்கள் | வகுப்புகள் 1 - 13 |
பால் | கலவன் |
வயது | 6 to 19 |
மொத்த சேர்க்கை | 4000 |
நிறங்கள் | |
இணைப்பு | பௌத்தம் |
இணையம் | Bandarawela central college |
இப்பாடசாலை 1948 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. அமரசேகர என்பவரே இப்பாடசாலையை ஆரம்பிப்பதில் முக்கிய பங்களிப்பினை வழங்கினார். கல்வித்துறையில் இப்பாடசாலை தொடர்ச்சியாக பல சாதனைகளை படைத்து வந்துள்ளது. இப்பாடசாலையில் கற்ற பலர் இலங்கையில் சிறந்த கல்விமான்களாகவும், சமூகத்தில் மதிக்கத்தக்கவர்களாகவும் உள்ளனர். இங்கு தரம் 1 - 13 வரை வகுப்புகள் உள்ளன. 4000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
இதன் தற்போதைய அதிபராக எம்.எம். விமலசேகர உள்ளார். இப்பாடசாலையில் போதனை சிங்கள மொழியில் பிரதானமாக அமைந்துள்ளது. ஆங்கிலமொழி வகுப்புகளும் காணப்படுகின்றன.
வெளியிணைப்புக்கள்
தொகு- பண்டாரவளை மத்திய கல்லூரி பரணிடப்பட்டது 2012-02-13 at the வந்தவழி இயந்திரம்